AstroVed Menu
AstroVed
search
search

November Monthly Cancer Rasi Palangal 2019 Tamil

dateNovember 11, 2019

கடகம் ராசி - பொதுப்பலன்கள்

கடக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம், மிதமான பலன்கள் கிடைக்கக் கூடும். வேலைத்துறையில் சிறந்த வாய்ப்புகள் உருவாகும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டு, நிலுவையில் இருக்கும் பணிகளை நீங்கள் செய்து முடிப்பீர்கள். சிலர் சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புள்ளது. இந்தக் காலகட்டத்தில், எந்த செயலையும் நீங்கள் உறுதியாக மேற்கொள்ள வேண்டும். அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆவணங்களில் கையெழுத்திடும் முன் அனைத்தையும் சரி பார்ப்பது அவசியம். உங்களிடம் சிறிது பதட்டம் இருக்கக் கூடும். பிறர் உங்களைத் தவறாக நினைக்கவும், தவறாக எடை போடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அனைத்து விஷயங்களிலும் நீங்கள் சமயோசிதமாகச் செயல்படுவது நல்லது. உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதும் அவசியம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  

கடகம் ராசி - காதல் / திருமணம்

காதல் வாழ்க்கை சுமாராக இருக்கும். துணைக்கு உங்களிடம், அதிக எதிர்பார்ப்பு இருக்கும்; எனவே காதல் உறவை நீங்கள் கவனமாகக் கையாள வேண்டும். குடும்ப வாழ்க்கை முன்பை விட, அதிக அமைதியுடன் கழியும். வாழ்க்கை வசதிகளும்  அதிகரிக்கும். திருமண வயதில் உள்ளவர்கள், சற்றே பொறுமை காப்பது அவசியம்.  

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பகவான் பூஜை  
 
 

கடகம் ராசி - நிதி

நிதி நிலையில் ஸ்திரத்தன்மை காணப்படும். பொருளாதரத்தில் படிப்படியான முன்னேற்றமும் இருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த முதலீடுகள் மூலம், கூடுதல் ஆதாயங்களைப் பெறுவீர்கள். எனினும், இப்பொழுது பணத்தை முதலீடு செய்வதற்கு முன், லாப நஷ்டங்களை நன்கு அறிந்து கொண்டு, பின்னர் முதலீடு செய்யுங்கள். 


உங்கள் நிதிநிலை மேம்படப் பரிகாரம்: சுக்கிரன் பூஜை 

கடகம் ராசி - வேலை 

இந்த மாதம் நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள்; பணிகளை விரைந்து முடிப்பீர்கள்; இதன் மூலம் நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நன்கு நிறைவேற்றுவீர்கள். இது, நன்மதிப்பையும், பணிக்கான உத்திரவாதத்தையும் உங்களுக்கு அளிக்கும். பணியிடத்தில் உங்கள் நல்லுறவும் மேம்படும். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை  

கடகம் ராசி - தொழில்

உங்கள் தொழில் யுக்திகள் சிறப்பாகச் செயல்படும். இந்த நேரத்தில் நீங்கள் தன்னம்பிக்கையுடனும், பொறுமையுடனும் செயலாற்றினால், நிச்சயம் வெற்றி பெறலாம். உங்கள் கூட்டாளிகளின் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிப்பதும்,  நிலுவையில் இருக்கும் பணிகளை விரைந்து முடிப்பதும், தொழில் முன்னேற்றத்திற்கு மேலும் துணை புரியும். 

கடகம் ராசி - தொழில் வல்லுநர்

தொழில் வல்லுநர்களுக்கு நல்ல முன்னேற்றமும், வெற்றியும் தரும் காலம் இது எனலாம். வேலை முன்னேற்றத்திற்கு, உங்கள் முயற்சிகள் துணை புரியும். பணி தொடர்பாகப் பயணங்கள் மேற்கொள்ள, உங்களுக்கு வாய்ப்புகளும் கிடைக்கும். எனினும், இந்த நேரத்தில் உங்களுக்கு, மற்றவர்களின் ஆதரவு தேவைப்படும். வேலை விஷயங்களில் நீங்கள் தெளிவாக இருப்பதும் அவசியம்.  

கடகம் ராசி - ஆரோக்கியம் 

உடல்நிலை நன்றாக இருக்கும். நீங்கள் பின்பற்றும் கண்டிப்பான உணவு முறை, உங்கள் ஆரோக்கியத்தை மேலும் சிறப்பாக்கும். இதனால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது, உடலில் ஏற்படும் சிறு பிரச்சினைகளையும் எளிதில் சமாளிக்க உதவும். எனினும், கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு உடலில் ஹீமோகுளோபின் சற்று குறைவாக இருக்கக் கூடும். எச்சரிக்கை தேவை. 
 
ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

கடகம் ராசி - மாணவர்கள்
 
உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள, உகந்த மாதம் இது. நீங்கள் உங்கள் பாடங்களை, குறித்த நேரத்தில், முறையாகப் படித்து முடிப்பீர்கள். இதனால் உங்கள் மதிப்பு உயரும். பொதுவாக, உங்கள் கல்வி முயற்சிகள் யாவிலும் வெற்றி காண்பீர்கள்.
  
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,2,3,9,10,12,14,15,17,18,19,22,23,24,28,29
அசுப தினங்கள்: 4,5,6,7,8,11,13,16,20,21,25,26,27,30


banner

Leave a Reply