Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

அக்டோபர் மாத ராசி பலன் 2021 | October Matha Rasi Palan 2021 Tamil

September 6, 2021 | Total Views : 620
Zoom In Zoom Out Print

மேஷம் அக்டோபர் 2021 பொதுப்பலன்:

கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். இருவருக்கும் இடையே இருந்து வந்த  கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு அதிகரிக்கும். அன்னியோன்யம் கூடும்.  குடும்ப வாழ்வில் அமைதி இருக்கும். பிரச்சினைகள் அவ்வப்பொழுது தலை தூக்கினாலும்  சமாளித்து விடுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் நல்லிணக்க உறவினை பராமரிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு அதிக பணிகள் காணப்படும். தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

ரிஷபம் அக்டோபர் 2021 பொதுப்பலன்:

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடனுக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு கடன் தொகை கிடைக்கப் பெறும்.அசையாச் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் கிடைக்கும் பலன் உங்களுக்கு திருப்திகரமாக இருக்காது. சொத்து சம்பந்தமான வழக்குகள்  ஏதேனும் இருந்தால், இந்த மாதம் அவை உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

மிதுனம் அக்டோபர் 2021 பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழ்வீர்கள். தம்பதிகளுக்கு  இடையே அன்னியோன்யம் கூடும். நண்பர்கள் மூலம் பண வரவு அல்லது பண உதவி கிடைக்கப் பெறும்.  புதிய நண்பர்கள் கிடைக்கப் பெற்று உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  புதிய நண்பர்கள் மூலம் உங்களுக்கு பண உதவி கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் சுமூகமான உறவு ஏற்படும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

கடகம் அக்டோபர் 2021 பொதுப்பலன்கள்:

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தாமதப்பட்டவர்களுக்கு  திருமணம் கைகூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து எறிந்து நீங்கள் வெற்றி நடை போடுவீர்கள்.  தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்கும். இது சிறந்த மாதமாக இருக்கும். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். உயர்கல்வி படிப்பவர்களுக்கு சில தடைகள் இருந்தாலும் இந்த மாத கடைசி பகுதியில் படிப்பில் ஏற்றம் காண்பார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

சிம்மம் அக்டோபர்  2021 பொதுப்பலன்கள்:

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் இருக்கும். உங்கள் நிதிநிலையில் ஏற்ற இறக்க நிலை  காண்பீர்கள். பண வரவு கணிசமாக அதிகரித்தாலும் செலவுகளையும் நீங்கள் சந்திக்க நேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சுமாரான பலன்களைக் காண்பீர்கள். வியாபாரத்தின் மூலம் சிறந்த லாபமும் ஆதாயமும் பெறுவீர்கள்.  புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சொத்துக்கள் அல்லது பழைய வண்டி வாகனகங்கள் வாங்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் மனதில் புதிய விஷயங்களை கற்கும் ஆர்வம் வளர்த்துக் கொள்வார்கள். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

கன்னி அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையுடன் இருப்பார்கள். என்றாலும் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து போகும். எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உங்கள் வார்த்தைகளுக்கு  மதிப்பும் மரியாதையும் இருக்கும். உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் ஏற்றமான நிலை இருக்கும். உங்கள் வருமானம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல பலன்களைக் காண்பார்கள். வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டியாளர்களை சந்திக்க நேரும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்கள் அதிக முயற்சியுடனும் கவனமுடனும் படிக்க வேண்டும். ஞாபகத் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

துலாம் அக்டோபர் 2021 பொதுப்பலன்:

கணவன்  மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகும். மாத இடைப்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் படிப்படியாக மேம்படும். வாழ்வில் ஏற்றம் காணப்படும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் சில தடைகளும் சவால்களையும் நீங்கள் சந்திக்க நேரும். இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். நீங்கள் அசையாச் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். இந்த மாதம் தொழில் மூலம் சுமாரான ஆதாயங்கள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

விருச்சிகம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குடும்பச் சூழல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும்.  இந்த மாதம் புதிய நண்பர்களைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. பணத்தை கடனாக கொடுப்பதும் வாங்குவதும் இந்த மாதம் தவிர்க்கப்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறந்த பலன்களைக் காண்பார்கள்.  சொந்தத் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் பிரகாசிப்பார்கள்.  உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

தனுசு அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

திருமணம் தடைபட்டவர்களுக்கு திருமண முயற்சி கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் கடந்த கால முதலீடுகளின் மூலம் நீங்கள் லாபம் பெறுவீர்கள். உங்கள் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். இந்த மாதம் புதிய முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளதீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

மகரம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும். அன்னியோன்யம் பெருகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சற்றே அனுகூலமான நிலை இருக்கும். பணப் புழக்கம் ஆரம்ப காலக் கட்டங்களில் மந்தமாக இருக்கும் என்றாலும் நிலைமை படிப்படியாக சீராகும்.  உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தொழில் செய்பவர்கள்  சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் சேர்ந்து வெளியூர்களுக்கு சுற்றுலா செல்ல சாதகமான மாதமாக இருக்கிறது. உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

கும்பம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் மூலம் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பச் சூழல் மிகவும் ரம்மியமாக இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவீர்கள்.  இருவருக்கும் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில்  உங்கள் ஆலோசனைகளை தக்க சமயத்தில் அளித்து  பணியிடத்தில் சில பிரச்சினைகளுக்கு தீர்வு கூறுவீர்கள். உங்கள் தைரியமும் திறமையும் பிறரின் பாராட்டைப் பெறும். உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்க வாய்ப்பில்லை எனவே கவனம் தேவை. மாணவர்கள் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். என்றாலும் புத்தி கூர்மையுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

மீனம் அக்டோபர் பொதுப்பலன்கள் 2021:

மீன ராசி அன்பர்களின் குடும்ப வாழ்கை இனிமையாக இருக்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். வீட்டில் வயது முதிர்ந்தவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பதன் மூலம் நன்மை காணலாம். திருமணத்திற்குக்  காத்திருப்பவர்கள் இந்த மாதம் மனதிற்குப் பிடித்த தக்க துணையைக்  கண்டு கொள்வார்கள். இந்தமாதம் தங்களின் பொருளாதார நிலையில் சற்று இறக்கம் காணப்படும். இந்த மாதம்  நீங்கள் கடினமான முயற்சிகள் எடுப்பதன் மூலம் உங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இயலும்.  அலுவலகத்தில் அதிக பணிகள் காணப்படும். மேலதிகாரிகளின் ஆலோசனைப்படி பணியாற்றுவது நன்மை அளிக்கும்.. தொழில் அல்லது வியாபாரம் மேற்கொள்பவர்கள் பெரிய அளவிலான வாடிக்கையாளர்களைப்  பெறுவீர்கள்.மாணவர்கள் விடா முயற்சியினால் படிப்பில் வெற்றி காண இயலும்.  உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மனம் சோர்வுடன் காணப்படும். உங்கள் ராசி பலன்களை பற்றி மேலும் அறிய எங்கள் ஜோதிட நிபுணர்களை அணுகுங்கள்.

banner

Leave a Reply

Submit Comment