கும்பம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Kumbam Rasi Palan 2020

கும்ப ராசி பொதுப்பலன்கள் :
கும்ப ராசி அன்பர்களே! இது உங்களுக்கு சற்றே கடினமான மாதமாக இருக்கக் கூடும். நிதி மற்றும் வேலை, தொழில் தொடர்பான நடவடிக்கைகள், இப்பொழுது உங்களுக்கு சுமாரான பலனையே தரக்கூடும். அதிக செலவுகள் காரணமாக, உங்கள் பொருளாதார நிலை பாதிக்கப்படலாம். சிலர், பணம் முதலீடு செய்து புதிய தொழில்கள் தொடங்குவார்கள் என்றாலும், தொழில் துறையில் கவனம் தேவை. உங்களுடைய எதிர்மறையான எண்ணங்கள் காரணமாக, சில சமயங்களில் உங்கள் முயற்சிகளுக்கு உரிய நற்பலன் கிடைக்காமல் போகலாம். கவனமாக இருங்கள். சிலருக்கு உடல் நல பாதிப்புகளும் ஏற்படலாம். தொலை தூரங்களிலிருந்து சிலருக்கு வரவேற்பு அழைப்புகள் வரக்கூடும். இதனால் நீண்ட பயணங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். இந்த நேரத்தில், பிரயாணங்களில் அதிக கவனம் தேவை. இப்பொழுது சிலர் புனித யாத்திரையும் செல்ல நேரிடலாம். இந்த மாத கும்ப ராசி பலனை மேலும் அறிய கிளிக் செய்யவும்.
கும்ப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை
காதல் வாழ்க்கை சுமாராக இருக்கும். உங்கள் காதல் துணையிடம் நீங்கள் வைக்கும் திருமணக் கோரிக்கை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. எனினும், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம்.
கும்ப ராசி நிதி
உங்கள் நிதி நிலை ஓரளவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உங்கள் வருமானமும், அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும். பொதுவாக, நிதி தொடர்பான விஷயங்களில் சுமாரான முன்னேற்றம் காணப்படும்.
கும்ப ராசி வேலை
உங்கள் வேலையில் நிலையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் எழும் சிக்கல்களையும் நீங்கள் தைரியமாக சமாளிப்பீர்கள். பணியிலும் கவனமாக இருந்து நல்ல பெயர் வாங்குவீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடமும் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
கும்ப ராசி தொழில்
உங்கள் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படலாம். உங்கள் செயல்திறனும் இப்பொழுது மந்தமாக இருக்கக் கூடும். எனவே, தொழில் வளர்ச்சியில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். இது நல்ல பலனைத் தரும். உயர் அதிகாரிகளுடன் நட்போடு பழகுவது, அவர்கள் ஆதரவைப் பெற்றுத் தரும்.
கும்ப ராசி தொழில் வல்லுநர்
இது, கும்ப ராசி தொழில் வல்லுநர்கள் கவனமாக செயல்பட வெண்டிய நேரம் ஆகும். நீங்கள் வெற்றி பெறுவதற்கு, கடின முயற்சியுடன், பொறுமையும் தேவைப்படும். உங்களுடைய அர்ப்பணிப்பு உணர்வு, உங்களுக்குப் புதிய பொறுப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் பங்களிப்பு, நீங்கள் ஏற்கும் பணிகளுக்கு நல்ல உறுதுணையாக அமையும்.
கும்ப ராசி ஆரோக்கியம்
இந்த மாதம் உடல் நலன் சுமாராகவே இருக்கக் கூடும். எனவே, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், உணவுக் கட்டுப்பாடும் கூட இந்த நேரத்தில் அவசியம். யோகா, தியானப் பயிற்சிகள் செய்வதும் நலன் தரும்.
கும்ப ராசி மாணவர்கள்
இந்தக் காலகட்டத்தில் உங்கள் படிப்பு சீரான போக்கில் இருக்கும். நீங்கள் அதில் நல்ல முன்னேற்றத்தையும் எதிர்பார்க்கலாம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவும் கிடைக்கும். நண்பர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது நலம் தரும்.
சுப நாட்கள் : 1,2,7,8,11,12,25,26,27
அசுப நாட்கள் : 5,6,13,14,28,29
