Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

November Monthly Libra Rasi Palangal 2019 Tamil

November 11, 2019 | Total Views : 610
Zoom In Zoom Out Print

துலாம் ராசி - பொதுப்பலன்கள்

துலாம் ராசி அன்பர்களுக்கு, இது முன்னேற்றமான மாதமாக அமையும். இப்பொழுது நீங்கள், மிகவும் ஆற்றலுடன் செயலாற்றுவீர்கள். உங்கள் கடின உழைப்பு பாராட்டு பெறும். குறைந்த முயற்சிகள் கூட, நிறைந்த பலன்களைப் பெற்றுத் தரும். வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கும். சிலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அது உங்களுக்குத் திருப்தி தரும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், நீங்கள் ஆன்மீக சேவைகளையும் செய்வீர்கள். உங்களது பேச்சு மற்றும் உரையாடல் திறனை மேம்படுத்திக் கொள்வது நல்லது. உங்கள் ஆரோக்கியம் சற்றே பாதிப்படையும் வாய்புள்ளது. 

துலாம் ராசி - காதல்/திருமணம்

காதல் வயப்பட்டவர்களுக்கு, சோதனைகள் ஏற்படலாம். இந்தத் தருணத்தில், தேவையற்ற பதட்டங்களைத் தவிர்த்து, அமைதி காப்பது நல்லது. உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை, சொந்த முயற்சிகளின் மூலம் தீர்த்துக் கொள்ள முயலுங்கள். கணவன் மனைவி இடையே, அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். திருமணத்திற்குத் தக்க வரன் அமையும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை  

துலாம் ராசி - நிதி

பொருளாதர முன்னேற்றம் நம்பிக்கை தரும். பணத்தை முதலீடு செய்யும் எண்ணமிருந்தால், அதைத் தாமதப் படுத்தாமல், உடனடியாகச் செய்வது நல்லது. இவை உங்களுக்கு லாபம் தரும். இதன் மூலம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எதிர்கால நலன் கருதி, வீட்டு மனை வாங்குவதற்காக பணத்தை சேமிப்பீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: அங்காரகன் பூஜை  

துலாம் ராசி - வேலை

பணியில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும்.  சவாலான சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்; ஆனால், அவற்றிலும் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்களில் சிலருக்கு புதிய வேலை வாய்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது, பிரச்சினைகளைத் தீர்ந்து, ஆறுதல் தருவதாக அமையும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சந்திரன் பூஜை  

துலாம் ராசி - தொழில்

தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் முனைப்புடன், சிறப்பாகப் பணியாற்றினால், நல்ல லாபம் காண முடியும். புதிய உத்திகளைக் கையாள்வது,  தொழிலுக்கு ஆதரவு தரும்.  

துலாம் ராசி - தொழில் வல்லுநர்

துலாம் ராசி தொழில் வல்லுநர்களுக்கு, முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். இந்த மாதம் உங்கள் செயல்திறன், கடந்த காலத்தை விட மேம்பட்டு இருக்கும். இது, சிறந்த பணியாளர் என்ற பெயரையும், தகுதியையும் உங்களுக்குப் பெற்றுத் தரும். கடந்த காலத்தில் வேலை தொடர்பாக ஏதாவது தவறுகள் செய்திருந்தால், அவற்றை உணர்ந்து இப்பொழுது திருத்திக் கொள்வது நல்லது. 

துலாம் ராசி - ஆரோக்கியம் 

உடல்நிலை மந்தமாக இருக்கக் கூடும். பதட்டம் காரணமாக சில சிக்கல்கள் எழலாம். எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும். அதே நேரம், குடும்பத்தினருக்கும் அடிக்கடி ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படலாம். இதுவும் உங்களுக்குக் கவலை அளிக்கக் கூடும்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

துலாம் ராசி - மாணவர்கள் 

கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். இது தொடர்பான பல நல்ல வாய்ப்புகளும் உங்களுக்குக் கிடைக்கும். விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்கான வாய்ப்புகளையும் இப்பொழுது நீங்கள் பெறுவீர்கள். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,12,14,18,19,22,23,24,28,29
அசுப தினங்கள்: 4,5,11,13,14,15,16,20,21,25,26,27,30

banner

Leave a Reply

Submit Comment