Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

October Monthly Pisces Rasi Palangal 2019 Tamil

September 14, 2019 | Total Views : 1,413
Zoom In Zoom Out Print

மீனம் ராசி - பொதுப்பலன்கள்

மீன ராசி அன்பர்களே! இலக்குகளை அடைவதற்கு, இந்த மாதம் நீங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றுவீர்கள். இவை வெற்றிகரமாக அமையும். குறைந்தபட்ச முயற்சிகள் செய்தே, நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அடைய முடியும். இவை தொடர் லாபங்களையும் கொடுக்கும். ஒப்பந்தங்கள், ஊக ஒப்பந்தங்கள் போன்றவையும் லாபம் தரும். உங்களுக்குத் தேவையான எந்தவொரு விஷயமும் இப்பொழுது சுலபமாகவே கிடைத்துவிட வாய்ப்புள்ளது. எதிரிகள் மீது வெற்றியும் பெற முடியும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் ஆழ்ந்த எண்ணங்களையும், இயற்கையான உணர்வுகளையும் நன்கு வெளிப்படுத்தி, நீங்கள் இனிய அனுபவம் பெற முடியும். உங்கள் புகழும் கணிசமாக உயரக் கூடும். சமூக வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இருக்கும். சில சிறு பயணங்களை நீங்கள் மேற்கொள்ளலாம். இவை மகிழ்ச்சிகரமாக அமையும். தங்கள் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக, சிலர் உங்களுடன் நெருங்கிப் பழக முயற்சிக்கலாம். இவர்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள். உணர்ச்சிவசப்படாமல், இதற்குத் தக்கவாறு நீங்கள் நடந்து கொள்வது நல்லது. உடல்நலத்தில் சிறப்பு அக்கறை தேவை.

மீனம் ராசி - காதல் / திருமணம்

காதல் வாழ்க்கை சுகமாக இருக்கும். ஆனால் இப்பொழுது நீங்கள், துணையிடமிருந்து அதிக அன்பையும், கவனத்தையும் எதிர்பார்க்கலாம், இது கிடைக்காத பொழுது, மிகவும் ஏமாற்றமும் அடையலாம். முக்கியமான விஷயங்களில், உங்கள் துணையின் உதவி கிடைப்பதற்கு, அவருக்கு உரிய மரியாதை அளித்து, அவரிடம் சில பொறுப்புகளை வழங்குவது அவசியம். உங்கள் கவனக்குறைவு காரணமாக, திருமணத்திற்காக வரும் சில வரன்களை, நீங்கள் சரியாகப் பரிசீலிக்காமல் போகலாம். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திரன் பூஜை

மீனம் ராசி - நிதி

நிதிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம்; இது உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கலாம். ஆனாலும் சரியான நேரத்தில், நிலவரத்தைச் சீர் செய்து விடுவீர்கள். இப்பொழுது நீங்கள், சில நீண்ட கால முதலீடுகளையும் செய்வீர்கள். அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றின் மீது ஆசை கொண்டு அவற்றை வாங்குவதால், செலவினங்கள் அதிகரிக்கக் கூடும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: செவ்வாய்  பூஜை

மீனம் ராசி - வேலை

உங்கள் வேலைத் திறன் சிறந்து விளங்கும். இது, நற்பலன்களையும், கணிசமான வருவாயையும் கொடுக்கும். உங்கள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும், உயர் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுதல்களைப்  பெற்றுத்தரும். சக ஊழியர்களுடன், நல்ல உறவு நிலவும். வேலை நுணுக்கங்களை விரைவாக உள்வாங்கிக் கொள்ளும் உங்களது ஆற்றலால், நன்மைகள் விளையும்.   

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு  பூஜை 

மீனம் ராசி - தொழில்

உங்கள் கடின முயற்சி, வணிகத்தில் வெற்றி ஈட்டித் தரும். பணிகளை, குறித்த காலத்திற்கு முன்பே முடித்து விடுவது நல்லது. வாடிக்கையாளர்களிடமிருந்து சில குற்றச்சாட்டுகள் எழலாம். எனினும் உங்கள் கடின உழைப்பும், அறிவுத் திறனும் இவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும். பொதுவாகவே இந்த நேரத்தில், நீங்கள் அதிக கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. இல்லாவிட்டால், தவறுகளும், மன அழுத்தமும் ஏற்படலாம். 

மீனம் ராசி - தொழில் வல்லுநர் 

செய்யும் தொழிலில், நீங்கள் ஒரு நிச்சயத் தன்மையுடன் செயலாற்ற முடியும். இதனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பான பயணங்கள் இருக்கலாம். இவை  பயனுள்ளதாக அமையும். ஆனால், தொழில் போட்டியாளர்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், வாடிக்கையாளர்களையும், பொது மக்களையும் கையாளும் பொழுது, கவனம் தேவை.  

மீனம் ராசி - ஆரோக்கியம்

உடல் நிலையில் கவனம் தேவை. நீங்கள் உயர் இரத்த அழுத்தம், முழங்கால் வலி போன்ற நோய்களால் பாதிக்கப்படலாம். உடலில் சர்க்கரை அளவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இதைத் தவறாமல் கண்காணித்து, கட்டுக்குள் வைப்பது அவசியம். தவறாமல் உடற்பயிற்சிகள் செய்வதும், இயல்பான ஆரோக்கியத்துடன் இருக்க உதவும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

மீனம் ராசி - மாணவர்கள் 

மீன ராசி மாணவர்கள், இந்தக் காலகட்டத்தில் சிறு பிரச்சினைகளையும், குழப்பங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். சில நேரங்களில் உங்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்; இவற்றைத் தவறான முறையில் வெளிப்படுத்தவும் செய்யலாம். இது போன்ற நடத்தை பிறரை அதிர்ச்சிக்கும் உள்ளாக்கக் கூடும். எச்சரிக்கை தேவை. சுய பரிசோதனை செய்து கொண்டு, உங்களை நீங்களே சீராக்கிக் கொள்வது அவசியம். ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளையும், உரையாடல்களையும் தவிர்ப்பதும் நல்லது. தவறாமல் தியானம் செய்வது, நிவாரணம் பெறுவதற்கு சிறந்த வழியாகும்.  

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி பூஜை

சுப தினங்கள்: 3,4,5,8,9,10,11,13,15,16,17,19,20,21,24,25,26,30

அசுப தினங்கள்: 1,2,6,7,12,14,18,22,23,27,28,29,31

banner

Leave a Reply

Submit Comment