Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

November Month Rasi Palan 2018 in Tamil

October 6, 2018 | Total Views : 8,284
Zoom In Zoom Out Print

கும்பம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Kumbam Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுடைய திறமையில் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். மிக   மெதுவாகவே வெற்றி கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில்  அவசர முடிவுகளை எடுக்காதீர்கள். அசையா  சொத்து வாங்குவீர்கள். ஆனால் உள்ளுக்குள் ஏற்படும்  பயத்தின் காரணமாக மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். இந்த மாதத்தில் உணர்ச்சிவசப்பட்ட நிலை காணப்படும் என்பதால்  எந்த ஒரு விஷயத்தையும் மனதில் போட்டு வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களுடைய சிந்தனைகள் நியாயமானதாக இருக்கும். ஆனால் நடைமுறையில் உங்கள் எண்ணங்களை முறையாக உங்களால் செயல்படுத்த முடியாமல் போகலாம். இதனால் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். ஆனால் இந்த மாதத்தின் மத்தியில் உங்களுடைய தனித்திறன்கள் வெளிச்சத்திற்கு வரும். எனவே உங்கள் பணிகளை எந்தத் தாமதமும் இல்லாமல் தொடர்ந்து செய்யுங்கள். இந்த மாதம் உங்கள் ஆரோக்கிய நிலை சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Mesha Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

இந்த மாதம்  கடுமையான பணிகளை எதிர்கொள்ள வேண்டிய கடினமான நேரமாக இருக்கும். சாத்தியக்கூறுகள் பற்றி முறையாக அறியாமல் வாக்குறுதி அளிப்பதை தவிர்க்க வேண்டும். உங்கள் பதட்ட நிலை அதிகபட்சமாக உயரும். இதனால் மேலும் சில சிக்கல்கள் உருவாகலாம். குடும்ப நடவடிக்கைகளைக் கையாளும் போது அமைதியாக  நடந்து கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் குறைவான  தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அதனால்   நீங்கள் விரும்பிய பலன்களை அடைய முடியாமல் போகலாம்.  உங்களை ஆற்றலோடு வைத்துக்கொள்ள தியானப் பயிற்சி சிறந்த தீர்வாக அமையும்.  சமூக வாழ்க்கை மந்தமானதாக இருக்கலாம். சில விஷயங்களை திரும்பப் பெற கால அவகாசம் தேவைப்படலாம். உங்களுடைய ஆரோக்கிய நிலை இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கடகம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Kadagam Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

கடந்த காலம் நீங்கள் செய்த முயற்சிகளினால், இந்த மாதம் அதற்கான துல்லியமான பலன்களைப்  பெற ஒரு சரியான காலம் ஆகும். நீங்கள் உங்கள் மனதை நேர்மறையான எண்ணங்களில் திசைதிருப்ப வேண்டும். இதனால் உங்களுக்கு அதிசயங்கள் நிகழும். உங்கள் அறிவு உங்களை எதிர்மறை எண்ணங்களிலிருந்து பாதுகாக்கும். உங்கள் குடும்பத்தில் நடக்கும் புனிதமான நிகழ்வுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.  நீங்கள் செய்யும் முயற்சிகள் சரியானதென்று நிரூபிப்பதற்கான  தெளிவான கண்ணோட்டத்தோடு  இருப்பீர்கள். சிறந்த வருமானத்திற்காக ஊக முதலீடுகளில் நீங்கள் நுழையலாம். நீங்கள்  விரும்பியபடி ஆடம்பரமான நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். உங்கள் பொது பேச்சுக்கள் மக்களிடத்தில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். உங்கள் வழிகாட்டுதலை நேர்மையாகப் பின்பற்றுவார்கள். உங்கள் உடல்நிலை இந்த மாதம் நன்றாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மகரம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Makara Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

இந்த மாதம் அனைத்திலும்  நீங்கள் வெற்றி அடைவீர்கள். நீங்கள் உங்கள் மன இறுக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும், ஒருவேளை இதனால் உங்களுடைய தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சில சிக்கல்கள் உருவாகலாம். உங்கள் நண்பர்கள் மற்றும்  நல விரும்பிகளுக்கு சிறப்பு உதவிகளைச் செய்வதற்கு தயாராகுங்கள். உங்கள் வெளிப்படையான  இயல்பு உங்கள் சிந்தனைகளில் தெளிவை ஏற்படுத்தும். நிலுவையிலுள்ள பணிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை. இந்த மாதத்தில் அவை முடிக்கப்பட்டு விடும். அனைத்து விஷயங்களிலும் உங்களுடைய அறிவியல் பூர்வமான அணுகுமுறையால் தந்திரங்களைப் புரிந்துகொள்ளும் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அண்டை வீட்டாரிடமும் உறவினர்களுடனும் உங்கள் தகவல்தொடர்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு முன்னேறும். உங்கள் உடல்நலத்தைப் புறக்கணிக்காதீர்கள். உங்கள் அன்றாட விஷயங்களில் மந்தமாக இருப்பீர்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மிதுனம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Mithunam Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

இந்த மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைக் காணும் வகையில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் காணப்படும்.. உங்கள் சமூக வட்டத்தில் ஒரு சுமுகமான   உறவை நீங்கள் பராமரிக்க வேண்டும். மக்கள் உங்களை மரியாதையுடன் நடத்துவார்கள். தங்கள் சேவையையும் ஆதரவையும் உங்களுக்கு வழங்கி உதவுவார்கள். உங்கள் குடும்பப் பொறுப்புகளில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளுங்கள்.  வாழ்க்கையில் அவற்றிற்கு  முன்னுரிமை கொடுங்கள். உங்கள் தனிப்பட்ட, சமூகம்  மற்றும் தொழில் என  எல்லா வகையான வேலைகளிலும் வளைந்து கொடுங்கள். பல தரப்பட்ட கலாச்சாரங்களிலிருந்து வரும் பல்வேறு வகையான மனிதர்களோடு நீங்கள் உங்களை தொடர்புபடுத்திக் கொள்வீர்கள். சிறந்த நன்மையை அடைய ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் முக்கியமானதாக அமையும். இந்த மாதத்தில் உங்கள் உடல் நலத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

சிம்மம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Simha Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

உங்கள் பணிகளை  முடித்தபிறகு நீங்கள் மிகவும்  சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். பெரும்பாலான வேலைகளில் நீங்கள் வழிகாட்டியாக இருப்பதால் மகிழ்ச்சியடைவீர்கள். விளையாட்டுகளில் உங்களுடைய ஆர்வம் உங்களுக்கு சில வாய்ப்புகளை வழங்கும். உங்கள் நம்பகமான உறவுகள் உங்களை உற்சாகமடைய வைக்கும். செலவினங்களைக் கண்காணியுங்கள். செலவுகள் இந்த மாதத்தில் அதிகம் உயரும். உங்கள் சமூக வட்டத்திலிருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களுடைய மேல் அதிகாரிகள் உங்களுடைய திறமையை பாராட்டுவார்கள். நெடுங்காலமாக நிலுவையில் இருந்த உங்களுடைய கடன்களை அடைப்பீர்கள். மதிப்புமிக்க உறவுகளை உங்கள் தகவல் தொடர்பால் சிறந்த முறையில் பராமரிப்பீர்கள். உடல்நலம் இந்த மாதம் சாதாரணமாக காணப்படும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

துலாம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Thulam Rasi Palan in Tamil 2018

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

பொதுப்பலன்கள்

இந்த மாதம் ஒரு அற்புதமான காலமாக இருக்கும். உங்கள் நேரத்தைச் சரியாகவும் திறம்படவும் பயன்படுத்த வேண்டும். உங்கள் நண்பர்கள் அல்லது சக மனிதர்கள் உங்களின்  ஒவ்வொரு வார்த்தையையும் கவனிக்கலாம். மக்கள் உங்களை மிகவும் மதித்து நம்புவார்கள். தன்னிச்சையான உங்களுடைய செயல்கள் பாராட்டப்படும். நீங்கள் ஒவ்வொரு வேலையிலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். இந்த மாதத்தில் நீங்கள் ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு மகிழ்வீர்கள். உங்களுடைய தனிப்பட்ட பயணம் உங்களுக்கு மன அமைதியையும் மன நிறைவையும் தரும். ஆராய்ச்சி  செய்ய நினைக்கும் உங்கள் தனிப்பட்ட ஆர்வம் பூர்த்தி ஆகும். இந்த மாதம் உங்கள் துணையுடன் திருமண பந்தம் உறுதிப்படும். ஆரோக்கிய நிலை சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மீனம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Meenam Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

நீங்கள் இந்த மாதத்தில் உணர்ச்சிரீதியாக பாதிக்கப்படுவீர்கள். ஒவ்வொரு பிரச்சினையையும் பற்றி அதிகம் யோசிக்காதீர்கள். உங்கள் செயல்களில் உங்களுடைய வெளிப்படைத்தன்மை  எல்லாச் சிக்கல்களையும் திறம்பட தீர்ப்பதற்கு போதுமானதாக இருக்கும்.  நீங்கள் புதிய மாற்றங்களைக் காணலாம். இஇந்த மாற்றங்கள்  சாதகமான முறையில் செயல்படும். உங்கள் கடின முயற்சிகள் மூலம் நீங்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.  உங்கள்  அதிர்ஷ்டத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் சமூக வாழ்க்கை மிகவும் அமைதியாக இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கு உங்கள் தகவல்தொடர்புகள் உதவிகரமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் இலக்குகளை வெற்றிகரமாக அடைவீர்கள். உங்கள் உடல்நலம் மெது மெதுவாக தேறும்.  இது உங்களுக்கு மன அமைதியைக் கொடுக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

தனுசு நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Dhanusu Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

உங்கள் வெளிப்படைத்தன்மை இந்த மாதத்தில் பிரச்சினைகளை உருவாக்கலாம். இந்த மாதம்  பெரும்பாலான பிரச்சினைகளில் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உங்கள் இலக்குகள் மற்றும் சாதனைகள் மீது கவனம் செலுத்துங்கள். நீங்கள் உங்கள் இலக்குகளுக்கு மிக அதிக தூரத்தில் இருந்தாலும் உங்களுடைய இடைவிடாத  முயற்சிகள் மூலம் அவற்றை நெருங்குவீர்கள். உங்கள் கடமைகளை ஒன்றிற்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தைகள் மற்றும் செயல்களை கட்டுப்படுத்துங்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களிடமிருந்து குறைந்த அளவிலான ஆதரவை மட்டுமே பெறுவீர்கள். உங்களின் பெரும்பாலான  பிரச்சினைகளை நீங்கள் தன்னிச்சையாக தீர்ப்பீர்கள். உங்களுடைய பயணம் இந்த மாதத்தில் பெரிய அளவில் பயன்தராது.  செலவுகள் உங்கள் சேமிப்பை கரைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும், ஆனால் தேவையற்ற பதட்டம் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

விருச்சிகம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Viruchigam Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

உங்கள் வளங்களைச் சிறப்பாக பயன்படுத்துவதற்கு மிகச் சிறந்த மாதமாகும். உங்கள் வேலை திறம்பட முடிக்க உங்களுடைய அனுபவங்கள் உங்களுக்கு உதவும். கடுமையான பணிகளைக்  கையாள்வதில் காணப்படும் உங்கள் துணிச்சல் உங்களுக்கு புதிய நம்பிக்கையையும் ஆர்வத்தையும்  அளிக்கும். தினசரி கடமைகளை முறையாக செய்வீர்கள். பெரும்பாலான சமயங்களில் நீங்கள் பதட்டமின்றி காணப்படுவீர்கள். உங்கள் சமூக வட்டத்திலிருந்து ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் குறிப்பிட்ட சில தகவல் தொடர்புகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பீர்கள். அது உங்களைப் பாதுகாக்கும். சமூக கூட்டங்களில் பங்கேற்பதற்கு நீங்கள் வளைந்து கொடுத்து செல்ல நேரிடும். நீங்கள் எதிர்பார்த்தபடி  உங்கள் வழக்கு விவகாரங்கள் தீரும். உங்கள் உடல் நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்குக் கவலையை அளிக்கக்கூடும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

ரிஷபம் நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Rishabam Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

இந்த மாதம் கிட்டத்தட்ட எல்லா வகையிலும் சாதகமானதாக இருக்கும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் முழுமையாக  இருக்கும். உங்கள் நண்பர்களுடனோ அல்லது சக ஊழியர்களுடனோ சிறப்பான நேரத்தைச் செலவிடுவீர்கள். அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாளுவதற்கு தயாராக இருங்கள். உங்கள் சமூக வட்டத்தில் உங்களுடைய புகழ் இந்த மாதம் அதிகரிக்கும். நீங்கள் விருந்து உபசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். சமூக சேவையிலும் ஈடுபடுவீர்கள். உங்கள் கண்டிப்பான கோட்பாடுகளால் எல்லாச் செயல்களிலும் வெற்றிபெறுவீர்கள்.  உங்கள் அண்டை வீட்டாருடன் நல்ல உறவை வளர்த்து அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். உங்கள் கூட்டாளியுடன் இணைந்து ஒரு சொத்தை  வாங்க நேரலாம். இந்த மாதம் உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கன்னி நவம்பர் மாத ராசி பலன் 2018 - November Matha Kanni Rasi Palan in Tamil 2018

பொதுப்பலன்கள்

இந்த மாதம் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு அமைதியான நேரமாகவும் அமையும். இந்தக் காலம் தடைகளை அழித்து வெற்றி மற்றும் அடையாளத்தை வழங்கும். உங்களுடைய வளர்ச்சியில் உங்கள் தகவல் தொடர்பு  முக்கிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு செயலையும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். உங்களுடைய பொது வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை உங்கள் துணிச்சலால் காப்பாற்றிக்கொள்வீர்கள். வேலையில் விரும்பிய முடிவுகளைப் பெற உற்பத்தி செயல்திறனோடு இருங்கள். உங்கள் சமூக வட்டம் விரிவடையலாம். திடீரென்று பழைய நண்பர்களையோ அல்லது சக ஊழியர்களையோ சந்திக்க நேரிடும். ஒவ்வொரு முயற்சியும் அவற்றுக்கு உண்டான விளைவை இந்த மாதத்தில் தரும். சிறந்த உடல் நலத்திற்குச் சரிவிகித  உணவுமுறையை பின்பற்றுங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

banner

Leave a Reply

Submit Comment
  • laliithaa krish
    I need to know my good time march 16th 1966 born on Tuesday at thirunelvelli kovilpati nalandhula village 100 km from kovilpati born at home morning 456 Tuesday uthirada natchathiram Makara rasi laliithaa krish my name
    November 2, 2018
    • Vinothkumar

      Namaste,

      We would suggest you to have a consultation with our astrologer.  Please note that you can get all the answers to your questions from our astrologer during your "Live Astrologer Consultation." You can use the link below to get more information about Live Astrologer Consultation:

      http://www.astroved.com/Live-Astrology-C34.aspx

      For any further information or assistance, you can contact us at Support@astroved.com or call us at +9144-43419898 / +1 412 927 3625. We are available 24 hours a day.

      Thanks & Regards,
      Astroved Customer Support.
      Skype ID: Astroved CRM
      http://www.astroved.com 

      November 3, 2018