Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் மீன ராசி | 2022 New Year Rasi Palangal Meenam

November 9, 2021 | Total Views : 305
Zoom In Zoom Out Print

2022 புத்தாண்டு மீன ராசி பொதுப்பலன்கள்:

மீன ராசி அன்பர்களே! கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்க நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது  அவசியம். திருமண வயதில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்களுக்கான துணையைக் கண்டு கொள்வார்கள். உங்களுக்கு கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் கடினமாக உழைத்து, உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள், பதட்டம் ஏதும் இன்றி காணப்படுவார்கள். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள். 

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

வேலை / தொழில்:

உத்தியோகத்தில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். கடின உழைப்பும் அதற்கேற்ப முன்னேற்றமும் காணப்படும். அரசுத் துறையில் பணியாற்றும் அன்பர்கள் தங்கள் திறமையைப் பயன்படுத்துவதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற இயலும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். குறிப்பாக  ஆயத்த ஆடை மற்றும் உணவு சம்மந்தப்பட்ட துறைகளில் தொழில் செய்பவர் என்றால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்பவர்கள் சிறந்த ஆதாயங்களைப் பெறுவார்கள். தொழில் நிமித்தமாக உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள நேரும். உங்களின் இந்தப் பயணம் அனுகூலமானதகாவும் அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத் தருவதாகவும் இருக்கும். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் ஏற்பட சனி பூஜை

காதல் / திருமணம்:

இளம் வயது மீன ராசி அன்பர்கள் காதல் வயப்படும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் காட்டும் அன்பும் அக்கறையும்  உங்கள் உறவை வலுப்படுத்தும். உங்கள் துணையை உங்கள் பக்கம் ஈர்க்கச் செய்யும். திருமணமான தம்பதிகள் நல்லிணக்க  உறவை, சுமுகமான உறவை தக்க வைத்துக் கொள்ள பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 

திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை

நிதி நிலைமை:

கலைத் துறையில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்கள் துறையில் பிரகாசிப்பார்கள். இசை, நடனம் மற்றும் படைப்புத் துறை போன்றவற்றில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.  அதன் மூலம் நீங்கள் பொருளாதார ஏற்றம் காண்பீர்கள். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் வாங்குவது குறித்த செலவுகளை இந்த வருடம் நீங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. தொழில் நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயண வகையிலும் நீங்கள் செலவுகளை சந்திக்க நேரும். 

தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை

மாணவர்கள்: 

பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கடுமையான உழைப்பின் மூலம் முன்னேற்றமும் வெற்றியும் காண இயலும். உயர் கல்வி மாணவர்கள்  விடாமுயற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம்.  விடா முயற்சி உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.  ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனமும் கூடுதல் நேரமும் ஒதுக்கி முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சிறந்த வெற்றிகளைக் காண முடியும்.

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

ஆரோக்கியம்: 

மீன ராசி அன்பர்கள் இந்த வருடம் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உண்ணும் உணவு நமது ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் உங்கள் உணவில் கவனம் அவசியம். முறையான உடற்பயிற்சியும் தியானமும் சத்தான உணவும் உங்கள் உடல் மற்றும் மன  ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு பசு நெய் தீபமேற்றி வழிபாடு செய்து வர ஐஸ்வர்யங்கள் பெருகும். 
வீட்டு வரவேற்பு அறையில் சிறிய யானை சிலை வைத்து தினமும் பார்த்து வர செல்வ சேர்க்கை ஏற்படும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

ராகு பூஜை

சாதகமான மாதங்கள் : 

மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : 

ஜனவரி, பிப்ரவரி,  ஜூலை, ஆகஸ்ட், நவம்பர்,. 

banner

Leave a Reply

Submit Comment