Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

October Monthly Capricorn Rasi Palangal 2019 Tamil

September 14, 2019 | Total Views : 1,295
Zoom In Zoom Out Print

மகரம் ராசி - பொதுப்பலன்கள்

மகர ராசி அன்பர்களுக்கு, இது ஒரு சுறுசுறுப்பான மாதமாக இருக்கும். சொந்த வாழ்க்கையில் முடிக்க வேண்டிய பணிகள் குறித்து, குடும்பத்தினருடன் மனம் விட்டு விவாதித்து முடிவெடுப்பீர்கள். எனினும், இப்பொழுது எந்தச் செயலில் இறங்கினாலும், நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். சாதகமான, புதிய சமூகத் தொடர்புகள் ஏற்படலாம். இவை காரணமாக சமுதாயத்தில் உங்கள் மதிப்பு உயரும். முக்கியப் பிரச்சினைகளில், பிறர் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும் சூழ்நிலையும் உருவாகும். அண்டை அயலாருடன் தொடர்பை மேம்படுத்திக் கொள்வது நன்மை தரும். இப்பொழுது நீங்கள் குறுகிய பயணங்களை மேற்கொள்ளக் கூடும். அப்பொழுது கவனமாக இருப்பது நல்லது. இவற்றில் பெரும் தொகையை எடுத்துச் செல்வதையும் தவிர்ப்பது அவசியம். உங்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இது தொடர்பாக நீங்கள் பணத்தையும் செலவழிப்பீர்கள். உடல்நிலையில் திடீர் பாதிப்புகள் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருக்கவும்.

           

மகரம் ராசி - காதல் / திருமணம்

காதல் சிறக்கும் நேரம் இது. உங்களுக்கு இப்பொழுது உண்மையான துணை கிடைத்து, நீங்கள் ஒரு ஆரோக்கியமான உறவைப் பெறும் வாய்ப்புள்ளது. உங்கள் காதலை, குடும்பப் பெரியவர்களிடம் வெளிப்படுத்துவீர்கள். அவர்கள், உங்கள் எண்ணத்திற்கு உரிய மரியாதை தருவார்கள். குடும்ப வாழ்க்கையும்,  கனிவும், ஆதரவும் தரும். திருமணத்திற்காக வரும் வரன்களைத், தீவிரமாகப் பரிசீலிப்பது நல்லது. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை

மகரம் ராசி - நிதி

பணம் திரட்டுவதற்காக, தேவைப்படும் ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டி வரும். எனினும், தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலமும், மற்ற செலவுகளைக் குறைப்பதன் மூலமும், உங்களால் பணத்தை சேமிக்க முடியும்; நிலுவையிலுள்ள கடன்களையும் தீர்க்க முடியும். உங்களுக்கு உள்ள வருமானம், கையில் உள்ள பணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, செலவுகளை சமாளிக்க, ஒரு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்துக் கொள்வது நல்லது. 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன் பூஜை

மகரம் ராசி - வேலை

வேலை திருப்தி தரும். சிறு தாமதங்களுக்குப் பிறகு, எதிர்பார்த்த பலன்களும் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த வேலை வாய்ப்புகளும், சிலருக்குக் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், வேலையில் வெற்றி கிடைக்கும். இதனால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், உங்கள் அறிவுத்திறனைப் பயன்படுத்தி, இப்பொழுது நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய்  பூஜை 

மகரம் ராசி - தொழில்

வியாபாரம் நன்றாக நடக்கும். குறிப்பாக, உங்கள் சிந்தனைகள், கூட்டு வணிகத்தை சிறப்பாகச் செயல்படுத்த உதவும். வேலை முறையில் சில மாற்றங்களைச் செய்வதும், தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதும், வணிக வளர்ச்சிக்கு உதவும்.  

மகரம் ராசி - தொழில் வல்லுநர்

மகர ராசி தொழில் வல்லுனர்களின் மதிப்பு உயரும். நீங்கள் ஈட்டும் நற்பெயர், தொழில் வளர்ச்சிக்குத் துணை புரியும். நிலைமையை அனுசரித்து, உங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்வது, நல்ல பலன் பெற உதவும். உங்கள் நேர்மறையான அணுகுமுறை, விரைவாக முடிவெடுக்கத் துணை புரியும்.  

மகரம் ராசி - ஆரோக்கியம்

முழங்கால் வலி ஏற்படலாம். கால்சியம் குறைபாட்டால், உடல் பாதிக்கப்படலாம். மருத்துவச் செலவு அதிகரிப்பதால், நீங்கள் கவலை கொள்ளலாம். தவறுதலாகக் கீழே விழுந்து, காயங்கள் ஏற்படலாம். அலைபாயும் மனமும், தெளிவற்ற எண்ணங்களும், உங்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தலாம். எனவே, இந்தக் கால கட்டத்தில், ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தவும்.   

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

மகரம் ராசி - மாணவர்கள்

மாணவர்கள் தங்கள் கல்வியை, வெற்றிகரமாகத் தொடருவார்கள். உயர் கல்வி வாய்ப்பும் சிறப்பாகக் காணப்படுகிறது. வேலை வாய்ப்புக்கு உகந்த கல்வித் துறையை இப்பொழுது நீங்கள் தேர்வு செய்வீர்கள். சிலர், நண்பர்களுடன் இன்பச் சுற்றுலாவிற்கு திட்டமிடலாம். அது உங்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,15,16,17,19,20,21,30

அசுப தினங்கள்: 2,6,7,12,14,18,22,23,24,25,26,27,28,29,31

banner

Leave a Reply

Submit Comment