AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

November Monthly Gemini Rasi Palangal 2019 Tamil

November 11, 2019 | Total Views : 592
Zoom In Zoom Out Print

மிதுனம் ராசி - பொதுப்பலன்கள்

மிதுன ராசி அன்பர்களே! கடந்த காலத்தில் அலுவலகப் பணிகளில் நீங்கள் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான நேரமாக இந்த மாதம் அமையும். உங்கள் பணி, திருப்தி தருவதோடு அங்கீகாரமும் பெற்றுத் தரும். உங்கள் முயற்சியால், வேலையில் நீங்கள் உயர்ந்த நிலையை எட்டுவீர்கள். சமூக சேவைகள் செய்வதற்கான வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். மனதில் உள்ளதை அப்படியே வெளியே பேசும் உங்கள் இயல்பு, தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும். குடும்பத்தில் பிரச்சினைகள் வராமல் இருக்க, உங்கள் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். பயணங்களின் பொழுது உடனிருப்பவர்கள், உங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்தில், அதிகக் கேள்விகளைக் கேட்கும் வாய்ப்புள்ளது. அது போன்ற தருணங்களில், நீங்கள், முடிந்த அளவு, பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம் ராசி - காதல்/திருமணம்

காதலர்களுக்கு இது சாதாரண காலமாக இருக்கும். சில நேரங்களில் நீங்கள் நடந்து கொள்ளும் முறை, உங்கள் துணைக்கு விசித்திரமாகத் தோன்றக் கூடும். வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிகளை புரிந்து நடந்து கொள்வது, தம்பதிகளிடையே இணக்கத்தை மேம்படுத்தும். குடும்ப முன்னேற்றம் உங்களுக்கு திருப்தியை அளிக்கும். இந்த நேரத்தில், மனதில் அதீத தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு, தக்க துணை அமையும் வாய்ப்புள்ளது.

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன்  பூஜை

மிதுனம் ராசி - நிதி

உங்கள் பொருளாதார நிலை மேம்படும். பணப் புழக்கம் சரளமாகக் காணப்படும். நீங்கள் பிறருக்குக் கடனாகக் கொடுத்த தொகைகள் வசூலாகும். நீங்கள் வாங்கிய  கடன்களையும் முறையாக அடைப்பீர்கள். நிதி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் ஆதாயம், உங்களுக்குத் திருப்தி தரும். எனினும், செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இந்த விஷயத்தில் கவனம் தேவை. 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: ராகு பூஜை  

மிதுனம் ராசி - வேலை

பணியில் ஏற்படும் முன்னேற்றம், மனநிறைவு தரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, வேலைத்துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகும். ஆனால், சக பணியாளர்களுடன் வாக்கு வாதங்களிலோ, சண்டை சச்சரவுகளிலோ ஈடுபட வேண்டாம். வாடிக்கையாளர்களுடனும் சுமூகமான உறவைப் பராமரியுங்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு  பூஜை  

மிதுனம் ராசி - தொழில்

தொழில் முன்னேற்றம் உற்சாகம் தரும். தொழிலை விரிவுபடுத்தும் உங்கள் திட்டங்கள், வெற்றி பெறும். கூட்டாளிகளின் நல்லாதரவும் உங்களுக்குக் கிடைக்கும். எனினும், புதிய தொழில் அல்லது பொறுப்புகளில், நீங்கள் அறிவாற்றலுடன் செயலாற்ற வேண்டியிருக்கும்  

மிதுனம் ராசி - தொழில் வல்லுநர்

தொழில் வல்லுநர்கள் பிறருக்கு எரிச்சல் தரும் வகையில் நடந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் ஒவ்வொரு செயலும், மற்றவர்களால் கூர்ந்து கவனிக்கப்படும். எனவே, பணியிடத்தில் உங்கள் மதிப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வேலைகளை முடிப்பதில் சில குழப்பங்கள் ஏற்படக் கூடும் என்பதால், நீங்கள் நன்கு சிந்தித்து, தெளிவுடன் பணியாற்றுவது அவசியம். 

மிதுனம் ராசி - ஆரோக்கியம் 

இந்த மாதம் முழுவதும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். காய்கறிகளை விரும்பி உண்பதன் மூலம், உங்கள் உடல்நிலை மேலும் சிறக்கும்.

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: புதன் பூஜை 

மிதுனம் ராசி - மாணவர்கள் 

கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி அளிக்கும். கல்வி நிறுவனத்தில், பிறருடன் நீங்கள் கொண்டுள்ள நல்லுறவு, உங்களுக்குத் திருப்தி தரும். மேற்படிப்பிற்கான உங்கள் முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சமூக சேவைகளில் பங்கெடுத்துக் கொண்டு தொண்டாற்றுவதன் மூலம், நீங்கள் நற்பெயர் சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது.

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,2,6,7,8,9,10,12,14,15,17,18,19,22,23,24,28,29
அசுப தினங்கள்:  3,4,5,11,13,16,20,21,25,26,27,30

banner

Leave a Reply

Submit Comment