கன்னி ராசி - பொதுப்பலன்கள்
கன்னி ராசி அன்பர்களுக்கு, பொதுவாக இது சாதகமான மாதமாக அமையும். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வது, வாழ்வில் வளம் பெற உதவும். அறைகுறையாக நிறைவேற்றப்பட்ட அல்லது ஏறத்தாழக் கைவிடப்பட்ட வேலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து முடிப்பது, நல்ல பயன் தரும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது, புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இது உங்களுக்கு நன்மை பயக்கும். இந்தக் காலகட்டத்தில், மற்றவர்களின் பிரச்சினைகளை நீங்கள் தீர்த்து வைப்பீர்கள். ஆனால் உங்களது சில பிரச்சினைகள், கேள்விக்குறியாகவே இருக்கும். பொருளாதார விஷயங்களில் கண்டிப்பு தேவை. நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். விருந்து விசேஷங்களில் பழைய நண்பர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி ராசி - காதல் / திருமணம்
நீங்கள், உங்கள் காதல் துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்துவீர்கள். திருமணமான தம்பதியர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களிடையே, நல்ல புரிந்துணர்வும், நெருக்கமும் காணப்படும். குடும்பத்தில் வசதிகள் நிறைந்திருக்கும். திருமணத்திற்குத் தக்க வரன் அமையும் வாய்ப்புள்ளது.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பகவான் பூஜை
கன்னி ராசி - நிதி
உங்கள் பொருளாதார நிலை, ஸ்திரத்தன்மை பெறும். பண லாபம் கிடைக்கும். இது, உங்கள் பொறுப்புக்களை நன்கு நிறைவேற்ற உதவும். எனினும், பண விஷயங்களில் அவசரப்பட்டு முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால், பணத்தை சேமிக்க முயற்சி செய்வது நல்லது.
உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: சூரியன் பூஜை
கன்னி ராசி - வேலை
பணியில் நிச்சயத் தன்மையும், வளர்ச்சியும் காண உகந்த காலம் இது. உங்களுக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகள் மூலம், உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். இது பணியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும். முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் பொழுது, சாதூர்யமாகச் செயல்பட வேண்டியது அவசியம். சில நேரங்களில், உங்கள் பேச்சுக்களே உங்களுக்கு எதிராக அமைய வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: புதன் பூஜை
கன்னி ராசி - தொழில்
உங்கள் சுய முயற்சியும், மேன்மையான திட்டங்களும், தொழில் முன்னேற்றம் காண உதவும். உரிய நேரத்தில் நீங்கள் எடுக்கும் சரியான முடிவுகள், அனுகூலமான பலன்களைப் பெற்றுத் தரும். புதிதாக வரும் வாய்ப்புகளை இழந்து விடாதீர்கள்; அவற்றை நான்கு பயன்படுத்துவது, நலன் பயக்கும்.
கன்னி ராசி - தொழில் வல்லுநர்
கன்னி ராசி தொழில் வல்லுநர்கள், குறிப்பிடத்தக்க வளர்ச்சி காண்பார்கள். பல வகை ஆதரவுகளையும் பெறுவார்கள். எனினும், துவக்கிய பணிகளை, எந்தக் காரணத்திற்காகவும் முடிக்காமல், அறைகுறையாக நிறுத்தி விடவேண்டாம். குறித்த நேரத்தில் பணிகளை முறையாக முடித்து விட்டு, பின்னர் அடுத்த வேலையை மேற்கொள்வது நன்மை தரும்.
கன்னி ராசி - ஆரோக்கியம்
உடல்நிலை நன்றாக இருக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவை கட்டுக்குள் இருக்கும். உங்கள் நோய் எதிர்ப்புத் திறனும் சிறப்பாகவே செயல்படும். இதனால், எந்த சூழ்நிலையையும் நீங்கள் சிறப்பாகக் கையாளுவீர்கள். எனினும், குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை.
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை
கன்னி ராசி - மாணவர்கள்
மாணவர்களின் கல்வி சிறக்கும். படிப்பு சீராகச் செல்லும். நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். உங்கள் கல்வி நிறுவனம் நடத்தும் விளையாட்டு நிகழ்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை
சுப தினங்கள்: 1,2,3,6,7,14,15,17,18,19,22,23,24,28,29.
அசுப தினங்கள்: 4,5,8,9,10,11,12,13,16,20,21,25,26,27,30

Leave a Reply