மேஷம் ராசி - பொதுப்பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம், சூழ்நிலை, பொதுவாக பதட்டமாகக் காணப்படும். இது உங்களுக்குக் கவலை அளிக்கக் கூடும். இதனால், உங்கள் தன்னம்பிக்கையும் குறைந்து போகலாம். எனவே, உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி, நம்பிக்கையுடன் செயல்படுவது நன்மை தரும். ஸ்திரத்தன்மையுடன், உங்களுக்கு விருப்பமான முறையில் பணிகளை செய்வதும் பயனளிக்கும். நிறைவு பெறாமல், பாதியில் விடப்பட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, இப்பொழுது அவற்றை முடிப்பது அவசியம். நெருங்கிய நபர்களுடன் தொடர்பு கொள்ளும் பொழுது, கவனம் தேவை. உணர்ச்சி வசப்படாமல் இருப்பதும், பேசும் பொழுது கவனமாக இருப்பதும், அவசியம். உங்கள் கடின உழைப்பும், நேர்மையும், உங்களுக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும். எந்தப் பிரச்சினையும் இன்றி, உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
மேஷம் ராசி - காதல்/திருமணம்
காதல் உறவில் சில சிக்கல்கள் எழலாம். எனினும், உங்கள் சாதுர்யமான நடவடிக்கைகளால், இவற்றை சுமூகமாகத் தீர்த்துக் கொள்வீர்கள். இது போலவே, உறவுகளுடன் சீரிய முறையில் நடந்து கொண்டு, பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்த்து விடுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சாதாரணமாகவே செல்லும். ஆனால். திருமணம் சற்று தாமதமாகும் வாய்ப்புள்ளது. எனவே திருமண வயதில் உள்ளவர்கள், மேலும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை
மேஷம் ராசி - நிதி
பண விஷயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம் இது. அதிக லாபம் பெறலாம் என்று குறுக்கு வழியில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். அது இழப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே, முதலீட்டுத் திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே, அவை குறித்த செயல்பாடுகளில் இறங்குங்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, கடன் வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன் பூஜை
மேஷம் ராசி - வேலை
உங்கள் கவனக் குறைவு காரணமாக, பணியில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை செய்து முடித்த பிறகு, அவற்றை மீண்டும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்வது நல்லது. மேலதிகாரிகளின் அறிவுறைகளைப் பின்பற்றி, குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பது அவசியம். சக பணியாளர்களிடம், கவனமாகவும், சுமுகமாகவும் நடந்து கொள்வதும் நன்மை தரும்.
மேஷம் ராசி - தொழில்
தொழில் முனைவோர், அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது அவசியம். வாடிக்கையாளர்களின் சில பணிகளை நீங்கள் செய்து முடிக்கத் தவறுவீர்கள்; அல்லது உங்கள் பணி, அவர்களுக்குத் திருப்தி தராமல் போகலாம். தொழில் கூட்டாளிகள், சில சிறு விஷயங்களில், உங்களை உணர்ச்சி வசப்பட வைத்து, உங்கள் பொறுமையை சோதிப்பார்கள். பொது மக்களிடம் வாக்குவாதம் எதையும் செய்யாமல், உங்களைக் காப்பாற்றிக் கொள்வதும் அவசியம்.
மேஷம் ராசி - தொழில் வல்லுனர்
தொழில் வல்லுனர்கள் இந்த மாதம், எதிர்பார்ப்பு எதுவும் இன்றி, நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். விடா முயற்சி, உங்களை, உங்கள் துறையில் சிறப்பாகப் பணியாற்ற வைக்கும். எனினும், நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும், சவால்கள் நிறைந்ததாக இருக்கக் கூடும். நீங்கள் விரும்பிய ஆதரவும் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். எனினும், தன்னம்பிக்கை இழக்காமல் பணியாற்றுவது, நீடித்த நன்மை தரும்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: கணபதி பூஜை
மேஷம் ராசி - ஆரோக்கியம்
ஆரோக்கியம் திருப்தி தரும். ஏதாவது சிக்கல்கள் எழுந்தாலும், முறையான உணவுப் பழக்க வழக்கங்கள் மூலம், அவற்றிலிருந்து நீங்கள் விடுபடலாம். நடைப்பயிற்சி மேற்கொள்வதும், உடல்நிலையை மேம்படுத்தும். .
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
மேஷம் ராசி - மாணவர்கள்
கல்வியைப் பொறுத்தவரை, இது சுமாரான மாதம் ஆகும். ஒழுக்கமாக நடந்து கொண்டு, முறையாகப் படிப்பதன் மூலம், நீங்கள், கல்வி தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்கலாம். பெற்றோர்களின் வழிகாட்டுதலும், தவறுகள் ஏற்படாமல் தடுக்க உதவும். வெளியில் சுற்றுவதையும், நண்பர்களுடன் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பதும், நன்மை தரும். இப்பொழுது, உங்களில் சிலர் விருதுகளைப் பெறும் வாய்ப்பும் உள்ளது.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,12,14,15,17,18,19,20,22,23,24,29.
அசுப தினங்கள்: 4,5,11,13,16,20,21,25,26,27,28,30

Leave a Reply