Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

ரிஷபம் நவம்பர் மாத ராசி பலன் 2020 | November Matha Rishabam Rasi Palan

October 7, 2020 | Total Views : 632
Zoom In Zoom Out Print

ரிஷப ராசி நவம்பர் மாத பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்கள், வாழ்க்கையை நன்கு அனுபவிப்பதற்கு மிகவும் சிறந்த மாதமாக இது அமையும், எனலாம். இந்த நேரத்தில், உங்கள் திறமைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக உங்கள் பேச்சு, தகவல் தொடர்புத் திறன் போன்றவை மிகச் சிறப்பாக இருக்கும். எனவே இவற்றை உங்களுக்குச் சாதகமாக நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களில் சிலர், ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டு, மன அமைதியும், ஆற்றலும் பெறலாம். உங்கள் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். செலவுகளும், இதற்குச் சமமாக இருக்கக் கூடும். உங்கள் நடவடிக்கைகள், வேலை, தொழில் வளர்ச்சிக்கு உதவும். எனவே அவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வது நல்லது. அன்புக்குறியவர்களிடம் கோபமாகவோ, தவறாகவோ நடந்து கொள்ள வேண்டாம். இது உங்கள் நற்பெயரைக் கெடுத்து விடும். உங்கள் ஆரோக்கியமும், நீங்கள் ஆற்றலுடன் செயல்படும் வகையில், நன்றாகவே இருக்கும்.  இந்த மாத ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என்பதை முழுமையாக அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

 

ரிஷப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

உங்கள் காதலர் அல்லது காதலியிடம் நீங்கள் வைக்கும் கோரிக்கை, ஏற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பு அதிகம். நீங்களும் உங்கள் காதலர் அல்லது காதலியை நன்கு புரிந்து கொள்வீர்கள். அவருக்கு உங்கள் உண்மைக் காதலின் ஆழத்தையும் உணர்த்தி நம்பிக்கை ஊட்டுவீர்கள். குடும்ப மகிழ்ச்சியும் திருப்தி தரும். உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியும் முன்னேற்றமும், வாழ்க்கையை நல்ல முறையில் நடத்த உதவும். 

மண வாழ்க்கையில் நல்லிணக்கத்துக்கான இறை வழிபாடு: செவ்வாய் பகவான் பூஜை

ரிஷப ராசி நிதி:

பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். கடன் போன்றவை வாங்காமல், நீங்கள் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதே நேரம், உங்களுக்கு வர வேண்டிய சில தொகைகளும், எதிர்பாராத வகையில், உங்களிடம் வந்து சேரும். ஆனால், உங்கள் கௌரவத்திற்காக, உறவினர்களுக்கு நிதி உதவி செய்வதைத் தவிப்பது நல்லது.   

நிதிநிலையை மேம்படுத்துவதற்கான இறை வழிபாடு: புத பகவான் பூஜை

ரிஷப ராசி வேலை:

உங்கள் அறிவுபூர்வமான முடிவுகள் காரணமாக, வேலை முன்னேற்றம் சிறப்பாக இருக்கக் கூடும். சிலருக்கு, அவர்கள் பார்க்கும் வேலையில், சில மாற்றங்கள் ஏற்படலாம். புதிய வேலைக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. நிலைமையை மேம்படுத்த, ஒவ்வொரு வாய்ப்பையும், இப்பொழுது சரியாகப் பயன்படுத்த முயலுங்கள். உயர் அதிகாரிகள், உங்களது சிறந்த செயலாற்றலை பாராட்டுவார்கள். இது பணியில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை உங்களுக்குத் தரக் கூடும்.       

வேலை முன்னேற்றத்திற்கான இறை வழிபாடு: சனி பகவான் பூஜை     

ரிஷப ராசி தொழில்:

புதிய தொழில் கூட்டுறவுகள், உங்களுக்குத் திருப்தி அளிக்கலாம். உங்கள் வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் ஆர்வத்துடன் உழைத்து, எதிர்பார்த்த இலக்குகளை எளிதாக எட்டுவீர்கள். ஆனால் உங்கள் கூட்டளிகள், நீங்கள் கொடுத்த சில வேலைகளைத் தட்டிக் கழிக்கலாம். எனவே, அவர்களை நீங்கள், திறமையாகவும், நாசூக்காகவும் கையாள வேண்டும். நீங்கள் வாக்களித்த படி, முக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு முன்னுரிமை அளியுங்கள்.     

ரிஷப ராசி தொழில் வல்லுநர்கள்:

ரிஷப ராசி தொழில் வல்லுநர்களின் செயலாற்றல், அவர்கள் விருப்பபபடி, அவர்களுக்கு ஒரு தனி அடையாளத்தையே, இந்த மாதம் ஏற்படுத்தித் தரலாம். ஆனால் கடும் வேலை பளு காரணமாக, நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். எனவே, அதிக நேரம் செலவழித்து, அவற்றை நீங்கள் செய்து முடிப்பது அவசியம். உங்கள் வார்த்தைகளை அல்லது நீங்கள் வாய் வழியாகக் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கூட, உயர் அதிகாரிகள், தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடும். ஆகவே, இது போன்ற வாக்குறுதிகளை அளிப்பது குறித்து, கவனமாக இருக்கவும்.  

ரிஷப ராசி ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியத்தில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். தனிப்பட்ட பயணம் என்பது, மனதை லேசாக்கி, வலிமை கூட்டக் கூடும் என்பதால், நீங்கள் அதை இப்பொழுது மேற்கொள்வது நல்லது. ஆனால், சாலை வழியாக நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக, வேறு வகைப் பயணங்களைத் தேர்ந்தெடுக்கவும். 

ஆரோக்கிய வாழ்வுக்கான இறை வழிபாடு: சூரிய பகவான் பூஜை  

ரிஷப ராசி மாணவர்கள்:

தேர்வுகளை நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, முடிப்பீர்கள். மேற்படிப்பையும் நீங்கள் ஆர்வத்துடன் பயின்று, நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது. சில மாணவர்களுக்குப், புகழ் பெற்ற நிறுவனங்களிடமிருந்து கல்வி உபகாரத் தொகை, அல்லது நிதி உதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. 

படிப்பில் சிறந்து விளங்குவதற்கான இறை வழிபாடு: தேவி சரஸ்வதி பூஜை          

சுப தினங்கள்: 4, 8, 9, 11, 13. 19, 21, 28, 30
அசுப தினங்கள்: 7, 17, 18, 22, 29

banner

Leave a Reply

Submit Comment