Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW
Search

November Monthly Aquarius Rasi Palangal 2019 Tamil

November 11, 2019 | Total Views : 671
Zoom In Zoom Out Print

கும்பம் ராசி - பொதுப்பலன்கள்

கும்ப ராசி அன்பர்களே! உங்கள் முன்னேற்றத்திற்கு இது உகந்த மாதம் ஆகும். பணியிடத்தில் உங்கள் நேர்மை மற்றும் உறுதி காரணமாக, அங்கீகாரமும் பெருமையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை கணிசமாக உயரும். பாதியில் கைவிடப்பட்ட வேலைகளைக் கூட, சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் தோன்றும். இவ்வாறு பெற்ற  அறிவை, பிறருடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணமும் உருவாகும். வாழ்க்கையை இன்பகரமாக வாழ வேண்டும் என்ற உங்கள் நோக்கமும் நிறைவேறும். உங்கள் தேவைகளை, உரியவர்களிடம் கேட்டுப் பெறுவதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை. நீங்கள் பயணம் செய்வதையும், மக்களை சந்திப்பதையும் விரும்புவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

கும்பம் ராசி - காதல் / திருமணம்

புதிய காதல் அரும்புவதற்கு அனுகூலமாக காலம் இது. இதன் மூலம் உங்கள் மனம் கவரும் துணையை நீங்கள் கண்டு கொள்ளும் வாய்ப்பு  கிடைக்கும். அவருடன் உங்கள் ஆழ்ந்த உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். காதல் உறவுகள், திருமண பந்தமாக மாறும் வாய்ப்பும் உள்ளது. குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு, தக்க வரன் அமையும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: புதன் பூஜை  

கும்பம் ராசி - நிதி

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இப்பொழுது, பணத்தையும் நன்கு சேமிக்க முடியும். நீண்ட காலப் பலன் தரும் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேருவீர்கள். உங்கள் தனிப்பட்ட தேவைகளும், குடும்பத் தேவைகளும் நிறைவேறும். வங்கியில் கடன் பெற விண்ணப்பித்திருந்தால், அதற்குத் தேவையான ஒப்புதல் கிடைக்கும். சிலர் ஆடம்பரச் செலவுகளையும் செய்வீர்கள்.  

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: கேது பூஜை  

கும்பம் ராசி - வேலை

அலுவலகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள், சரியானவையாக இருக்கும். விடாமுயற்சி, உங்களுக்கு வெற்றி தேடித் தரும். உங்கள் பணி, நிறுவனத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் உங்களுக்கு அங்கீகாரமும், புகழும் கிடைக்கும். அவசரமாக முடிவெடுக்க வேண்டிய தருணங்களில், சிறிது பொறுமை காப்பது நல்லது. வேலையில், நீடித்த வெற்றியும், வளர்ச்சியும் பெற நீங்கள் ஸ்திரத் தன்மையுடன் பணியாற்றுவது அவசியம்.  

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பகவான் பூஜை  

கும்பம் ராசி - தொழில்

தொழிலில் லாபம் காணலாம். அதில் ஏற்படும் வளர்ச்சியும் திருப்திகரமாக இருக்கும். பிறருடன் தொழில் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தும் பொழுது, அமைதியாகப் பேசுவது நல்லது. தொழில் நடத்தத் தேவையான பணம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.  

கும்பம் ராசி - தொழில் வல்லுநர்

கும்ப ராசி தொழில் வல்லுநர்கள் வெற்றி பெறக் கடுமையாக உழைப்பார்கள். அதே நேரம், ரகசிய எதிரிகள் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டு, உங்கள் நன்மதிப்பிற்குக் களங்கம் விளைவிக்கும் சாத்தியமும் உள்ளது. சிலர், தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வார்கள். 

கும்பம் ராசி - ஆரோக்கியம் 

சரியான உணவு முறையைக் கடைபிடித்தால், உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் பற்றிய குறிப்புகளை வல்லுனர்களிடம் இருந்து அறிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றினால், மேலும் நன்மை பெறலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையாக மருந்து உட்கொள்வது அவசியம்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

கும்பம் ராசி - மாணவர்கள் 

கல்வி திருப்திகரமாக இருக்கும். நீங்கள் பாடங்களை முறையாகவும், குறித்த நேரத்திற்குள்ளும் படித்து முடிக்க, ஆசிரியர்கள் வழிகாட்டுவார்கள். உங்களில் சிலர் இன்பச் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். அது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். உங்கள் மேற்படிப்பு குறித்த முடிவிற்கு, உங்கள் பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். உங்களுக்கு, கல்விக்கான உதவித் தொகை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,12,14,15,17,18,19,28,29

அசுப தினங்கள்: 4,5,11,13,16,20,21,22,23,24,25,26,27,30

banner

Leave a Reply

Submit Comment