AstroVed Menu
AstroVed
search
search

November Monthly Capricorn Rasi Palangal 2019 Tamil

dateNovember 11, 2019

மகரம் ராசி - பொதுப்பலன்கள்

மகர ராசி அன்பர்களுக்கு, இது சாதகமான மாதமாக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். உங்கள் இலட்சியங்களும், ஆசைகளும் நிறைவேறும். உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில் நீங்கள் உங்களையே முன்னேற்றிக் கொள்வீர்கள்.  நேர்மையான முயற்சிகளின் மூலம், அசையாச் சொத்துக்களையும் வாங்குவீர்கள். நல்ல மனிதர் சிலருடன், நீடித்த நட்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுடன் இருப்பதையே பெருமையாகக் கருதுவார்கள். எனினும், முதலீடுகள் செய்யும் பொழுது கவனம் தேவை. பயணங்களின் பொழுது, உங்கள் உடைமைகளை இழக்கும் வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருக்கவும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

மகரம் ராசி - காதல் / திருமணம்

துணையுடன் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள மிகச் சிறந்த காலம் இது. குடும்ப வாழ்க்கை சீராகச் செல்லும். குடும்பத்தினருடன், இணக்கமும், நல்லுறவும் காணப்படும். நீங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது, உணர்வு ரீதியான பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை  

மகரம் ராசி - நிதி

பண வரவு அதிகரிக்கும். நீங்கள் செய்யும் பணிக்கான ஊதியம் போன்ற வருமானங்களும் உயரும். பணப்புழக்கம் மேம்படும். உங்கள் முயற்சிகளின் மூலம், நீங்கள் அசையாச் சொத்துக்களையும் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் அதிகரிக்கும் செல்வ வளம் கண்டு, நண்பர்கள் சிலர் பொறாமைப்படக் கூடும். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: குரு பூஜை  

மகரம் ராசி - வேலை

வேலையில், எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். உங்கள் பணிகளை முறையாக முடிக்க, நீங்கள் கடும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள்; நடந்து கொள்வீர்கள். இதன் மூலம், உங்கள் தகுதியை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். முக்கியப் பணி தொடர்பாக, குறுகிய காலத்திற்கு நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: செவ்வாய் பூஜை 

மகரம் ராசி - தொழில்

தொழில் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். நீங்கள் செய்து முடிக்கும் சில முக்கியப் பணிகள், உங்களுக்கு திருப்தி அளிக்கும். தொழிலில் மேலும் வளர்ச்சி காண, விளம்பர உத்திகளை மேற்கொள்வது போன்றவற்றில் நீங்கள் முனைப்பாக இருப்பீர்கள். உங்கள் பணிகளில், தொழில் கூட்டாளிகளை முழுமையாக ஈடுபடுத்துவதன் மூலம், அவர்களின் உதவியையும், ஆதரவையும் நீங்கள் பெறலாம். 

மகரம் ராசி - தொழில் வல்லுநர்

பணியில் அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற காலகட்டம் இது. பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம், நீங்கள் இலக்குகளை எட்ட முடியும். நீங்கள் மேற்கொள்ளும் சிறிய பணிகளுக்கும், பாராட்டு தேடிவரும். இது உங்களுக்குத், திருப்தியையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும். நிலுவையில் இருக்கும் பணிகளை முடிக்க, முக்கியத்துவம் அளிப்பது, நன்மை தரும்.  

மகரம் ராசி - ஆரோக்கியம் 

உடல்நிலை சீராக இருக்கும். உங்களுக்கு ஏற்ற, வழக்கமான உணவு முறையைப் பின்பற்றுங்கள். உடற் பயிற்சிக்கென தேவையான நேரம் ஒதுக்குங்கள். உலர் பழங்களை அதிகமாக உட்கொள்ளுங்கள். இவை, உங்கள் ஆற்றலை அதிகரிக்க உதவும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

மகரம் ராசி - மாணவர்கள் 

கல்வி முன்னேற்றம் மனநிறைவு தரும். மேற்படிப்பிற்காக சிறந்த கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். உரிய நேரத்தில் உங்களுக்கு, கல்விக்கான பண உதவியும் கிடைக்கும். சில தொண்டு நிறுவனங்கள், உங்கள் கல்வி முயற்சிகளுக்கு நிதி உதவி செய்ய முன் வருவார்கள். உங்கள் வெற்றி, ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தன்னம்பிக்கையுடனும், அமைதியுடனும் செயல்படுவது மேலும் நன்மை தரும்.  

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,12,14,15,17,18,19,23,24,28,29
அசுப தினங்கள்: 4,5,11,13,16,20,21,22,25,26,27,30


banner

Leave a Reply