Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

பரசுராமர் கதை | Parshuram Story In Tamil

June 5, 2020 | Total Views : 5,519
Zoom In Zoom Out Print

பரசுராமர்:

விஷ்ணுவின் பத்து அவதாரங்களை இணைத்து ‘தசாவதராம்’ என்று அழைக்கப்படுகின்றன. அநீதி மற்றும் அதர்மத்தின் பிடியில் மனிதன் தன்னை இழக்கும்போது, மனிதர்களுக்கு  சரியான பாதையைக் காட்ட விஷ்ணு அவதாரம் நிகழும். பத்து அவதாரங்களில் பரசுராம அவதாரமும் ஒன்று ஆகும். இது திருமாலின் ஆறாவது அவதாரம் ஆகும். இவர் ஜமதக்னி என்ற முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் பிறந்த தவப் புதல்வர் ஆவார். கடுந் தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து பரசு என்ற கோடாலியைப் பெற்ற காரணத்தால் இவர் பரசுராமர் என்று அழைக்கப்பட்டார்.   

பரசுராமரின் பராக்கிரம வரலாறு:

\கார்த்தவீரியன் என்ற அரசன்  ஒரு  நாள் தனது படையுடன் வேட்டைக்குச் சென்றான்.  வேட்டையை முடித்து களைத்துப் போன கார்த்தவீரியன், தந்து அரசவைக்குத் திரும்பும்  வழியில் ஜமதக்னி முனிவரின்  ஆசிரமத்திற்கு வந்தார். முனிவரும் கார்த்தவீரியனுக்கு அறுசுவை உணவு மற்றும் பானங்களை  அளித்து இளைப்பாற வசதிகளும் செய்து கொடுத்தார். கார்த்தவீரியனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு முனிவரின் ஆசிரமத்தில் இந்த அளவு வசதியும் செல்வமும் எப்படி இருக்கும் என்று மனதில் தோன்றிய தனது சந்தேகத்தை கார்த்தவீரியன் ஜமதக்னி முனிவரிடம்  கேட்டான்.   அதற்கு ஜமதக்னி முனிவர் தான் ஒரு தேவலோகப் பசு ஒன்றை வைத்திருப்பதாகவும், அதன் பெயர் காமதேனு என்றும், அது  கேட்டத்தைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது என்றும் கூறினார். அதனை தனக்கு பரிசாக அளிக்கும் படி கார்த்தவீரியன் கேட்க ஜமதக்னி முனிவர் மறுத்து விட்டார். அனால் கார்த்தவீரியன் அந்தப் பசுவை அடைந்தே தீர வேண்டும் என நினைத்தான். எனவே முனிவருக்கு தெரியாமல் ஆசிரம்த்தில் யாரும் அற்ற நேரத்தில்  தனது சேவர்கள் மூலம் அதனை கவர்ந்து சென்று விட்டான். பரசுராமர் மகிமைகள் பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்.

இதனால் வருத்தமுற்ற ஜமதக்னி முனிவர், தனது மகனாகிய பரசுராமரிடம் நடந்ததைக் கூறினார். கோபம் கொண்ட பரசுராமர், கார்த்தவீரியனுடன் சண்டையிட்டு  அவர் தலையைக் கொய்து விட்டார். பிறகு அங்கிருந்து காமதேனுப் பசுவைத் திரும்ப மீட்டு தனது தந்தையிடம் ஒப்படைத்தான்.  

இதனைக் கேள்வியுற்ற ஜமதக்னி முனிவர், ஒருவர் செய்த தவறை மன்னிப்பது தானே முறை. நீ காரணமே இல்லாமல் ஒரு அரசனை கொன்று விட்டாயே. அதற்கு பிராயச்சித்தமாக நீ புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள் என்று கூறினார். தந்தையின்  அறிவுரை கேட்டு அவனும் தீரத்த யாத்திரை மேற்கொண்டார்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை:

தந்தையின் வாக்கைக் காப்பாற்ற தசரதராமனின் அவதாரம் என்றால், தந்தை சொல்லை விடவும் சிறந்த மந்திரம் இல்லை என்பதை உலகத்துக்கு உணர்த்துவதற்காக எடுத்த அவதாரம் ஸ்ரீபரசுராம அவதாரம்.தனது கணவனாகிய ஜமதக்னி முனிவரின் பூஜை காரியங்களுக்கு ரேணுகா தேவி ஆற்றிலிருந்து நீர் கொணர்ந்து தருவது வழக்கம்.   ரேணுகா தேவி கற்பு நெறி தவறாதவள். ஆற்றங்கரைக்சென்று மணல் மூலம் பானை போல செய்தால் அவளது கற்பின் நெறி காரணமாக அந்தப் பானையில் நீர் நிற்கும்.  அவ்வாறு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார்.இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 

க்ஷத்ரிய வம்சத்தின் அழிவு:


கார்த்தவீரியனை பரசுராமன் கொன்றதால், கார்த்தவீரியன் புதல்வர்கள், முனிவரையும் கார்த்தவீரியனையும் பழி வாங்க துடித்தார்கள். ஒரு நாள் ஜமதக்னி முனிவரும் ரேணுகா தேவியும் ஆசிரமத்தில் இருந்த போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர்.  முனிவர் தவ நிலையில் இருந்தார்.  அவர் தலையை வெட்ட வீரன் ஒருவன் வாளை ஓங்கினான். ரேணுகா தேவி அவர்களை தடுத்தாள்.  ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். குடிலுக்கு வந்த பரசுராமர் தாயின் மூலம் நடந்ததை அறிந்து கொண்டார்.  அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார்.  பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குருக்ஷேத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.

    
ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், ராமரை ஆசிர்வதித்துவிட்டுச் செல்கிறார்.


மகாபாரதத்தில் பரசுராமர்:


பரசுராமர் கர்ணனுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே பரசுராமருக்கு பிடிக்காது. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய தொடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே வேதனை. அவன் தொடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். நடந்ததைப் பார்த்து, ''வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு'' என்று வார்த்தைகளில் சினம் பொங்கக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குருக்ஷேத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான்.


கோயில்கள்:

பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். கேரளா பரசுராம் க்ஷேத்திரம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த 8பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர்
 

banner

Leave a Reply

Submit Comment