Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

September Matha Rishabam Rasi Palan 2020

August 10, 2020 | Total Views : 650
Zoom In Zoom Out Print

ரிஷபம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களுக்கு, இது ஒரு சராசரியான மாதமாக இருக்கக்கூடும். உங்கள் தன வரவு சுமாராக இருக்கும். சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் மனநிம்மதி இல்லாமலும் போகலாம். உங்களின் சில செயல்களின் காரணமாக, மற்றவர்கள் உங்களுக்கு எதிரிகளாகவும் மாறக்கூடும். எச்சரிக்கை தேவை. வெளியூர்ப் பயணங்களினால், நீங்கள் அதிக செலவு செய்ய நேரிடலாம். எனினும், உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் நன்றாகப் படிப்பதும், உங்களுக்கு ஆனந்தம் தரும். செய்யும் தொழிலில் லாபம் உண்டாகும். காரியத் தடங்கல்கள் ஏற்பட்டு விலகும். சிலருக்குப் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தந்தையாரின் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைப்பதற்கும் இடமுள்ளது. உங்களில் சிலர், ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்ளலாம்.ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள். 

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

பொதுவாக, உங்கள் துணையுடனான உங்களது அன்பான உறவு, நல்ல முறையில் தொடரும். ஆனால், காதல் வாழ்க்கையில் பிரிவினைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே கவனம் தேவை. எனினும், வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு நன்றாக  இருக்கும். இந்த நேரத்தில், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது.  

நிதி:

இது ஒரு சுமாரான காலம் எனலாம். எனினும், பொருளாதார ரீதியாக இது உங்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி தருவதாகவே அமையும். உங்கள் வருமானம், உங்களது அனைத்துப் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். இப்பொழுது, உங்கள் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, நீங்கள் முன்னுரிமை அளிப்பீர்கள். 

வேலை:

உங்கள் பணிகள் உங்களுக்கு, அங்கீகாரம் மற்றும் திருப்தியான மனநிலையைப் பெற்றுத் தரும். வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கு, இது உகந்த நேரம் ஆகும். உங்கள் பணிகளில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு, அலுவலகத்தில் நீங்கள் உரிய அங்கீகாரம் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

தொழில்:

வியாபாரத்தைப் பொறுத்த வரையில், உங்களுக்கு இது சுமாரான காலம் எனலாம். இந்த நேரத்தில், நீங்கள், குறைந்த பட்ச முயற்சிகளைச் செய்துவிட்டு, அதிக பலன்களை எதிர்பார்க்க முடியாது. இந்த ஆண்டு முழுவதுமே, தொழில் தொடர்பாக, நீங்கள் எந்தவொரு அவசர முடிவும் எடுக்காமல் இருப்பது நல்லது. 
தொழில் வல்லுநர்கள்.

ரிஷப ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள், இந்த மாதம், சிறப்பாகவே அமையும். தளராமல், உங்கள் முயற்சிகளைத் தொடர்வதன் மூலம். எதிர்பார்த்த பலன்களை நீங்கள் அடையலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, சிறப்பாகப் பணியாற்ற உதவும்.  

ஆரோக்கியம்:

உங்கள் உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பது அவசியம். தவறாமல் தியானம் செய்வது, உங்களை ஆரோக்கியமாக  வைத்து கொள்ள உதவும். உடலுக்குத் தேவையான ஒய்வு கொடுப்பதும், உங்கள் உடல் நலத்தைக் காத்து, நன்மை பயக்கும்.

மாணவர்கள்:

கல்வி முயற்சிகளுக்கு, இது, முன்னேற்றமான மாதமாக இருக்கும். மாணவர்களாகிய நீங்கள் நல்ல அறிவாற்றலுடன் செயல்படுவீர்கள். படிப்பில் உங்கள் கடின முயற்சி காரணமாக நல்ல நிலையை அடைவீர்கள். இந்த நேரத்தில், படிப்பு மற்றும் விளையாட்டு என்ற இரண்டு துறைகளிலும் நீங்கள் சாதனை படைக்கும் வாய்ப்புள்ளது.

சுப தினங்கள்  : 1,4,5,6,18,19,27,28
அசுப தினங்கள் : 2,7,8,20,21,24,25,26.

பரிகாரம்:

  • பகவான் ஸ்ரீ லக்ஷ்மீ நரசிம்மர் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • சுக்கிரன், சனி, குரு, ராகு, கேது முதலிய கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
  • வாழும் சித்தர்களைத் தரிசனம் செய்தல். கோவில் திருப்பணி செய்தல். நாய்க்கு உணவு அளித்தல்.
banner

Leave a Reply

Submit Comment