மிதுனம் செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Mithunam Rasi Palan 2020

மிதுனம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:
மிதுன ராசி அன்பர்களே! பொதுவாக, இது உங்களுக்கு நன்மைகள் அளிக்கும் மாதமாக இல்லாமல் போகலாம். இப்பொழுது உங்கள் உடல் நலனில் சிறப்பு கவனம் தேவைப்படலாம். பணம் தொடர்பான விவகாரங்களில் மற்றவர்களிடம் மனக்கசப்பு ஏற்படலாம். எதிரிகளால் தொல்லை விளையலாம். எந்த ஒரு செயலிலும், தொழிலிலும் நீங்கள் தெளிவு இல்லாமல் காணப்படலாம். பொதுவாக, பலவிதக் குழப்பங்களும் ஏற்படலாம். சிலர் பலவீனத்தாலும் பாதிக்கப்படலாம். எனவே, உடல் நிலையுடன் கூட, உங்கள் மன நிலையிலும் இப்பொழுது அக்கறை தேவைப்படலாம். இருப்பினும், இவை அனைத்தையும் நீங்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். தற்போது குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றாலும், அதுபோல உங்கள் வருமானம் அல்லது லாபமும் அதிகரிக்கக் கூடும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும். உங்கள் குடும்ப விஷயங்களை மென்மையாக அணுகுவது நலம் தரும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதலுக்கு இது சுமாரான காலமாகும். இருப்பினும், சிலருக்குப் புதிய காதல் தொடர்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில், உங்கள் வாழ்க்கைத் துணையோடு உங்கள் உறவுகளில் பாதிப்பு இருக்கக் கூடும். எனினும், உங்கள் சமூகத் தொடர்புகள் சிறப்பாக இருக்கும். சிலர், சிறு பயணங்கள் செல்லக்கூடும்.
நிதி:
நிதிநிலை, தற்காலிகமாக, மந்தமாக இருக்கக் கூடும். எனினும், இந்த நேரத்தில் உங்கள் பொருளாதாரத் தேவைகள் அனைத்தும், சுமாராக நிறைவேறிவிடும். சிலர், நண்பர்களுடனான பொழுது போக்குகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். இருப்பினும், பணம் தொடர்பான எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பும், ஒரு முறைக்கு இரண்டு முறை யோசிப்பது நல்லது.
வேலை:
வேலையில் நீங்கள் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். எனவே இது உங்கள் வளர்ச்சிக்கான காலமாக இருக்கக்கூடும். புதிய தொழில் நுட்பங்களால் நீங்கள் நல்ல அனுபவம் பெறும் வாய்ப்பு உருவாகும். உங்கள் கடின முயற்சிகளின் மூலம், உங்களது அனைத்து எதிர்பார்ப்புகளையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
தொழில்:
தொழில் துறையில், தற்போதுள்ள பணிகளில் நீங்கள் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் தொழில் கூட்டாளிகள், சில பணிகளை நிலுவையில் வைத்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது. மேலும், சில வியாபார நடவடிக்கைகளையும் இப்பொழுது நீங்கள் ஒத்திப்போட வேண்டியிருக்கலாம். தொழில் ஒப்பந்தங்கள் வழியாகவும், இப்பொழுது நீங்கள் சாதகமான பலன் காண இயலாமல் போகலாம். எனவே, மிகுந்த எச்சரிக்கை தேவைப்படும் காலம் இது.
தொழில் வல்லுநர்கள்:
இந்த மாதம், மிதுன ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களை நீங்கள் தீட்டுவது, நன்மை பயக்கும். உங்கள் பணிகளைத் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வது, உங்களது திறமைகளை நன்கு வெளிப்படுத்தி, சிறப்பாகச் செயலாற்ற உதவும்.
ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கக் கூடும். உங்களில் சிலர், குறிப்பாக, வாதம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படலாம். எனவே, உடல் நலத்தில் எந்தவித அலட்சியமும் காட்டாமல், அதில் முழு அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.
மாணவர்கள்:
படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும், இது சரியான நேரம் எனலாம். உங்கள் திறந்த மனதும், பரந்த மனப்பான்மையும், உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் கல்வித் திறனால் பெற்றோர்களும் மன மகிழ்ச்சியடைவார்கள்.
சுப தினங்கள் : 2,3,7,8,20,21,29,30.
அசுப தினங்கள் : 1,9,10,11,22,23,27,28
பரிகாரம்:
- ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ஆதிஷேசன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- புதன், சனி, குரு, ராகு, கேது ஆகிய கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
- ஏழை எளியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்குதல் மற்றும் உதவி செய்தல். ரத்த தானம் செய்தல்.
