Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

November Monthly Taurus Rasi Palangal 2019 Tamil

October 30, 2019 | Total Views : 1,402
Zoom In Zoom Out Print

ரிஷபம் ராசி - பொதுப்பலன்கள்

ரிஷப ராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த மாதம் பணியில் முன்னேற்றமும், அங்கீகாரமும் கிடைக்கும். பணி நிமித்தமாக சிலர், நீண்ட தூரப் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். வாழ்வில் ஏற்படும் கடினமான சூழ்நிலைகளை, உங்கள் சாமார்த்தியமான செயல்பாடுகளின் மூலம் வெல்வீர்கள். சிலர், தொழில் சார்ந்த நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். வாழ்வில் ஏற்படும் மாறுதல்களும், உங்களுக்கு  நம்பிக்கை அளிக்கும். எனினும், பணியிடத்தில் உங்களுக்கு அளிக்கப்படும் சில குறிப்பிட்ட பணிகளை ஏற்க மறுக்காதீர்கள். இதனால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். தவிர, சில விஷயங்களில் நீங்கள் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவும் சிக்கல்கள் ஏற்படலாம். இவற்றைத் தவிர்த்து, பொது வாழ்வில் முன்னேறுவதற்குக் கவனம் செலுத்துங்கள். காலம் தவறி உணவு உண்ணுதல் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளும் பயணங்கள் காரணமாக, உங்கள் தேக  ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எச்சரிக்கையாக இருக்கவும்.  

ரிஷபம் ராசி - காதல் /திருமணம்

திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு, இந்த மாதம் திருமணம் நிச்சயம் ஆகும் வாய்ப்புள்ளது. தம்பதிகளுக்கிடையே நிலவும் அன்பும், நெருக்கமும் வாழ்வில் அமைதியை ஏற்படுத்தி, உங்கள் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குடும்பச் சூழ்நிலையும் சிறப்பாக இருக்கும். துணையுடன் உங்கள் நேரத்தை, இனிமையாகச் செலவிடுவீர்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரகன் பூஜை  

ரிஷபம் ராசி - நிதி

பொருளாதார முன்னேற்றம் அனுகூலம் தரும். இது, உங்கள் நிதிநிலையை மேம்படுத்தும். எதிர்பார்க்கும் லாபத்தையும் தரும். நீங்கள் பிறருக்குக் கடனாக கொடுத்த தொகைகளை வசூலிப்பீர்கள். முதலீடுகளிலிருந்தும் லாபம்  கிடைக்கும்.  

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன் பூஜை  

ரிஷபம் ராசி - வேலை

பணி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற்றுத் தரும். பல்வேறு வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும். இந்த வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது, அலுவலகத்தில் வெற்றியை அளிக்கும். பணியிடத்தில் பொறுமையைக் கடைபிடிப்பதும், பிறரிடம் கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர்ப்பதும், நன்மை தரும்.  

ரிஷபம் ராசி - தொழில்

தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற உங்கள் முயற்சிகள், சரியான பாதையில் செல்லும். ஆயினும், தொழில் வளர்ச்சி அடைய, கால தாமதம் ஆகலாம். இதற்காக, நீங்கள் தற்பொழுது செய்யும் தொழிலை மாற்றி விடாமல், அதையே தொடர்ந்து நடத்துங்கள். இது உங்களுக்கு நன்மை தரும். உங்கள் கூட்டாளிகளும் தொழில் முன்னேற்றத்தில் பங்கு கொண்டு, அதில் ஓரளவு வெற்றியும் காண்பார்கள். நிலுவையில் இருக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றை உடனடியாக முடிக்க முயலுங்கள். இதுவும் நன்மை விளைவிக்கும்.  

ரிஷபம் ராசி - தொழில் வல்லுநர்

தொழில் வல்லுநர்களின் முன்னேற்றம் மெதுவாக இருக்கக் கூடும். எனினும், உங்கள் முறையான திட்டங்கள் நன்றாகவே செயல்படும். தைரியமாக முடிவெடுக்கும் உங்கள் திறன் காரணமாக, தொழிலில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். இந்த நேரத்தில் சக பணியாளர்களுடன் நல்லுறவைப் பராமரிப்பது அவசியம். உங்கள் கடுமையான சொற்கள் அல்லது நடவடிக்கைகள், அல்லது தவிர்க்கும் இயல்பு போன்றவை, உங்கள் நற்பெயரைப் பாதிக்கக் கூடும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பகவான் பூஜை  

ரிஷபம் ராசி - ஆரோக்கியம் 

உங்கள் அஜாக்கிரதை காரணமாக, உடல்நிலை பாதிக்கப்படலாம். நீங்கள், நேரத்திற்கு உணவு உட்கொள்ளாதது வாய்வுப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். வேளா வேளைக்கு, முறையாக சாப்பிடாததால், நீங்கள் மந்தமாகவும் உணரலாம். தகுந்த மருத்துவ ஆலோசனைகளையும், பரிசோதனைகளையும் மேற்கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது நல்லது. 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: சூரியன்  பூஜை 

ரிஷபம் ராசி - மாணவர்கள் 

மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள்  சிறப்பாக இருக்கும். அதே உற்சாகத்தோடு தொடர்ந்து படித்து, நீங்கள் உங்களை முன்னேற்றிக் கொள்ள முடியும். சக மாணவர்களுடன் நேரம் செலவிடுவதை தவிர்த்து, உங்கள் தனிப்பட்ட வெற்றி மற்றும் லட்சியங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிப்பது, பயன் தரும். தொண்டு நிறுவனங்களிலிருந்து, கல்விக்கான உதவித் தொகை பெறும் வாய்ப்பும் உள்ளது. 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 6,7,8,9,10,12,14,15,17,18,19,22,23,24,28

அசுப தினங்கள்: 1,2,3,4,5,11,13,16,20,21,25,26,27,29,30

banner

Leave a Reply

Submit Comment