AstroVed Menu
AstroVed
search
search

October Monthly Sagittarius Rasi Palangal 2019 Tamil

dateSeptember 14, 2019

தனுசு ராசி - பொதுப்பலன்கள்

தனுசு ராசி அன்பர்களுக்கு, இது ஒரு சிறந்த மாதமாக இருக்கும். உங்கள் நல்ல குணங்கள் பிறரது கவனத்தைக் கவரும். உறவுகள் மன அமைதி தரும். அர்ப்பணிப்பு உணர்வுடன் நீங்கள் ஆற்றும் பணி, உங்கள் நிலையை உயர்த்தும். நிதி நிலை மகிழ்ச்சி தரும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கூட்டுக் குடும்பத்தில் மீண்டும் இணைய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். உங்களை நேசிப்பவர்கள், உங்கள் உணர்ச்சிகளை மதித்துப் பாராட்டுவார்கள். சொந்தத் தேவைகளுக்காக, பல உபயோகப் பொருட்களை இப்பொழுது நீங்கள் வாங்கக் கூடும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தனுசு ராசி - காதல்/திருமணம்

புதிய துணை கிடைக்கும். அவருடன் அன்பையும், அக்கறையையும் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும். இது காதல் வாழ்க்கையை இனிமையாக்கும். கணவன், மனைவி உறவும் இணக்கமாக இருக்கும். வாழ்க்கைத் துணையைக் கைப்பிடித்து, மண உறவில் ஈடுபடவும், இது உகந்த காலம் ஆகும். இதற்கு ஏற்ப, பல திருமண வரன்கள் வந்து சேரும்.          

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை

தனுசு ராசி - நிதி 

பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். இது, உங்கள் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குப் போதுமானதாக இருக்கும். தேவைப்படும் பொழுது நண்பர்களிடமிருந்தும் நிதியுதவி கிடைக்கும். மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளும் நோக்கத்தில், வைப்புத் தொகைகளில் நீங்கள் முதலீடு செய்வீர்கள். திடீரென திட்டமிட்டு மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணங்களுக்காக, நீங்கள் செலவு செய்ய நேரிடும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சனி  பூஜை

தனுசு ராசி - வேலை

பணியில் ஏற்படும் முன்னேற்றம், உங்கள் வேலைக்கான அங்கீகாரமாக அமையும். உடன் பணியாற்றுபவர்கள், உங்கள் கருத்துக்களை மதித்து, அவற்றுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பார்கள். உங்கள் பணித் திறனைக் கொண்டு, அலுவலகத்தில் சில சிக்கல்களுக்கும் தீர்வு காண்பீர்கள். இதனால் பிறர் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். வேலை தொடர்பாக சில குறுகிய பயணங்களையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன்  பூஜை 

தனுசு ராசி - தொழில்

இது உங்களுக்குச் சாதகமான மாதமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் திடமான முடிவுகளால், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். புதிய வேலை வாய்ப்புகளும், உரிய அங்கீகாரமும் கிடைக்கும். உங்கள் தொடர்பு வட்டத்திலிருந்தும் ஆதரவு கிடைக்கும். நிலுவையிலுள்ள பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய, உங்கள் நம்பிக்கை உதவும்.

தனுசு ராசி - தொழில் வல்லுநர்

இந்தக் காலகட்டத்தில், பணிகளை முறையாகச் செய்து முடிக்க, நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். உங்கள் நடவடிக்கைகள், சாதகமான பலன்களைத் தரும்; வலுவான தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும். நிறுவன வளர்ச்சிக்கான உங்கள் புதிய எண்ணங்களை நீங்கள் இப்பொழுது செயல்படுத்த வேண்டும். உங்கள் பணித் திறனும், நீங்கள் கொண்டுள்ள நல்ல உறவும், உங்கள் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். 

தனுசு ராசி - ஆரோக்கியம்

நீங்கள் நல்ல உடல்நிலையுடனேயே இருப்பீர்கள். மன அழுத்தத்தைத் தவிர்ப்பதும், தினசரி தியானம் செய்வதும், சிறு உபாதைகளைப் போக்கி, நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். எனினும், செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், காரமான உணவுகளைத் தவிர்ப்பதும், அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதும், நல்லது. 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீவைத்தியநாத பூஜை

தனுசு ராசி - மாணவர்கள்

தனுசு ராசி மாணவர்களின் முயற்சிகளுக்கு, ஒரு தனி அடையாளம் கிடைக்கக் கூடும். உணர்வு நிலையில் நல்ல ஆதரவைப் பெறுவதற்கு, நீங்கள் உறவுகளுடன், இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தினருடன் தேவையான நேரத்தையும் செலவழிக்க வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு, ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். தொண்டு நிறுவனங்களிலிருந்து, உங்கள் கல்விக்கான நிதி உதவியும் கிடைக்கலாம்.  

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்: 1,3,4,5,8,9,10,11,13,15,16,17,19,20,24,25,26,30

அசுப தினங்கள்: 2,6,7,12,14,18,21,22,23,27,28,29,31

 


banner

Leave a Reply