கடகம் ராசி - பொதுப்பலன்கள்
கடக ராசி அன்பர்கள், அவர்கள் இழந்த புகழை மீண்டும் அடையும் மாதமாக, இது இருக்கும். பழைய தவறுகளைத் திருத்திக் கொள்ளூம் வாய்ப்பும் கிடைக்கும். நிதி ஆதாயங்கள் ஆழ்ந்த திருப்தி தரும். சிலருக்கு சொத்து வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். பரம்பரை சொத்தும், சிலருக்குக் கிடைக்கலாம். உறவினர்களிடம் உங்கள் உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்தலாம். இது உங்களுக்கு ஆறுதல் தரும். உங்கள் பொதுத் தொடர்பு பெருகும்; அது, வலிமையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கும். சில நேரங்களில் நீங்கள், கடுமையான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். அதிக நேரம் செலவழித்து, இவைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். மன அமைதியும், புத்துணர்ச்சியும் பெற, சிலர் யாத்திரைகளை மேற்கொள்ளலாம். இப்பொழுது நீங்கள் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
கடகம் ராசி - காதல் / திருமணம்
காதல் வாழ்க்கை சீராகச் செல்லும். காதல் உறவில் ஏதேனும் பிரச்சினைகள் எழுந்தால், அவற்றை உடனடியாகத் தீர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் தகவல் தொடர்புத் திறன் பயன் தரும்; பாராட்டும் பெறும். குடும்ப வாழ்க்கை இனிமையாகக் கழியும். வாழ்க்கைத் துணையுடன் திருப்தியும், மகிழ்ச்சியும் தரக்கூடிய நேரத்தை அனுபவிப்பீர்கள். திருமணத்திற்காக, உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற சில வரன்களை நீங்கள் பெறுவீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை
கடகம் ராசி - நிதி
நிதி நிலை சிறந்து விளங்கும். பாதுகாப்பான வைப்பு நிதிகளில், நீங்கள் பணத்தை சேமிப்பீர்கள். நிலையான சொத்துக்களிலும் முதலீடு செய்வீர்கள். நிலுவையில் உள்ள தொகைகளையும், பிறரிடமிருந்து உங்களால் திரும்பப் பெற முடியும். நிதி நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் எதிர்பாராத லாபங்களினால், உங்கள் வங்கி இருப்புத் தொகை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. .
உங்கள் நிதிநிலை மேம்படப் பரிகாரம்: சுக்கிரன் பூஜை
கடகம் ராசி - வேலை
வேலையில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு விரும்பிய படி வேலை வாய்ப்பு உருவாகும். நிலுவையிலுள்ள பணிகளுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பது அவசியம். இது, உங்களுடைய வெற்றிக்கு வலு சேர்க்கும். வேலையில் உங்கள் நம்பகத்தன்மை பாராட்டுக்குரியதாக அமையும். அலுவலகத்தில் நீங்கள், காலம் தவறாமையைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய் பூஜை
கடகம் ராசி - தொழில்
வணிகத் துறையில், நல்ல திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் திறன் வெளிப்படும். தொழிலில் நீங்கள் காட்டும் கவனம், கூட்டாளிகளுக்கும் ஆர்வம் தருவதாக அமையும். உடன் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பதன் மூலம், அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பங்களிப்பை, அவர்களிடமிருந்து பெற முடியும். வாடிக்கையாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் நடவடிக்கைகளை திட்டமிடுவது பயன் தரும்.
கடகம் ராசி - தொழில் வல்லுநர்
தொழில் முன்னேற்றம் ஊக்கமளிக்கும். உங்கள் சீரான பணித்திறன், அதிக நன்மதிப்பைப் பெற்றுத் தரும்; உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுதல்களும் கிடைக்கும். உங்கள் மேலதிகாரியால் ஒப்படைக்கப்பட்ட குறிப்பிட்ட பணிகளை, நீங்கள் பொறுப்புடன் நிறைவேற்றுவது நன்மை தரும். .
கடகம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை நன்றாக இருக்கும். வானிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படும் நோய்களோ, அவற்றின் விளைவுகளோ, உங்களை பாதிக்காது. அந்தந்த பருவங்களுக்கு ஏற்ற பழங்களை உண்வது, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களின் உடல்நிலை முன்னேறும் வாய்ப்பும், இப்பொழுது உள்ளது.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை
கடகம் ராசி - மாணவர்கள்
பாடங்களை முறையாகப் படித்து முடிப்பதில் நீங்கள் காட்டும் அக்கறை, உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இப்பொழுது நீங்கள், உங்கள் பள்ளி, கல்லூரியில் முதன்மையாக விளங்கும் சாத்தியமும் உள்ளது. உயர் கல்வியும் சிறந்து விளங்கும். சுற்றுலா, விடுமுறை போன்றவற்றையும், நட்பு ரீதியான உறவுகளையும் நீங்கள் மகிழ்ச்சியோடு அனுபவிப்பீர்கள் சமூக வட்டத்தில் புதிய தொடர்புகளும் உருவாகும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,3,4,5,8,13,15,,16,17,19,20,21,24,25,26,30
அசுப தினங்கள்: 2,6,7,9,10,11,12,14,18,22,23,27,28,29,31

Leave a Reply