விருச்சிகம் ராசி - பொதுப்பலன்கள்
விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் வாழ்வில் நன்மை தரும் பல நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கையுடன் செயலாற்றி, முழுமையான பலன்களைப் பெறுவீர்கள். அயல் நாட்டினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நிறைவேறும்; அது தரும் உற்சாகம், உங்களை மேலும் சிறப்பாகப் பணி புரிய வைக்கும். வெளி நாடு செல்லும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். அதிக முயற்சிகள் இன்றியே, நீங்கள் பதவி உயர்வும் பெறக் கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு, அதிக லாபம் ஈட்டும் ஆர்வமும் ஏற்படும். உங்கள் நோக்கங்கள் பலவும் நிறைவேறும். குடும்பத்திலும் உற்சாகம் நிலவும். எனினும் உங்களிடம் எளிதில் எரிச்சலடையும் போக்கு காணப்படும். இதனைக் கட்டுப்படுத்துவது அவசியம். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம் ராசி - காதல் /திருமணம்
காதலர்களுக்கு இடையே நிலவும் உறவு சுமுகமாக இருக்கும். பிறருடன் உள்ள உறவை நன்கு பராமரிக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் நிறைவேறும். உறவினர்களுடன் ஏற்படும் சிக்கல்களை, நீங்கள் நன்கு கையாளுவீர்கள். குடும்ப வாழ்க்கையும் இனிமையாகவே இருக்கும்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை
விருச்சிகம் ராசி - நிதி
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகள் எதிர்பார்த்த லாபங்களைத் தரும். உங்கள் பணத் தேவைகள் எளிதாக நிறைவேறும். ஆனால், குடும்பத்தினருக்கான மருத்துவ செலவுகளை எதிர் கொள்ள வேண்டி வரலாம். வண்டி, வாகனங்கள் பராமரிப்பிற்காகவும், பணம் செலவாகலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: புதன் பூஜை
விருச்சிகம் ராசி - வேலை
அலுவலகத்தில் உங்கள் பங்களிப்பிற்கான உரிய அங்கீகாரம் பெறுவீர்கள். இதற்கான பாராட்டும் உங்களுக்குக் கிடைக்கும். நூதன முறை செயல்பாடுகள் மற்றும் சக ஊழியர்களுடன் கொண்டுள்ள நல்ல உறவு போன்றவற்றின் மூலம், தடைகளை நீக்கி, எடுக்கும் முயற்சிகள் யாவிலும் வெற்றி காண்பீர்கள். இது, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அளிக்கும். எனினும், நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு உள்ளதால், அதனைத் தவிர்ப்பது நல்லது.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை
விருச்சிகம் ராசி - தொழில்
தொழிலில் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கும் இது போலவே அதிகரிக்கும். தொழிலை மேம்படுத்த நீங்கள் விவேகத்துடன் முதலீடுகளும் செய்வீர்கள். எனினும், இலக்குகளை அடைவதற்கு விடா முயற்சி தேவை. தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதும், பிறருடன் மிக நெருக்கமாகப் பழகுவதைக் குறைத்துக் கொள்வதும் நன்மை தரும்.
விருச்சிகம் ராசி - தொழில் வல்லுநர்
விருச்சிக ராசி தொழில் வல்லுநர்களுக்கு, முன்னேற்றம் திருப்தி தரும். பேச்சுத் திறன் மூலம், உங்கள் செல்வாக்கையும் வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் ஆக்கபூர்வமான முயற்சிகள், வெற்றியும், பாராட்டும் பெற்றுத் தரும். கலாச்சாரம் போன்ற விஷயங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம் ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை பாதிக்கப்படலாம். இது உங்களுக்குக் கவலை அளிக்கக் கூடும். அதிக பயணங்களின் காரணமாக, உடல் சோர்வு ஏற்படலாம். இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
விருச்சிகம் ராசி - மாணவர்கள்
பாடங்களை முறையாகப் படிப்பதன் மூலம், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காணலாம். மனதில் நினைப்பதை எல்லாம் வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், சில நேரங்களில் நீங்கள் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, நீங்கள் விவேகத்துடன் நடந்து கொள்வது அவசியம். மற்றபடி, இந்த மாதம் மகிழ்ச்சியாகவே கழியும்.
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,12,14,18,19,22,23,24,28,29
அசுப தினங்கள்: 4,5,11,13,15,16,17,20,21,25,26,27,30

Leave a Reply