Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மேஷ ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | Mesha Rasi Sani Peyarchi Palangal 2020-2023

December 2, 2019 | Total Views : 5,693
Zoom In Zoom Out Print

அன்புள்ள மேஷ ராசி அன்பர்களே!  தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு பத்தாம்   இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஸ்தானம் தொழில் ஸ்தானம் எனப்படும். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம்  ஸ்தானத்தையும், ஏழு  மற்றும் பன்னிரண்டாம்  ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். நான்காம்  இடம் என்பது பொருள் சார்ந்த விஷயங்களைச் சுட்டிக் காட்டும். ஏழாம்  இடம் வாழ்க்கைத் துணையையும் பன்னிரண்டாம்  இடம் வெளிநாட்டு நிலங்களையும் சுட்டிக் காட்டும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

 

                                       சனிப்பெயர்ச்சி 2020-2023 சுய முன்னேற்றம் காண சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

குடும்பம்:

குடும்பத்தில் இத்தனை நாட்களாக புரிதலின்மை காரணமாக இருந்து வந்த சண்டை சச்சரவு என்ற நிலை நீங்கிவிடும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயமாக இருக்கும். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் காணாமல் போய் விடும். அன்பும் அன்னியோன்யமும்  அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கி வழிய இது ஒன்று போதாதா? உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் உங்கள் பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிப்பார்கள். காதல் உறவுகள் கூட கல்யாண பந்தமாக மாறும் தருணம் இது.

பரிகாரங்கள்:

  • வஸ்திர தானம் செய்யவும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

உடல் நலம்

வயது ஏற ஏற நமது ஆரோக்கியமும் சிறிது ஆட்டம் காண ஆரம்பிக்கும். தளர்வு வந்து நம்மைச் சேரும் என்பது இயல்பான ஒன்று தான். என்றாலும் மேஷ ராசியைச் சார்ந்த வயதானவர்கள் இந்தப் பெயர்ச்சியின் போது உடல் ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உண்ணும் உணவில் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள இயலும். அதிகமாக நீர் அருந்துவதன் மூலம் சுகாதாரமான முறையை பின்பற்றுவதன் மூலமும் நீங்கள் சிறுநீர் பாதை சார்ந்த உபாதைகளில் இருந்து விடுபடலாம்.

பரிகாரங்கள்:

  • அறிஞர்கள் மற்றும் குருமார்களுக்கு பணிவிடை செய்து வரவும். 

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

பொருளாதாரம்

உங்கள் பொருளாதார நிலை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். நிதி நிலை ஆரோக்கியமாக இருக்கும். உங்கள் பொருளாதார நிலை உயர உங்கள் மனைவியும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நான்காம் இடத்தை சனி பார்ப்பதால் நீங்கள் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கு இந்தப் பெயர்ச்சி ஏற்ற காலமாக இருக்கும்.  பங்கு வர்த்தகம் மற்றும் ஊக வணிகம் மூலம் நீங்கள் திடீர் அதிர்ஷ்டம் எதிர்பார்க்க இயலாது. ஆனால் உங்கள் நீண்ட கால முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும்.

பரிகாரங்கள்:

  • ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரீ மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யவும்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தொழில்

கர்ம காரகனாக விளங்கும் சனி பகவான் காரணமாக  இந்த பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்டம் உங்கள் வாசல் கதவை தட்டும். தொழிலில் வளர்ச்சியை அளிப்பார். தொழிலில் சிறந்த வளர்ச்சியும் முன்னேற்றமும் கண்டு நீங்கள் மகிழ்வீர்கள். பதவி உயர்வை எதிர் பார்த்து காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பதவி உயர்வு கிட்டும். வேலை வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருப்பவர்களுக்கு  இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். நல்ல நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிட்டும்.

பரிகாரங்கள்:

  • ஏழை எளியோர்க்கு தானம் செய்யவும்

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

கல்வி

இந்த சனி பெயர்ச்சி மாணவ செல்வங்களுக்கு மிகவும் சாதகமான பெயர்ச்சி என்று கூறலாம். இருந்தாலும் கவனக் குறைவு உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். எனவே நீங்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற்று முன்னேற கவனமும் முயற்சியும் அவசியம். வெளிநாடு சென்று பயில நினைக்கும் மாணவர்களின் எண்ணங்கள் கை கூடும்.  ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டவர்கள் தங்கள் துறையில் வெற்றி கண்டு மகிழ்வார்கள்.

பரிகாரங்கள்:

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்யவும்.

banner

Leave a Reply

Submit Comment