Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

October Monthly Virgo Rasi Palangal 2019 Tamil

September 12, 2019 | Total Views : 2,163
Zoom In Zoom Out Print

கன்னி ராசி - பொதுப்பலன்கள்

கன்னி ராசி அன்பர்களே! இது, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உகந்த மாதம் எனலாம். சொந்த வாழ்க்கையிலும், தொழிலிலும், சில முக்கிய முடிவுகளை இப்பொழுது நீங்கள் எடுக்க நேரிடலாம். வேலையைப் பொறுத்தவறை, உங்கள் தைரியமான அணுகுமுறை, சவாலான பணிகளில் உங்களுக்கு வெற்றி தேடித் தரும். தன்னம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும், நீங்கள் துல்லிய முடிவுகளை எடுக்கத் துணை புரியும். குடும்ப வாழ்க்கையில் அன்பும், பாசமும் நிறைந்திருக்கும். எனினும் குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை, தகவல் பரிமாற்றம் போன்றவற்றில், நீங்கள் வெளிப்படைத் தன்மையோடு இருப்பது அவசியம். இது, சில நேரங்களில் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். உங்களில் சிலர் ஆடம்பர வாழ்க்கை நடத்த முயற்சிக்கலாம். இதனால் உங்கள் செலவு அதிகரிக்கக் கூடும். பணம் சேமிப்பது என்பது உங்களது கட்டாயத் தேவை என்பதை நினைவில் கொள்ளவும். இந்தக் காலகட்டத்தில், வாழ்க்கையில் சில சாகசங்களைக் கூட நீங்கள் நிகழ்த்திக் காட்டலாம். ஆரோக்கியம் மகிழ்ச்சி தரும்.  

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

கன்னி ராசி - காதல் / திருமணம்

காதல் உறவுகள் மிதமாக இருக்கும். உங்கள் துணை, தன் காதலை உங்களிடம், தெளிவாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், அப்பொழுது உங்களது பேச்சு அல்லது நடத்தை, அவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனவே எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணையின் மீது நீங்கள் செலுத்தும் அன்பும், அக்கறையும், அவரது நல்ல ஆதரவைப் பெற்றுத் தரும்; உங்கள் அன்றாட வாழ்க்கையில் இனிமையைக் கூட்டும். திருமண வரன் தேடலில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை

கன்னி ராசி - நிதி

நிதி நிலை சிறந்து விளங்கும். உங்கள் திறமையால், செல்வம் ஈட்டும் பல வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். திட்டமிடப்படி, சில முதலீடுகளையும் செய்வீர்கள். கடந்த காலத்தில் உங்களுக்குக் கை கொடுத்த நண்பர்களுக்கு, இந்த நேரத்தில் நீங்கள் நிதி உதவியும் செய்வீர்கள். ஆனால், நிதி பரிமாற்றங்களில் வங்கியுடன் உங்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உஷாராக இருக்கவும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சூரியன் பூஜை

கன்னி ராசி - வேலை

வேலை திருப்தி அளிக்கும். உங்கள் பணி தொடர்பாக அலுவலகக் குழு ஒன்றின் உறுப்பினராக, வெளிநாடு செல்லும் நல்ல வாய்ப்பு, சிலருக்குக் கிடைக்கும். இதை நீங்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்வது, உங்கள் முன்னேற்றத்திற்குப் பல வகையிலும் துணை புரியும். ஆனால், சில நேரங்களில் உங்கள் அணுகுமுறை, சக ஊழியர்களை மிகவும் பாதிக்கலாம். எனவே, இதைக் கருத்தில் கொண்டு செயலாற்றவும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன்  பூஜை 

கன்னி ராசி - தொழில்

வணிக வளர்ச்சி நன்றாக இருக்கும். சில தாமதங்களுக்குப் பிறகு, நீங்கள் விரும்பிய பலன்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேவையை நிறைவேற்ற, கூடுதல் பணிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். பணிச்சுமை காரணமாக, நிலுவையிலுள்ள சில வேலைகளை, நீங்கள் கையாள முடியாமல் போகலாம். இவற்றை செய்து முடிப்பதற்காகவும், தொழில் கூட்டாளிகளுக்காகவும், நீங்கள் நேரம் ஒதுக்குவது அவசியம். 

கன்னி ராசி - தொழில் வல்லுநர்

கன்னி ராசி தொழில் வல்லுனர்களின் தகவல் தொடர்புத் திறன் சிறந்து விளங்கும். பணிகளை நன்கு திட்டமிட்டு நிறைவேற்றுவதில் நீங்கள் காட்டும் திறமை, உங்கள் முக்கியத்துவத்தை மேம்படுத்தும்; உரிய அங்கீகாரமும் பெற்றுத் தரும். உடன் பணியாற்றுபவர்களின் திறமை வெளிப்படவும், குழு உறுப்பினராக அவர்கள் நன்கு செயல்படவும், நீங்கள் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவது அவசியம். 

கன்னி ராசி - ஆரோக்கியம்

இப்பொழுது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். ஆற்றலும், உற்சாகமும் மேம்படும். இதுவரை தீர்வுகாண முடியாத, உடல்நிலை குறித்த சில பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால் மன அழுத்தம் இல்லாத, நிம்மதியான வாழ்க்கையையும் நீங்கள் அனுபவிக்க முடியும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

 
கன்னி ராசி - மாணவர்கள்

மாணவர்களுக்கு இது ஒரு சீரான மாதமாகும். பாடங்களை கவனத்துடன் கற்றால், உங்களால் அவற்றை, உரிய நேரத்தில் முறைப்படி படித்து முடிக்க முடியும். உங்களில் பலர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். ஆனால், இது உங்கள் நடவடிக்கைகளை சற்றே மந்தமாகச் செய்து விடலாம். எனவே எச்சரிக்கையாக இருக்கவும்.   

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,19,20,21,24,25,26,30

அசுப தினங்கள்:  2,6,7,12,14,15,16,17,18,22,23,27,28,29,31

banner

Leave a Reply

Submit Comment