AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

October Monthly Leo Rasi Palangal 2019 Tamil

September 12, 2019 | Total Views : 1,282
Zoom In Zoom Out Print

சிம்மம் ராசி - பொதுப்பலன்கள்

சிம்ம ராசி அன்பர்களே! தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து நீங்கள் நிவாரணம் பெற, இது சிறந்த மாதமாகும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். உங்கள் கடின உழைப்பும், முறையான செயல்பாடும், வேலையில் நீங்கள் விரும்பிய வளர்ச்சியைப் பெற்றுத் தரும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். திறந்த மனதுடன் கூடிய உங்கள் அணுகுமுறை, குடும்பத்தினரைத்  திருப்திப் படுத்தும். நீங்கள் பயணங்கள் செல்ல வேண்டி வரும். அப்பொழுது புதிய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். இந்த நட்புகள் தொடர்ந்து, எதிர்காலத்தில் உங்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். சிலர் வெளிநாடு செல்லவும் வாய்ப்பு கிடைக்கலாம். உடல் நலத்தில் கவனம் தேவை. 

சிம்மம் ராசி - காதல்/திருமணம்

காதல் வாழ்க்கை திருப்தி தரும். சில காதல் உறவுகள் திருமணமாக மலரும் வாய்ப்பும் உள்ளது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினை ஒன்றுக்கு, இப்பொழுது தீர்வு கிடைக்கக் கூடும். குடும்பத் தேவைகளை உங்களால் சரியாக நிறைவேற்றி விட முடியும். இது, நீங்கள் அன்றாட வாழ்க்கையை அமைதியாக நடத்த உதவும். நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி, வளர்த்துக் கொள்ளும் உங்கள் திறனால், திருமண வரன்கள் உறுதிப்படும் வாய்ப்பும் உள்ளது.  

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை

சிம்மம் ராசி - நிதி 

நிதி நிலை மேம்படும். இது தேவைகளை நிறைவேற்றி, உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு, ஊக்கத் தொகையும் கிடைக்கக் கூடும். சேமிப்பு மூலமும் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெற நீங்கள் செய்யும் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைக்கும். உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட செலவினங்கள் ஏற்படலாம்; அவற்றைக் கட்டுப்படுத்துவது நல்லது. 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன்  பூஜை

சிம்மம் ராசி - வேலை

வேலை முன்னேற்றம் புதிய பொறுப்புகளைக் கொண்டு வரும். உங்களில் சிலருக்கு, நீங்கள் விரும்பிய நல்ல வேலை வாய்ப்புகள் அமையும். சிலர், சிறிது காலத்திற்கு, தற்பொழுதுள்ள இடத்திலிருந்து வெகு தொலைவிற்குச் சென்று வேலை செய்யவும் நேரிடலாம். வேலை பளு இருந்தாலும், உங்கள் பணியைத் தளராமல் தொடர்வதற்கான நேரம் இது. சக பணியாளர்களுடன் தேவையான நேரத்தைச் செலவு செய்வது, பயன் தரும். உரிய நேரத்தில் அவர்கள் ஆதரவு, உங்களுக்குக் கிடைக்கும்.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை 

சிம்மம் ராசி - தொழில்

தொழில் வளர்ச்சி அடையும். அதில் ஏற்படும் நிலையான முன்னேற்றம் உங்களுக்குத் திருப்தி அளிக்கும். உங்கள் புதிய திட்டங்கள் அனுகூலம் தரும். கூட்டாளிகளுடன் ஏற்படும் சிறு கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி, அவர்களுடன் மனக்கசப்பு கொள்ள வேண்டாம். மாறாக, உரிய பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றுவதற்கு நீங்கள் ஆதரவு அளிப்பது, உங்கள் தொழில் சிறக்க உதவும்.  

சிம்மம் ராசி - தொழில் வல்லுநர்

சிம்ம ராசி அன்பர்களுக்கு, வேலை நிலவரம் மனநிறைவு தரும். நிறுவன வளர்ச்சிக்கு, நீங்கள் அளித்த சிறப்பான பங்களிப்பு, உங்களுக்குப் பல பாராட்டுகளைப் பெற்றுத் தரும். உங்கள் முன்னேற்றத்திற்கான, பதவி உயர்வு போன்ற ஒரு வாய்ப்பும், உங்களுக்குக் கிடைக்கும். இப்பொழுது நீங்கள் எடுக்கும் விரைவான முடிவுகள், உற்பத்தித்திறனை மேம்படுத்துவதாக அமையும். 

சிம்மம் ராசி - ஆரோக்கியம்

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாததன் விளைவாக, உடல் நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். மன அழுத்தமும், சோர்வும் சேர்ந்து மந்த உணர்வைக் கொடுக்கலாம். முறையாக உணவு உட்கொள்வதும், தவறாமல் உடற்பயிற்சி, தியானம் செய்வதும், உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி, மன அமைதி தரும்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீவைத்தியநாத பூஜை

சிம்மம் ராசி - மாணவர்கள்

மாணவர்கள் கல்வியில் முன்னேற ஏற்ற காலம், இது. பொறுமையுடன் படித்து, விரும்பிய மதிப்பெண்களை, இப்பொழுது நீங்கள் பெற முடியும். சில மாணவர்களுடன் சேர்ந்து, கூட்டாகப் படிப்பது, சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள உதவும். ஆசிரியர்கள் உங்கள் மீது, அன்பும், அக்கறையும் காட்டுவார்கள். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,15,16,17,19,20,21,24,25,26,30

அசுப தினங்கள்: 2,6,7,11,12,13,14,18,22,23,27,28,29,31

banner

Leave a Reply

Submit Comment