Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

May Month (Matha) Rasi Palan 2020 in Tamil - மே மாத ராசி பலன் 2020

April 10, 2020 | Total Views : 1,069
Zoom In Zoom Out Print

மீனம் மே மாத ராசி பலன் 2020 | May Month Rasi Palan 2020 Meenam

மீன ராசி பொதுப்பலன்கள் :

மீன ராசி அன்பர்களே! நீங்கள் இந்த மாதம், பெருமளவு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிட்டு மெற்கொள்ளும் நடவடிக்கைகள், கடின முயற்சிக்குப் பின் வெற்றி பெறும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான தருணம் ஆகும். ஊதிய உயர்வும் உங்களுக்குத் திருப்தி தரும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீகப் பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்யக் கூடும். இந்த நேரங்களில், ஆன்மீகத் தலைவர்களையும், குருமார்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம் இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள். உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். எனினும், தாயின் உடல் நிலையில் கவனம் தேவைப்படலாம்.

உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய எங்களுடைய ஜோதிடரை  வல்லுனரை அணுகவும்

 

ரிஷபம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Rishabam Rasi Palan 2020

ரிஷப ராசி பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களது சில நடவடிக்கைகளின் காரணமாக, சிலர் உங்களுக்கு எதிரிகளாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. தன வரவும் சுமாராகவே இருக்கும். உடல் நல பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், ஏதேனும் சிறு ஆரோக்கியக் குறைபாடு வந்தாலும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. குடும்பத்திலும் மன நிம்மதி இன்மை ஏற்படும் வாய்ப்புள்ளதால், குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவதும், அவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதும் நல்லது. இருப்பினும், உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்; இதனால், நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். இதுவரை இருந்த வந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது. உங்களில் சிலர், ஆன்மீகப் பயணம் செல்லக் கூடும். எனினும் வெளியூர் பயணங்களால் அதிக செலவு ஏற்படலாம்.

உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய எங்களுடைய ஜோதிடரை  வல்லுனரை அணுகவும்

 

மிதுனம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Mithunam Rasi Palan 2020

மிதுன ராசி பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் அக்கறை தேவை. வாழ்க்கையில் பலவித குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. பொதுவாக, எந்த ஒரு தொழிலிலும், பணியிலும் தெளிவு இல்லாமல் காணப்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்கக்கூடும். குழந்தைகளாலும் அதிக செலவுகள் ஏற்படலாம். எனவே கட்டுப்பாடு அவசியம். பணம் தொடர்பான விவகாரங்களில் மற்றவர்களிடம் மனகசப்பு ஏற்படலாம். இருப்பினும், இதை எல்லாம் எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதால், உடல் நலனிலும் சிறப்பு கவனம் தேவைப்படலாம். ஆயினும், ஆரோக்கியம் படிப்படியாக சீரடையும். எதிரிகளாலும் தொல்லை ஏற்படலாம் என்பதால், எச்சரிக்கை தேவை. ஆனால் உங்களுக்குச் சாதகமாக, உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான எண்ணங்கள் உங்கள் முயற்சியால் விலகும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். புனித யாத்திரை, பயணங்கள் போக வாய்ப்பு ஏற்ப்படும். பொதுவாக, நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதமாக இது அமையக்கூடும்.

உங்களுடைய தனிப்பட்ட ஜாதக பலன்களை அறிய எங்களுடைய ஜோதிடரை  வல்லுனரை அணுகவும்

துலாம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Thulam Rasi Palan 2020

துலாம் ராசி பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்களே! உங்கள் விடாமுயற்சி வெற்றி தேடித் தரும். தொழில் துறையில் அதிக உழைப்பும், கடும் முயற்சிகளும்  லாபங்களைப் பெற்றுத் தரும். தன வரவும் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயர்பதவிகள் வர வாய்ப்பு அதிகம். கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கலாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். இளைய சகோதரனால் நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு, தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையும். எனினும், காதல் விவகாரங்களில் இந்த மாதம் கவனமாக இருப்பது அவசியம். தொழில் நன்கு நடந்தாலும், இடையிடையே சிறிது மந்தமாகவும் இருக்கலாம். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பொதுவாக இது, ஒரளவு நல்ல பலன்களைத் தரக்கூடிய சுமாரான மாதமாகும்.

மகரம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Magaram Rasi Palan 2020

மகர ராசி பொதுப்பலன்கள்:

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம், மனதில் ஏதோ ஒரு கவலை உங்களை அரித்துக் கொண்டே இருக்கக் கூடும். சிலருக்கு, தலைவலியும், மனக் குழப்பங்களும் உண்டாகலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் ஏற்படக் கூடும். எனவே கவனமாக இருக்கவும். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விலகி இருப்பதும் நல்லது. கோபத்தையும், வீண் வாக்கு வாதங்களையும் தவிர்ப்பதும் அவசியம். உடல் நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எந்த வித ஆரோக்கியக் குறைபாடானாலும், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. எனினும், இளைய சகோதரர்களால் நன்மை ஏற்படலாம். தாய் வழிப் பாசத்தையும் எதிர்பார்க்கலாம். சிலரது வாழ்க்கையில் இப்பொழுது காதல் மலரும் வாய்ப்புள்ளது. குழந்தைகளும் நன்மை அடைவார்கள். உங்களுக்கு தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். சிலர் புனிதப் பயணங்களையும் மேற்கொள்வார்கள். பொதுவாக, சாதகமும், பாதகமும் கலந்த காலமாக இது அமையும்.

 

விருச்சிகம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Viruchigam Rasi Palan 2020

விருச்சிக ராசி பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே! உங்களுக்கு இது, அனைத்து வகைகளிலும் சுமாரான மாதமாகவே இருக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வேலை, தொழிலாக இருந்தாலும் சரி, அது சவால்கள் நிறைந்ததாகவே காணப்படும். முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக அமைய, ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலையில் கவனக் குறைவு காரணமாக நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழக்கவும் நேரிடலாம். இந்த நேரத்தில், எல்லா விஷயங்களிலும் நீங்கள் உறுதியாக இருப்பது நல்லது. பிறருடன் பேசும் பொழுதும், பழகும் பொழுதும், அமைதியான முறையில் நடந்து கொள்வதும் நல்லது. உங்கள் ஆரோக்கியத்தில் முறையான கவனம் தேவை. சில நேரங்களில் அது உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தலாம். இப்பொழுது சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Kadagam Rasi Palan 2020

கடக ராசி பொதுப்பலன்கள்:

கடக ராசி அன்பர்களே! இது உங்களுக்கு ஒரு சராசரியான மாதமாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் சாதாரண பலன்களே கிட்டும். தொழில் சார்ந்த வேலைகளில் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்; அது போன்ற நேரங்களில் கவனமாக நடந்து கொள்ளவும். சிலர், சிறு பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். இதனால் செலவுகளும் ஏற்படலாம். கடுமையான வேலைப்பளுவால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். இதனால் மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். பொருளாதார விஷயங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். எனினும், உங்களால் இவற்றை நல்ல முறையில் கையாள முடியும். தேவையான நேரங்களில் உங்களுடைய கூர்மையான அறிவாற்றலும் உங்களுக்குக் கை கொடுக்கும்.

மேஷம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Mesham Rasi Palan 2020

மேஷ ராசி பொதுப்பலன்கள் 

மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் நிறைந்து காணப்படும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பணவரவும் மிகச் சிறப்பாக இருக்கும். செய் தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். சிலருக்கு வேலை, உயர்பதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அரசாங்கம் தொடர்பான காரியங்கள் கைகூடவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சியும் உண்டாகக் கூடும். தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளிடம் உங்களுக்குப் பாசம் அதிகமாக இருக்கும். எனினும், சகோதரர்களிடம் சற்று கவனமாக இருப்பது அவசியம். சில நேரங்களில் சிறு மனக்குழப்பங்களும் ஏற்படலாம். தொழில் துறையில் சில தடங்கல்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எச்சரிக்கை தேவை. சிலருக்கு பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய தரிசனத்திற்காக சிலர் வெளியூர் செல்லவும் நேரிடும். பொதுவாக இந்த மாதம் உங்கள் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்

கன்னி மே மாத ராசி பலன் 2020 | May Matha Kanni Rasi Palan 2020

கன்னி ராசி பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். உங்கள் கடின முயற்சிகள் திருவினையாகும். உரிய பலன் தரும். பணவரவு நன்றாக இருக்கும். அண்டை, அயலார் சகோதரர் வழியில் நல்ல பலன்களை அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வேலையில் இடமாற்றங்களும் ஏற்படலாம். திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்கும். தந்தையின் உடல்நிலை நலமாக இருக்கும். எனினும், தாய் மற்றும் வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் எச்சரிக்கை தேவை. தொழில் சாதாரணமாக நடைபெறும் என்றாலும், அதில் லாபங்கள் தடைபடக் கூடும். சிறு கஷ்டங்கள் இடையிடையே வந்து போகும் வாய்ப்புள்ளது.

கும்பம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Kumbam Rasi Palan 2020

கும்ப ராசி பொதுப்பலன்கள் :

கும்ப ராசி அன்பர்களே! இது உங்களுக்கு சற்றே கடினமான மாதமாக இருக்கக் கூடும். நிதி மற்றும் வேலை, தொழில் தொடர்பான நடவடிக்கைகள், இப்பொழுது உங்களுக்கு சுமாரான பலனையே தரக்கூடும். அதிக செலவுகள் காரணமாக, உங்கள் பொருளாதார நிலை பாதிக்கப்படலாம். சிலர், பணம் முதலீடு செய்து புதிய தொழில்கள் தொடங்குவார்கள் என்றாலும், தொழில் துறையில் கவனம் தேவை. உங்களுடைய எதிர்மறையான எண்ணங்கள் காரணமாக, சில சமயங்களில் உங்கள் முயற்சிகளுக்கு உரிய நற்பலன் கிடைக்காமல் போகலாம். கவனமாக இருங்கள். சிலருக்கு உடல் நல பாதிப்புகளும் ஏற்படலாம். தொலை தூரங்களிலிருந்து சிலருக்கு வரவேற்பு அழைப்புகள் வரக்கூடும். இதனால் நீண்ட பயணங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். இந்த நேரத்தில், பிரயாணங்களில் அதிக கவனம் தேவை. இப்பொழுது சிலர் புனித யாத்திரையும் செல்ல நேரிடலாம்.

தனுசு மே மாத ராசி பலன் 2020 | May Matha Dhanusu Rasi Palan 2020

தனுசு ராசி பொதுப்பலன்கள் :

தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இது நன்மைகள் பல தரும் மாதமாக அமையும். பொதுவாக, இந்த நேரத்தில் நீங்கள் ஈடுபடும் அனைத்து நடவடிக்கைகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் உங்களது தீவிர ஈடுபாடு, அனைவரையும் ஈர்த்து, உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். உங்களில் சிலர், அவர்கள் விருப்பப்படி சொத்துக்கள் வாங்குவார்கள். பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் வெளியூர் பயணங்களும் செல்லலாம். நாகரீகமான பொருட்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். எனவே, வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக் கொள்ள இது மிகச் சரியான நேரம் எனலாம். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

சிம்மம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Simmam Rasi Palan 2020

சிம்ம ராசி பொதுப்பலன்கள்

சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் கடினமாக உழைத்து, அதிக உற்பத்தித் திறனை எட்டும் காலம் இது. வேலை, தொழில் தொடர்பான உங்கள் எல்லா நடவடிக்கைகளும் சிறப்பாக அமையும். உங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். தொலைதூரத் தொடர்புகள் புதிய நட்புகளை உருவாக்கக் கூடும். இவை வருங்காலத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவை அளிக்கும். எனினும், வெளியூர்ப் பயணங்களை இந்த மாதம் ஒத்தி வைப்பது நல்லது. உடல் ஆரோக்யத்திலும் கவனம் தேவை. பயணம் மேற்கொள்ளும் பொழுதும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவும். சூழ்நிலைகள், சில சமயங்களில், உங்கள் பொறுமையை சோதிக்கலாம். ஆயினும், எளிதில் நம்பிக்கை இழக்காதீர்கள். எனவே இது உங்களுக்கு, நன்மையும், சவால்களும் கலந்த மாதமாக அமையும்.

banner

Leave a Reply

Submit Comment