பொதுப்பலன்கள்:
மீன ராசி அன்பர்களே! தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஸ்தானம் லாப ஸ்தானம் எனப்படும். மீன ராசி அன்பர்களுக்கு மிகவும் சாதகமான ஸ்தானத்தில் சனி சஞ்சாரம் செய்வதால் மிகவும் யோகமான பலன்களை அளிக்கவுள்ளார். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ராசியையும் ஐந்தாம் வீட்டையும் எட்டாம் வீட்டையும் பார்வையிடுகிறார்.
முதலாம் வீடு ஜாதகரைப் பற்றி குறிக்கும் ஸ்தானம் ஆகும். ஐந்தாம் வீடு புத்திரம் மற்றும் பூர்வ புண்ணியத்தை சுட்டிக் காட்டும் இடம் ஆகும். எட்டாம் இடம் என்பது ஆயுளைக் காட்டும் பாவம் ஆகும். மீன ராசிக் காரர்களுக்கு தொழிலில் மேன்மை ஏற்படும். திருமண யோகம் கை கூடும். புத்திர பாக்கியம் கிட்டும். நினைத்த காரியம் கைகூடும்.
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
குடும்பம்:
இந்த சனிப் பெயர்ச்சியில் மீன ராசிக் காரர்களின் குடும்பத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையில் அன்னியோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் யாவும் நீங்கி திருமணம் கைகூடும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் வேண்டி நின்றவர்கள் புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குழந்தைகள் தங்கள் தாயாரின் உதவியுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரங்கள்:
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
ஆரோக்கியம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியில் ஆரோக்கியம் சீராகும். உடல் உபாதைகள் மறையும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் எடை குறையும். பெண்களுக்கு கால் மூட்டு வலிகளால் ஏற்பட்ட அவதிகளில் இருந்து விடுதலை கிட்டும். ஆண்கள் குடல் சார்ந்த பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வயதான மீன ராசி அன்பர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும்.
பரிகாரங்கள்:
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
பொருளாதாரம்:
பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன் களை அளிக்கும். நிதிநிலை மேம்படும். சிறந்த முன்னேற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். லாபகரமான போக்கு காணப்படும். நிதி மற்றும் நீதித் துறையைச் சார்ந்தவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிட்டும். ஊக வணிகம் செய்பவர்கள் லாபத்தைக் காண்பார்கள். நிலம் மற்றும் அசையா சொத்துக்களில் நீங்கள் செய்யும் முதலீடுகள் லாபத்தை அளிக்கும்.
பரிகாரங்கள்:
மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
தொழில்:
மீன ராசியைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு இதுவரை இருந்து வந்த வேலைச் சுமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். தொழில் செய்பவர்கள், குறிப்பாக மீன் பண்ணை, எண்ணெய் மற்றும் கடலை வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் சிறிது சரிவைக் காண்பார்கள். தகவல் தொடர்பு, தரகு மற்றும் விளம்பரத்துறையில் பணிபுரிபவர்களுக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும், தொழில் நிமித்தமாக அலைச்சல் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
படிப்பு:
பள்ளி இறுதி படிக்கும் மாணவர்கள் தங்கள் இறுதித் தேர்வினை சிறப்பாக ஆற்றி அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். தாங்கள் சேர நினைக்கும் கல்லூரியில் தாங்கள் சேர நினைக்கும் பாடத் துறையில் சேர்க்கை பெறுவார்கள். மருத்துவ படிப்பு சேர எழுதும் போட்டித் தேர்வாகிய நீட் தேர்வில் வெற்றி பெறுவார்கள். வேதியல் துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவார்கள்.
பரிகாரங்கள்:

Leave a Reply