Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

October Monthly Aquarius Rasi Palangal 2019 Tamil

September 14, 2019 | Total Views : 1,149
Zoom In Zoom Out Print

கும்பம் ராசி - பொதுப்பலன்கள்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம், சூழ்நிலைகளைத் திறம்படக் கையாளுவதற்கு, தன்நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். பல காரணங்களுக்காக, தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எனவே, நிதி தொடர்பான விஷயங்களிலும், பணப் பரிவர்த்தனைகளிலும், ஒருமுறைக்குப் பலமுறை யோசித்தே செயலாற்ற வேண்டும். வேலைத் துறையிலும், நீங்கள் முறையாகவும், கவனத்துடனும் பணியாற்றுவது நல்லது. இப்பொழுது உங்களுக்கு, புதிய உறவுகள் கிடைக்கலாம்; சமூக வட்டத்தில் புதிய நண்பர்களும் உருவாகலாம். தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்வதாலும், புதிய நட்புகள் கிடைப்பதாலும், உங்களுக்கு நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். ஆனால் உங்கள் எடை அதிகரிக்கக்கூடும். இதை பரிசோதித்துக் கொள்வது நல்லது.  

 

கும்பம் ராசி - காதல் / திருமணம்

காதலை நீங்கள் அழகாக வெளிப்படுத்துவீர்கள். இல்லற வாழ்விலும் உங்கள் உணர்வுகள் நன்கு வெளிப்படும். இதனால் உங்கள் வாழ்க்கைத்துணை, உங்களை நன்கு புரிந்து கொள்ள முடியும். இருவரும் இணைந்து இனிய பயணம் ஒன்றையும் மேற்கொள்ளக்கூடும். இதனால் உங்களுக்கிடையே நிலவும் அன்பும், நம்பிக்கையும் மேலும் ஆழமாகும். குடும்ப சூழ்நிலையும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். திருமணத்திற்கான வரன் ஒன்றை நிச்சயிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை

கும்பம் ராசி - நிதி

இப்பொழுது நீங்கள், நீண்ட கால முதலீடுகள் சிலவற்றைச் செய்ய வாய்ப்புள்ளது.  இது உங்கள் சேமிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். நீங்கள் வாகனம் வாங்குவதற்கும், அன்றாட தேவைகளுக்கான மர சாமான்கள் வாங்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆடம்பரச் செலவுகளும் ஏற்படக்கூடும். எனவே கட்டுபாடு அவசியம்.  

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: கேது  பூஜை

கும்பம் ராசி - வேலை

வேலையில் முன்னேற்றம் சராசரியாக இருக்கும். எனினும் அலுவலகத்தில், கடினமான சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகளும் தோன்றலாம். சக ஊழியர்களுடன் எந்தக் காரணத்தைக் கொண்டும் மோதல் போக்கைத் தவிர்க்க வேண்டும் அதிகாரத்தில் உள்ளவர்களுடனும், எந்தப் பிரச்சினையும் வைத்துக் கொள்ளாதீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை 

கும்பம் ராசி - தொழில்

வியாபாரத்தில், ஏமாற்றங்கள் இருக்கலாம். இவை குறிப்பாக, வாடிக்கையாளர்களின் காரணமாக ஏற்படலாம். நீங்கள் தீட்டும் திட்டங்களில் எதிர்பார்த்த திருப்தி கிடைக்காமலும் போகலாம். பொது வேலைகளிலும் நீங்கள் மன அழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம். எனவே இந்த நேரத்தில், சூழ்நிலையையும், பிறரையும் அனுசரித்துப் போவதும், அமைதியாக இருப்பதும் சிறந்தது இருப்பினும் ஒழுக்கத்தைக் கடைபிடித்து, முறையாக உழைத்தால், இந்த நிலையிலும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். 

கும்பம் ராசி - தொழில் வல்லுநர்

கும்ப ராசி தொழில் வல்லுனர்களுக்கு, இது ஒரு சராசரியான காலம் எனலாம். அதிகாரத்தில் உள்ளவர்களுடன் மோதல்களைத் தவிர்ப்பதும்,  சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும், வேலையில் நல்ல முன்னேற்றம் காண உதவும். எனினும் பணியிடத்தில் கவனமாக இருப்பது நல்லது. இவர்களில் சிலர், உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயலலாம்.  

கும்பம் ராசி - ஆரோக்கியம்

உடல்நிலையை பாதிக்கும் உணவுகளைத் தவிர்த்து விடுவது நல்லது. இப்பொழுது உங்களுக்கு செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். மனச்சோர்வு காரணமாக, சாதாரண விஷயங்களில் கூட தேவையற்ற எரிச்சல் உண்டாகலாம். தியானம் மேற்கொள்வது, வேலையில் நன்கு கவனம் செலுத்த உதவும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

கும்பம் ராசி - மாணவர்கள் 

மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். குழுவாகச் சேர்ந்து படிப்பது, பாடங்களில் தெளிவு பெற உதவும். பாடங்களை உரிய நேரத்தில், முறையாகப் படித்து முடிப்பதற்கு, உங்கள் ஆசிரியர்கள் உதவியாக இருப்பார்கள். கூடுதல் நேரத்தைச் செலவிட்டு, ஒருமுகப்பட்ட மனதுடன் படிப்பது, நீங்கள் விரும்பிய வெற்றிகளை அடைய உதவும். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி பூஜை

சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,15,16,17,19,20,21,24,25,30

அசுப தினங்கள்: 2,6,7,12,14,18,22,23,26,27,28,29,31

banner

Leave a Reply

Submit Comment