இந்த மாதம் பாரம்பரிய தொழிலை விரிவுபடுத்த சாதகமாக இருக்கலாம். உங்கள் தொழிலில் போட்டிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
கூட்டுத் தொழில் தொடர்பான முதலீடுகளை மேற்கொள்ளும்போது கவனமாக செயல்படுவது நல்லது.
வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கலாம். சக பணியாளர்களுடன் நல்லிணக்கமான உறவு நிலவும்.
மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறன் மேம்பட்டு, கல்வியில் சிறந்து விளங்கலாம். பொதுவாக உயர்ந்த பதவிகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த மாதம் நல்ல பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.