Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

தனுசு செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Dhanusu Rasi Palan 2020

August 11, 2020 | Total Views : 566
Zoom In Zoom Out Print

தனுசு செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம், ஒரு நற்காலமாக அமையும். சோதனைகள் பல வந்தாலும், நீங்கள் சாதனை படைக்கும் நேரம் இது எனலாம். உங்கள் ஆற்றலை நீங்களே புரிந்து கொள்வீர்கள். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. சகோதர, சகோதரிகளாலும் நன்மை விளையலாம். சிலர், புதிய வீடு, சொத்து, வாகனம் வாங்கும் சூழல் உருவாகும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளும் சாதகமாகும். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கக்கூடும். பொருளாதார நிலையிலும் ஏற்ற, இறக்கங்கள் காணப்படலாம். குடும்ப விஷயங்களில் கவனம் தேவை. வீண் பேச்சைத் தவிப்பது நல்லது. ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

புதிய காதல் முயற்சிகள் வெற்றியடையக் கூடும். காதலர்களுக்கிடையே அன்பும், நட்பும் அதிகரிக்கும். ஆனால், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கலாம். தம்பதிகள், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதினால், வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். 

நிதி:

நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்ற, இறக்கங்கள் காணப்படும். எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படலாம். எதிர்பாராத பண இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், பண விஷயங்களில் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எனினும், நீண்ட நாட்களாக உங்களுக்கு வர வேண்டிய பணம், இப்பொழுது கைக்கு வந்து சேரலாம். 

வேலை:

வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உங்கள் பணிகளும், உயரதிகாரிகளால் பாராட்டப்படும். சக ஊழியர்களும் உங்களுக்குச் சாதகமாக இருப்பார்கள். இருப்பினும், மிகவும் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்க்கவும். உங்களைப் பற்றிய விமர்சனங்களையும் கண்டு கொள்ள வேண்டாம். 

தொழில்:

தொழிலில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் செயல்பாடுகள், புதிய நம்பிக்கையை விதைக்கும். புதிய வாய்ப்புக்களும் உங்களைத் தேடி வரக்கூடும். உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கு, நீங்கள் பாத்திரமாவீர்கள். உங்களை நம்பி புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படலாம். 

தொழில் வல்லுநர்கள்:

தனுசு ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது பொற்காலம் எனலாம். இப்பொழுது நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கக் கூடும். உங்கள் தொழில் நுட்ப அறிவைப் புதிய வகையில் பயன்படுத்தி, நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்கள் வியக்கும் வண்ணம், பல புதுமைகளும் நீங்கள் புகுத்தும் வாய்ப்புள்ளது. உங்கள் துறையின் மீதான, உங்களது ஆளுமை, இந்த நேரம் நன்கு வெளிப்படலாம்.

ஆரோக்கியம்:

உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதைகள் பலவற்றிற்கும் கூட, இப்பொழுது தீர்வு கிடைக்கலாம். எனினும் சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் வந்து நீங்கக்கூடும். அதிகக் காரம் அல்லது உஷ்ணமான உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. 

மாணவர்கள்:

இந்த மாதம் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். உங்கள் அறிவுத் திறனும், நினைவாற்றலும் மேம்படக்கூடும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாழ்வை முன்னேற்றக் கூடிய நல்ல குரு ஒருவர், உங்களில் சிலருக்குக் கிடைக்கலாம். இப்பொழுது, கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டிலும் நீங்கள் பங்கு பெறக்கூடும். 

சுப தினங்கள் : 2,4,5,6,7,8,9,12,13,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 1,3,10,11, 14,15,16,17,18,20,24,25,30

பரிகாரம்:

  • பகவான் ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மர் மற்றும் குரு பகவான் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல். 
  • சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல். 
  • ஏழை பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்தல். பசுவுக்கு அகத்திக் கீரை அளித்தல். 
banner

Leave a Reply

Submit Comment