AstroVed Menu
AstroVed
search
search

மேஷம் செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Mesham Rasi Palan 2020

dateAugust 11, 2020

மேஷம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் செல்வாக்கு, கெளரவம், புகழ் அனைத்தும் மேலோங்கி இருக்கும். ஆனால், வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். சக ஊழியர்களுடன் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிப்பதும் அவசியம். இது போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனினும் தொழில் துறையில் நீங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுவீர்கள் எனலாம். பணவரவும் மிக நன்றாக இருக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் கைகூடும். செய்தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். பொதுவாக ஜீவனம் நன்றாக நடைபெறும். குடும்பத்திலும் நல்ல சந்தோஷம் நிலவும். குறிப்பாக, பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குப் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகமாகும். எனினும், இந்த நேரத்தில் உடன் பிறந்தவர்களிடம் கவனமாக இருப்பது அவசியம்.ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள். 

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

இது, காதல் உறவுகளுக்கு உகந்த காலம் எனலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலவக்கூடும். காதலர்களுக்கும் அவர்கள் விரும்பும், நல்ல பலன்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையேயும், அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும். எனினும், திருமணம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.  

மேஷம் செப்டம்பர் மாத நிதி:

நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வாசனை திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களின் மூலம் நீங்கள் அதிக லாபம் பெறலாம். பொதுவாக, உங்கள் பொருளாதாரத்  தேவைகள் அனைத்தும், இப்பொழுது சிறப்பாக நிறைவேறக் கூடும். எனினும், வாழ்க்கைத் துணையின் மூலமாக ஏற்படும் தனவரவில், சில மனக்கசப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

மேஷம் செப்டம்பர் மாத வேலை:

இந்தக் காலகட்டத்தில், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விடும் எண்ணம் தோன்றலாம். ஆயினும், இந்த விஷயத்தில் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். உங்களது பணிகளை, கவனமாகச் செய்து முடிப்பதும் அவசியம். எனினும், பணியிடத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரக்கூடும். 

மேஷம் செப்டம்பர் மாத தொழில்:

இந்த நேரத்தில், தொழிலில், சிறு பிரச்சனைகள் வந்து விலகக்கூடும். ஆயினும் தொழில் நன்றாகவே நடைபெறும் எனலாம். ஆனால், சில நேரங்களில் நீங்களே உங்களுக்கு நஷ்டத்தை வரவழைத்துக் கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையாகச் செயல்படவும். சனிக்கிழமைகளில் வயதானவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது, உங்கள் தொழிலை மேம்படுத்தும். 

மேஷம் செப்டம்பர் மாத தொழில் வல்லுநர்கள்:

மேஷ ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது, ஒரு முன்னேற்றம் தரும் காலமாக இருக்கும். வேலையில் உங்கள் கவனமும், அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டுகளைப் பெற்றுத்தரும். இது உங்களுக்கு, ஒரு நல்ல பணிச் சூழலை உருவாக்கித் தரும். அலுவலகத்தில் சக பணியாளர்களுடன்  நட்புடன் நடந்து கொள்வது நன்மை தரும். 

மேஷம் செப்டம்பர் மாத ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். முன்பே உங்கள் உடலில் ஏதேனும் பாதிப்பு இருந்தாலும் கூட, இந்த மாதம் நீங்கள் பூரண உடல் நலம் பெறும் வாய்ப்புள்ளது. எனினும், சிலருக்கு நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வந்து விலகலாம். பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் சத்தான உணவுகள் போன்றவற்றை உட்கொள்வது, நல்ல ஆரோக்கியம் தரும்.  

மேஷம் செப்டம்பர் மாத மாணவர்கள்:

இந்த மாதம், மாணவர்களுக்குக் கல்வியில் அதிக கவனம் தேவை. படிப்பதை சிலர் மறந்து விடுவீர்கள். உங்கள் உடல் நிலையிலும் கவனம் தேவை. எனினும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். இவற்றை கவனத்தில் கொண்டு உழைத்துப் படித்தால், இந்தக் காலகட்டத்திலும் உங்கள் படிப்பு சீரான போக்கில் செல்லும். 

சுப தினங்கள் : 2,3,16,17,24,25,26,29,30
அசுப தினங்கள் : 4,5,6,18,19,22,23

பரிகாரம்:

  • ஸ்ரீ முருக பெருமான் மட்டும் ஸ்ரீ ஆதிஷேசன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • செவ்வாய், சனி, குரு, ராகு, கேது முதலிய கிரக மூர்த்திகளுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
  • பழைமையான சில ஆலயங்களுக்குப் புனித யாத்திரை செல்லுதல். கோவில்களுக்குத் திருப்பணி செய்தல். புற்றுக்குப் பால் வார்த்தல்.

banner

Leave a Reply