x
x
x
cart-added The item has been added to your cart.

October Monthly Scorpio Rasi Palangal 2019 Tamil

September 12, 2019 | Total Views : 672
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ராசி - பொதுப்பலன்கள் 

விருச்சிக ராசி அன்பர்களே! உறவில் எழும் சிக்கல்களைக் கையாள, சிறந்த மாதம் இது. நீங்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், உங்கள் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சியாகச் செல்லும். வீட்டு விஷயங்களில் நீங்கள் காட்டும் சிறப்பு அக்கறையால், குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவார்கள். உங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அன்றாடத் தேவைகளுக்கான,   சில பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பும் உள்ளது. உங்களில் சிலருக்கு உள்ள சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். உங்கள் சமூகத் தொடர்புகள் அதிகரிக்கும். சமூக வாழ்க்கையும் உயிரோட்டத்துடன் இருக்கும். பிரச்சினைகள் எழும்பொழுது, அவற்றை கவனமாகக் கருத்தில் கொண்டு, நடைமுறைக்குத் தகுந்த படி சிந்தித்து செயல்பட வேண்டும். ஏனெனின், சில நேரங்களில் நீங்கள் செய்யும் தவறுகள், உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கலாம். பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். இது உடல்நல பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். எனவே இந்த நேரத்தில் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவும். 

விருச்சிகம் ராசி - காதல் /திருமணம்

இந்த காலகட்டத்தில், உங்களுக்கு, உண்மையான காதல் அனுபவம் கிடைக்கும். துணையிடம் நீங்கள், மிக நேர்மையாக வெளிப்படுத்தும் காதல், உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும். எனினும், பெற்றோர்கள் வழிகாட்டுதலின் படியும் நீங்கள் முடிவெடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனும், உறவு சுமுகமாகவே இருக்கும். திருமணத்திற்காக ஓரிரு வரன்கள் உங்களைத் தேடிவரும். அதில் சிறந்ததை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை

விருச்சிகம் ராசி - நிதி 

நிதி வளர்ச்சி திருப்தி தரும். நீங்கள் வாங்கியுள்ள கடன்களையும், உங்களால் அடைத்து விட முடியும். வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கக்கூடிய சாத்தியமும் உள்ளது. சொத்து ஒன்றை வாங்குவதற்காக, அதிக பணம் செலவழிக்க வேண்டி வரும். தனிப்பட்ட செலவுகளும் அதிகமாகவே இருக்கும். இவற்றைக் கட்டுப்படுத்துவது நல்லது. 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன்  பூஜை

விருச்சிகம் ராசி - வேலை

வேலை நிலவரம் சாதாரணமாக இருக்கும். சில பணிகளை இப்பொழுது உங்களால் முடிக்க முடியாமல் போகலாம். இது, அலுவலகத்தில் உங்களுக்கு மன அழுத்தம் தரலாம். எனவே, கூடுதல் நேரம் செலவிட்டு, வேலைகளை விரைந்து முடித்துவிட முயற்சி செய்யுங்கள். இதற்கு, சரியான நேரத்தில் சக ஊழியர்களிடமிருந்தும் நீங்கள் விரும்பிய ஆதரவு கிடைக்கும். இப்பொழுது உங்கள் தொடர்பு திறனும் மிகச் சிறப்பாக இருக்கும். எனினும், பணியிடத்தில் கிசுகிசு பரப்புவதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகளில் நீங்கள் சிக்கலாம். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன்  பூஜை 

விருச்சிகம் ராசி - தொழில்

வர்த்தகம் சாதாரணமாக இருக்கும். வணிகத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் புதிய திட்டங்கள், ஓரளவிற்கு உதவியாக இருக்கும். எனினும், வெற்றியைச் சுவைக்க, நீங்கள் பொறுமை காப்பது அவசியம். வாடிக்கையாளர்களிடமிருந்து வந்து சேர வேண்டிய தொகை, திரும்பக் கிடைக்கும்.  

விருச்சிகம் ராசி - தொழில் வல்லுநர்

விருச்சிக ராசி தொழில் வல்லுனர்கள், இப்பொழுது சில சிக்கல்களைச் சந்திக்கலாம். எனினும், நீங்கள் எடுக்கும் அறிவுபூர்வமான முடிவுகள், நல்ல தீர்வுகளுக்கு வழிவகுக்கும். செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பணியிடத்தில், ஒழுங்கையும், நேரம் தவறாமையையும் கண்டிப்பாகப் பின்பற்றவும். சிலர், தங்கள் சுயநலத்திற்காக உங்கள் நற்பெயரை, சில நேரங்களில் தவறாகப் பயன்படுத்தலாம். ஆரம்ப கட்டத்திலேயே இதைத் தடுத்து விடுவது அவசியம்.

விருச்சிகம் ராசி - ஆரோக்கியம்

வேலைச் சுமை, மன அழுத்தம் போன்றவை காரணமாக, நீங்கள் முறையாக உணவு உட்கொள்ள முடியாமல் போகலாம். இதானால் ஆரோக்கியப் பிரச்சினைகள் எழக்கூடும். நேரம் தவறிய உணவால், நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம். கூடுதல் ஓய்வு நன்மை தரும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

விருச்சிகம் ராசி - மாணவர்கள்

மாணவர்கள் முழு கவனத்துடன் படித்து வெற்றி பெறுவார்கள். சிலர் விருதுகளும் பெறுவார்கள். நண்பர்களுடன் பழகும் பொழுதும், அவர்களுடனான பேச்சு வார்த்தையிலும், உங்கள் அறிவாற்றல் நன்கு வெளிப்படும். தவறான புரிந்துணர்வுகளும் களையப்படும். உங்கள் பெற்றோர், உங்கள் நடத்தையைக் கண்டு பெருமிதம் அடைவார்கள். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,15,16,17,24,25,26,30

அசுப தினங்கள்: 2,6,7,12,14,18,19,20,21,22,23,27,28,29,31

Leave a Reply

Submit Comment
See More

Latest Photos