Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Mesham Rasi Palan

October 7, 2020 | Total Views : 532
Zoom In Zoom Out Print

மேஷ ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் வாழ்க்கை புதிய எண்ணங்களால் நிறைந்திருக்கும் மாதம் இது. உங்கள் நற்பெயர், மற்றும் பிறருடன் உங்களுக்கு உள்ள உறவு போன்றவை, உங்கள் பணிகளை சரியாக நிறைவேற்ற உதவும். நீங்கள் குறிப்பாகத் தீட்டும் திட்டங்களினால், உங்கல் செயல்கள் யாவும், முறையாக நிறைவேறும். மற்றவர்களையும் நன்கு வேலை வாங்கி, நீங்கள் பணிகளை விரைவாகவும் முடித்து விடுவீர்கள். வேலை நிமித்தமாக, சிலர், நீண்ட தூரப் பயணங்களையும் மேற்கொள்ளக் கூடும். சொத்து வாங்க வேண்டும் என்ற சிலரது நீண்ட நாள் ஆசையும் கூட, இப்பொழுது நிறைவேறலாம். உங்களையும், உங்கள் தொழிலையும் முன்னேற்றுவதற்கான புதிய உத்திகளையும், நீங்கள் இப்பொழுது வளர்த்துக் கொள்ளலாம். உங்கள் நடவடிக்கைகள், பிறருக்கு உத்வேகத்தையும் அளிக்கக்கூடும். இதனால், பிறர் தங்கள் தனிப்பட்ட விஷயங்கள், பிரச்சனைகள் குறித்தும், உங்களிடம் ஆலோசனை பெறலாம். உடல்நிலை குறித்த சிறு பிரச்சனைகளை நீங்கள் சமாளித்து விட்டால், உங்கள் ஆரோக்கியமும் சீராகவே இருக்கும். இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

மேஷ ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

உங்கள் மனதுக்குப் பிடித்தவரிடம், உங்கள் காதலை, தாமதம் செய்யாமல், தெரியப்படுத்த வேண்டிய நேரம் இது. மூத்தவர்களின் அனுமதி மற்றும் ஆதரவுடன், உங்களில் சிலர், குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவும், இது உகந்த தருணம் ஆகும். இப்பொழுது சிலர், அவர்களது உயிர்த் துணையை, திடீரென்று, சந்திக்கவும் நேரிடலாம். அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வது, உங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியையும் அளிக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் நடக்கக்கூடும். அவற்றில் நீங்கள் ஆர்வத்துடன் பங்கு கொள்வீர்கள்.  

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: சுக்ர பகவான் பூஜை

மேஷ ராசி நிதி:

நிதிநிலை திருப்தி தரும். இந்த நேரத்தில், உங்கள் பணத் தேவைகள் அனைத்தையும், நீங்கள் எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, முதலீடுகளையும் செய்வீர்கள். தேவைக்கேற்ப, உறவினர்களுக்கு நீங்கள் பொருளாதார உதவியும் செய்யக்கூடும். நண்பர்களிடமிருந்து, வர வேண்டிய தொகையை வசூலிக்கவும் கூடும். சிலர், ஆன்மீக விஷயங்களுக்காக செலவுகளும் செய்யலாம்.     
நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை     

மேஷ ராசி வேலை:

உங்களுக்கு வேலை பளு இருக்கலாம். பணியில் உங்கள் முன்னேற்றமும் மெதுவாகவே இருக்கக் கூடும். இருப்பினும், சில சூழ்நிலைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கக் கூடும். மேலும் உங்கள் தன்னம்பிக்கையும், பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க உதவும். நிலுவையில் உள்ள வேலைகளிலும் நீங்கள் கவனம் செலுத்தி, அவற்றை விரைவாகவும் முடித்து விடுவீர்கள். இந்த நேரத்தில், நீங்கள், நல்ல உற்பத்தித் திறனை எட்டுவது அவசியம். கடந்த காலத்தில் மற்றவர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளை எல்லாவற்றையும், இப்பொழுது நீங்கள் சரி செய்து விடுவீர்கள். இது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

 வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: பகவான் கணபதி பூஜை     

மேஷ ராசி தொழில்:

உங்கள் பணிகளில் நீங்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து, கடும் முயற்சிகள் செய்து, அவற்றை முடிக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் நீங்கள் பொறுமை காப்பதும் அவசியம். இந்தக் காலகட்டத்தில், கிரகங்களின் பாதிப்பு காரணமாக, உங்கள் தொழில் வளர்ச்சியில் பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. மேலும், தொழிலில் நல்ல வாய்ப்புகள் உருவாவதற்கு முன்னர், நீங்கள் தாமதங்களை சந்திக்க நேரலாம். இதுவும் உங்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தைத் தரலாம். எச்சரிக்கையாக இருக்கவும்.

மேஷ ராசி தொழில் வல்லுநர்கள்:

மேஷ ராசி தொழில் வல்லுநர்களுக்கு, நிர்வாகத்தில் உள்ளவர்களுடன் சுமுக உறவு நிலவும். இது வேலையில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பணியில் உங்களுக்குப் பாராட்டுதல்களும், நிதி ஆதாயங்களும் கிடைக்கும். சில குறிப்பிட்ட பணிகள் தொடர்பாக, உயர் அதிகாரிகள் சிலர், உங்களுடன் ரகசியமாகத் தொடர்பு கொள்ளக் கூடும். உங்கள் செயல் திட்டம், உங்களுக்கு ஆதரவாக அமையும். அதே நேரம், உங்களது புதிய எண்ணங்கள், உங்கள் பணிகளை வெற்றிகரமாகச் செய்து முடிக்க உதவும்.  

மேஷ ராசி ஆரோக்கியம்:

உங்கள் உடல்நிலை நன்றாகவே இருக்கும். உடற்பயிற்சி செய்வது உங்களை மேலும் ஆரோக்கியமாக வைக்க உதவும். அந்தந்த காலத்தில் கிடைக்கும் பழங்களை உட்கொள்வது, உங்கள் உடல் ஆற்றலை அதிகரிக்கும். சக்தியை அதிகரிக்கும் பானங்களும் உங்கள் ஆற்றலைக் கூட்ட உதவும்.  

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: பகவான் வைத்தியநாதர் பூஜை     

மேஷ ராசி மாணவர்கள்:

கல்வியை பொறுத்தவரை, இது உங்களுக்குச் சாதகமான மாதமாக இருக்கும். படிப்பு, தேர்வு போன்றவற்றில், நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகளும், ராங்க் எனப்படும் தரமும் கிடைக்கக் கூடும். ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டும், உங்களுக்கு அபார திருப்தியைக் கொடுக்கலாம். ஆனால் கல்வி குறித்த சில விஷயங்களை அலட்சியப்படுத்தி விட வேண்டாம். இது உங்களை பாதிக்கக்கூடும். இந்த நேரத்தில், நீங்கள், உடன் பயிலும் மாணவர்களுக்கு பாடங்களில் எழும் சந்தேகம் தொடர்பான உரிய ஆலோசனைகளையும் வழங்கக் கூடும்.     

படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை           

சுப தினங்கள்: 1, 3, 6, 10, 13, 18, 20, 27, 29, 30
அசுப தினங்கள்: 8, 9, 17, 22, 25 and 28
 

banner

Leave a Reply

Submit Comment