Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

October Monthly Libra Rasi Palangal 2019 Tamil

September 12, 2019 | Total Views : 2,378
Zoom In Zoom Out Print

துலாம் ராசி - பொதுப்பலன்கள்

துலாம் ராசி அன்பர்களுக்கு, இது ஒரு மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். உங்களது கடந்த கால முயற்சிகளுக்கு, இப்பொழுது நல்ல பலன் கிடைக்கும். பிறரை மதித்தும், அனுசரித்தும் போகும் உங்கள் குணம், பணியிடத்தில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்களிடம், நேர்மறை எண்ணங்கள் குறிப்பிடத்தக்க வகைகளில் அதிகரிக்கும் சமூக சேவை செய்வதில் நீங்கள் காட்டும் ஆர்வமும், பங்களிப்பும், சமூக வட்டத்தில் உங்கள் புகழை அதிகரிக்கச் செய்யும். இந்த மாதம், நீங்கள் அதிக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், உங்கள் தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இது அதிக பட்சமாக இருக்கக் கூடும். உங்கள் ஆன்மீக ஆர்வம், அளவில்லாத மனநிறைவை உங்களுக்குத் தரும். சிலர், பல புனித யாத்திரை செல்லக்கூடும். ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

துலாம் ராசி - காதல்/திருமணம்

காதல் உறவில் குழப்பங்கள் ஏற்படலாம். பிறரிடமிருந்து பெறப்படும் சில தவறான தகவல்கள், இதற்குக் காரணமாக அமையக்கூடும். எனவே, எந்தப் பிரச்சினை எழுந்தாலும், அவற்றைப் பற்றி, உங்கள் துணையுடன் நீங்கள் நேரடியாக, மனம் விட்டுப் பேசுவது அவசியம். இது உங்கள் காதல் வாழ்க்கையை சீராக்கி, மேம்படுத்தும். மற்றபடி, உங்கள் அன்றாட வாழ்க்கை அமைதியாகச் செல்லும். வாழ்க்கைத் துணையுடனும், குடும்பத்தினருடனும், மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையைத் தேடுவதற்கு, அதிக முயற்சிகள் செய்வது, பலன் தரும்.  

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை

துலாம் ராசி - நிதி

நிதி நிலை நன்கு முன்னேற்றம் அடையும். சந்தை முதலீடுகள் லாபகரமாக இருக்கும். உங்களில் சிலர், ஆச்சரியகரமான வகையில் லாட்டரிகளில் பணம் வெல்லும் வாய்ப்பும் உள்ளது. மூதாதையர்களின் சொத்து அல்லது அதன் மூலம் செல்வம் வந்து சேரலாம்.. ஆனால், இந்த நேரத்தில் அதிகரிக்கக் கூடிய  செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: செவ்வாய்  பூஜை

துலாம் ராசி - வேலை

பணித்துறையில் எழும் சவால்களை, நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள். உங்கள் அறிவுத் திறனும்,. கடின உழைப்பும், உங்களுக்கு ஆதரவு தரும். சக ஊழியர்களுக்கும் நீங்கள் உதவிக்கரம் நீட்டுவீர்கள். நிறுவன இலக்குகளை அடைவதற்கு, நீங்கள், நேர்மையுடனும், முழு நம்பிக்கையுடனும் உழைப்பீர்கள்.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன்  பூஜை 

துலாம் ராசி - தொழில்

தொழில்துறையில் நல்ல நடவடிக்கைகள் பலவற்றை, நீங்கள் மேற்கொள்வீர்கள். இதற்கு உரிய ஊக்கமும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் முயற்சியினால், வெளிநாட்டிலிருந்து ஒரு திட்டத்தையும் பெறும் வாய்ப்புள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுடன் தொழிலில் ஈடுபடும் சாத்தியமும் உள்ளது. இவற்றுக்குத் தேவையான ஆதரவும், வாய்ப்புகளும் உங்களுக்குக் கிடைக்கும். குறித்த நேரத்தில் பணிகளைச் செய்து முடிப்பதற்காக, தேவையான ஊழியர்களை, இப்பொழுது நீங்கள் வேலையில் அமர்த்துவது அவசியம்.  

துலாம் ராசி - தொழில் வல்லுநர்

இலக்குகளை நீங்கள் எளிதாகவே எட்டுவீர்கள். உங்களுக்கு உள்ள நல்ல அனுபவம் காரணமாக, சில நிறுவனங்கள் அல்லது அமைப்புகளுக்கு ஆலோசகராகப் பணியாற்றும் வாய்ப்பு, உங்களுக்குக் கிடைக்கலாம். இதை ஏற்றுக் கொள்வது நலம் பயக்கும். மேலதிகாரிகளின் ஆதரவுடன், வேறு சில முக்கிய வாய்ப்புகளும், உங்களுக்குக் கிடைக்கக் கூடும். 

துலாம் ராசி - ஆரோக்கியம்

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக் கூடும். இது, உடல்நிலை குறித்த சிறு பிரச்சினைகளிலிருந்து விரைவான நிவாரணம் அளிக்கும். நீரிழிவு நோயும், கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நேரத்தில், மருத்துவர் பரிந்துரைத்த உணவை உட்கொள்வது நன்மை தரும். .நல்ல ஆரோக்கியத்துடன், காலம், அமைதியாகக் கழியும்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

துலாம் ராசி - மாணவர்கள்

துலாம் ராசி மாணவர்களுக்கு, இது சராசரியான மாதமாக இருக்கும். அதீத நம்பிக்கை காரணமாக நீங்கள் சில தவறுகளைச் செய்யலாம். பாடம் தொடர்பான சில குழப்பங்களால், உங்கள் உயர்கல்வி பாதிக்கப்படலாம். எனவே, பாடங்களை சரியாகப் படித்து முடிப்பதற்கு, நீங்கள் கூடுதல் நேரம் செலவிடுவது அவசியம்.  ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதும் நல்லது.  

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,15,16,20,21,24,25,26,30

அசுப தினங்கள்: 2,6,7,11,12,13,14,17,18,19,22,23,27,28,29,31

banner

Leave a Reply

Submit Comment