AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | Viruchigam Rasi Sani Peyarchi Palangal 2020-2023

dateDecember 2, 2019

பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே! தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பெயர்கிறார். இந்த பெயர்ச்சியில், சனி உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த ஸ்தானம் தைரியம், வீரியம் மற்றும் இளய சகோதரத்தை குறிக்கும் ஸ்தானம் ஆகும். இங்கு சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் ஸ்தானத்தையும், ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். ஐந்தாம் இடம் என்பது பூர்வ புண்ணியம் மற்றும் புத்திரத்தை சுட்டிக் காட்டும். ஒன்பதாம் இடம் என்பது பாக்கியத்தை குறிக்கும். பன்னிரெண்டாம் இடம் விரயத்தை சுட்டிக் காட்டும்.

உங்கள் ராசிக்கு மூன்றாம் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் மிகுந்த நற்பலன்களை அளிக்கவிருக்கிறார். நீங்கள் எடுக்கும் அனைத்து புது முயற்சிகளிலும் வெற்றிபெறக்கூடிய அமைப்பை இந்த சனி பெயர்ச்சியானது ஏற்படுத்தி கொடுக்கப்போகிறது. தரகு, பிரயாணம் மற்றும் வெளிநாடு தொடர்புடைய தொழில்களில் ஏற்றத்தை ஏற்படுத்தி கொடுக்க போகிறார்.

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

 

சனிப்பெயர்ச்சி 2020-2023 சுய முன்னேற்றம் காண சனி பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்ளுங்கள்.

விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள்

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

குடும்பம்:

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவார்கள். சொத்துப் பிரச்சனை காரணமாக பிரிந்து இருந்த சொந்தங்கள் உங்களை நாடி வரும் காலம் இது. குடும்ப உறுப்பினர்களிடையே சுமுக மற்றும் நல்லிணக்க உறவு ஏற்படும். கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பலப்படும். அதிக வேலைகள் காரணமாக குழந்தைகளிடம் கலந்து உறவாட நேரம் ஒதுக்க முடியாமல் இருந்த பெற்றோர்கள் சனிப்பெயர்ச்சிக்கு பிறகு அவர்களுடன் அதிக நேரம் ஒதுக்கி கலந்து பழகுவார்கள். காதல் உறவுகள் கல்யாண உறவாக மாறும். வயது முதிர்ந்த விருச்சிக ராசி அன்பர்கள் உடல் உபாதை காரணமாக மருத்துவ செல்வுகளை எதிர்கொள்ள நேரும்.

பரிகாரங்கள்:

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

உடல்நலம்:

சனிப்பெயர்ச்சியின் துவக்கத்தில் ஆண்களுக்கு கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். பெண்களுக்கு கர்ப்ப்பை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது வரலாம். மே 2020க்கு பிறகு விருச்சிக ராசிக்காரர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வயதானவர்கள் சரியான தூக்கம் வராமல் கஷ்டப்பட நேரிடும். தியானத்தின் மூலமாக தூக்கமின்மையை சரி செய்யலாம். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறந்து விளங்கும்.

பரிகாரங்கள்:

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

பொருளாதாரம்:

இந்த சனிப் பெயர்ச்சி காரணமாக உங்கள் தந்தை மற்றும் இளைய சகோதரருக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்கள் வருமானம் பெருகுவதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் காண்பார்கள். கைத்தொழில் செய்பவர்கள் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். ஏற்றுமதித்தொழிலில் புதிய முதலீடுகள் செய்பவர்கள் நல்ல லாபத்தை அடையலாம்.

பரிகாரங்கள்:

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தொழில்:

பணியில் உள்ளவர்கள் சிறப்பாக பணியாற்றி முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு இந்த காலக் கட்டம் ஏற்றதாக இருக்கும். தரகு மற்றும் கமிஷன் போன்ற துறைகளில் தொழில் செய்பவர்களுக்கு தொழிலை மேம்படுத்திக்கொள்ள உகந்த காலகட்டமாக அமையும் இந்த சனிபெயர்ச்சி காலத்தில் எழுத்துத்துறையை சார்ந்தவர்கள் புதிய படைப்புகளை எழுதி வெளியிடுவார்கள். பரம்பரை தொழில் அல்லது தந்தையின் தொழிலையே கொண்டவர்களுக்கு முன்னேற்ற பாதையில் செல்வதற்கு கோள்சார சனி உறுதுணையாக இருக்கிறது.

பரிகாரங்கள்:

மேலும் விவரங்கள் அறிய சனி பெயர்ச்சி பலன்கள்

படிப்பு:

இந்த சனிப் பெயர்ச்சிக் காலத்தில் மாணவ மாணவியர்கள் கல்வியில் முன்பை விட நன்கு பிரகாசிப்பார்கள். அவர்களின் அறிவும் ஆற்றலும் பெருகும். கவனிப்புத் திறன் மற்றும் கிரகிக்கும் திறன் மேம்படும். வணிகவியல் மற்றும் கணினித்துறை மாணவர்களின் படிப்பில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். நாட்டில் இயற்பியல் ஆராய்ச்சி மாணவர்களின் தேவை அதிகரிக்கும். இயற்பியல் துறை ஆராய்ச்சிப் படிப்பு படிப்பவர்கள் தங்களின் ஆராய்ச்சி படிப்பை வெற்றிகரமாக முடிப்பார்கள்.

பரிகாரங்கள்:

பொது பரிகாரம்

Leave a Reply