Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

November Monthly Pisces Rasi Palangal 2019 Tamil

November 11, 2019 | Total Views : 637
Zoom In Zoom Out Print

மீனம் ராசி - பொதுப்பலன்கள்

மீன ராசி அன்பர்கள், தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான மாதமாக, இது இருக்கும். உங்களது இலட்சியங்கள் சில நிறைவேறும். முதலீடுகள் லாபம் தரும். பணியில் பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு மிக்கவர்களின் அறிமுகம் ஏற்படும். நீங்கள் பல இடங்களுக்குப் பயணம் செல்லக்கூடும். முக்கியப் பணி ஒன்றிற்காக, நீண்ட தூர பயணமும் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். தான தருமங்கள் செய்வதில், நீங்கள் ஈடுபடுவீர்கள்; இதன் மூலம் மகிழ்ச்சியும் காண்பீர்கள். புனித தலங்களுக்கு யாத்திரையும் செல்வீர்கள். எனினும், அதிக  வேலைகள் காரணமாக நீங்கள் எரிச்சல் அடையக்கூடும். சில பணிகளும், முடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கக்கூடும். சளி, இருமல் மற்றும் கண்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மீனம் ராசி - காதல் / திருமணம்

நீங்கள் மிகவும் முயற்சி செய்து, உங்களுக்கேற்ற துணையைக் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்சிகள் நடைபெறும். வாழ்வில் வளங்களைப் பெற்று மகிழ்வீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். உல்லாசப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். இது பொழுதுபோக்காக அமைவதோடு கூட, உங்களுக்கு அதிக மகிழ்ச்சியையும் தரும் 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சந்திரன் பூஜை  

மீனம் ராசி - நிதி

பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளைக் காண்பீர்கள். முதலீடுகள் நல்ல ஆதாயம் தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வீட்டை புனரமைக்கவும், அதை அலங்கரிக்கவும், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கவும் நீங்கள் பணம் செலவு செய்வீர்கள். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: குரு பூஜை  

மீனம் ராசி - வேலை

பணி நிமித்தமாக, எதிர்பாராத சில பயணங்களை நீங்கள் மேற்கொள்ள நேரலாம். இது உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடனான உறவு மேம்படும். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். சவாலான பணிகளை மேற்கொண்டு, நீங்கள், உங்கள் மதிப்பை நிரூபித்துக் காட்டுவீர்கள். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: அங்காரக பூஜை  

மீனம் ராசி - தொழில்

கடின உழைப்பின் மூலம் தொழிலில் முன்னேறுவீர்கள். எனினும், குறித்த நேரத்திற்கு முன்னரே உங்கள் பணிகளை முடித்து விடுவது நல்லது. உங்கள் பணி குறித்து வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டும் வாய்ப்புள்ளது. இதனை நீங்கள் புத்திசாலித்தனமாகச் சமாளிக்க வேண்டும். பல விதங்களிலும் பதட்டம் ஏற்படும் என்பதால், நீங்கள் கவனமாக இருப்பது அவசியம்.  

மீனம் ராசி - தொழில் வல்லுநர் 

தொழில் வல்லுநர்களுக்கு இந்த மாதம், வெற்றியும், அங்கீகாரமும் கிடைக்கும். இது முன்னேற்றத்திற்குச் சாதகமான நேரம் என்பதால் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் முயற்சிகளின் மூலம், நீண்ட நாள் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர் பாலினத்தவரின் ஆதரவையும் பெறுவீர்கள். 

மீனம் ராசி - ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண்கள், வயிறு, மார்பு போன்ற இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தகுந்த முன்னெச்சரிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.  

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை 

மீனம் ராசி - மாணவர்கள் 

மாணவர்கள் இந்த மாதம் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். நீங்கள் கடின முயற்சி செய்து பாடங்களைப் படித்து முடிப்பீர்கள். அதிக மதிப்பெண்களையும் பெறுவீர்கள். தவிர்க்க முடியாத சூழல் காரணமாக சில நேரங்களில் தாமதங்கள் ஏற்படலாம். இருப்பினும், உங்களால் மெதுவாக இலக்குகளை அடைய முடியும்.  

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 1,2,3,6,7,8,9,10,12,14,15,17,18,19,22,23,28,29

அசுப தினங்கள்: 4,5,11,13,16,20,21,24,25,26,27,30   

banner

Leave a Reply

Submit Comment