AstroVed Menu
AstroVed
search
search

துலாம் செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Thulam Rasi Palan 2020

dateAugust 11, 2020

துலாம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களுக்கு, இது நன்மைகள் விளையும் மாதமாக அமையும். தன வரவு தாராளமாக இருக்கும். தொழில் துறையில் நீங்கள் அதிக லாபங்களைப் பெறலாம். எனினும் இடையிடையே, தொழில் சற்றே மந்தமாகவும் இருக்கக் கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் ஏற்படலாம். சிலருக்குத் தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையலாம். அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வருவதற்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். எனவே இல்லறம் இனிக்கும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். அவருடனான கருத்து வேறுபாடுகளும் நீங்கக்கூடும். சிலர், வெளியிடங்களுக்கு உல்லாசப் பயணங்கள் செல்லக்கூடும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படலாம். எனினும், காதல் விவகாரங்களை இந்த மாதம் தள்ளிப் போடுவது நல்லது. ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். அவருடன் நீங்கள், நேரத்தை இனிமையாகச் செலவிட்டு மகிழ்வீர்கள். ஆனால், உங்களில் சிலரது தவறான அணுகுமுறை காரணமாக, திருமணத்துக்கான சில நல்ல வரன்களை நீங்கள் இழக்க நேரிடலாம். எச்சரிக்கை தேவை.  

நிதி:

நிதிநிலை சிறப்பாக இருக்கும். தேவைப்படும் நேரத்தில் நண்பர்களிடமிருந்தும் நீங்கள் நிதி உதவி பெற முடியும். இப்பொழுது உங்கள் செலவினங்களைக் கவனமாகத் திட்டமிடுவது அவசியம். மற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலம், உங்கள் கடன்களையும், உங்களால் தீர்த்துவிட முடியும். 

வேலை:

பணியில் இருப்பவர்களுக்கு இது, சிறந்த முன்னேற்றமான காலமாக இருக்கும் எனலாம். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் பணி அமையும். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரக்கூடும். 

தொழில்:

இந்த மாதம், உங்கள் தொழில் முன்னேற்றம், பொதுவாக, உங்கள் திறமையைச் சார்ந்தே அமையும். உங்கள் விடாமுயற்சி, உங்கள் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இப்பொழுது நீங்கள் பல தடைகளைக் கடந்து வெற்றி பெறக்கூடும். இதன் மூலம் உங்கள் தனித்தன்மையும் வெளிப்படும்.

தொழில் வல்லுநர்கள்:

துலா ராசி தொழில் வல்லுநர்கள், இந்தக் காலகட்டத்தில், பல சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். இதன் மூலம், உங்கள் எதிர்பார்ப்புக்களையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்கள் வேலையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாகப் பணியாற்ற உதவும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களைத் தீட்டுவதும், நன்மை தரும். 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். சிலருக்குப் பதட்டம் காரணமாகக், கால் மூட்டுக்களில் வலி ஏற்படலாம். இந்த நேரத்தில், நீங்கள் ஒரு கண்டிப்பான உணவுக் கட்டுப்பாட்டைப் பராமரிப்பது அவசியம். ஆரோக்கியத்தைப் பேண, அவ்வப்பொழுது, தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுவதும் நல்லது. 

மாணவர்கள்:

கல்வியில் கடும் முயற்சிக்குப் பின்னரே, மாணவர்களுக்குப் பலன் கிடைக்கக்கூடும். நீங்கள் நடைமுறையில் பாடங்களை நன்கு தெரிந்து கொள்வீர்கள். இருப்பினும், அதை உரிய முறையில் வெளிப்படுத்தத் திணறக்கூடும். இந்த நேரத்தில், தகவல் பரிமாற்றம், ஒருமித்த கவனம் மற்றும் கூடுதல் நேரம் எடுத்துப் படிப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது, உங்கள் கல்வி முயற்சிகளுக்கு நன்மை தரும்.

சுப தினங்கள் : 6,7,10,11,24,25
அசுப தினங்கள் : 4,5,12,13,26,27,28

பரிகாரம்:

  • அன்னை ஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
  • பசு மற்றும் கால்நடைகளுக்கு உணவு அளித்தல். பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்து, அவர்கள் ஆசீர்வாதம் பெறுதல்.

banner

Leave a Reply