Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

May Month Rasi Palan 2019 in Tamil

April 2, 2019 | Total Views : 11,561
Zoom In Zoom Out Print

கன்னி மே மாத ராசி பலன் 2019 - May Matha Kanni Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம்  உங்கள் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் காணப்படும். நீங்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். தொழிலில்  நல்ல வளர்ச்சி ஏற்படும். ஒரு  சிலருக்கு புதிய தொழில் / வேலை அமையும்.  நீங்கள் ஒரு தொலைதூர இடத்திற்கு பயணம் செய்ய நேரிடலாம். அங்கு நீண்ட காலம் நீங்கள் இருக்க நேரலாம்.  இது உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் நேர்மறை எண்ணத்துடன் மேற்கொள்ள வேண்டும்.  

வேலையில் உங்களுக்குக் கடுமையான பின்னடைவு இருக்கலாம். ஆனால் நீங்கள் துணிவான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் அந்த சூழ்நிலயை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உங்களின் சில முயற்சிகள்  பலனளிக்காமல் போகலாம்.  இருப்பினும் நீங்கள் இன்னும் சிறிது கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் அன்பானவரின் உதவியுடன் நீங்கள் கஷ்டங்களிலிருந்து மீண்டு  வருவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை எப்போதும் உங்களைப் பாதுகாக்கும். பிறருடன் சச்சரவுகளையும்  வம்புகளையும் தவிர்க்கவும். உங்கள் தேக ஆரோக்கியத்தை  சரியாக பராமரிக்காத காரணத்தால் உங்கள் உடல் நிலையில் சிறிது பிரச்சினைகள் ஏற்படும். 

ரிஷபம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Rishabam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். நீங்கள் எல்லா நேரத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். எல்லா நடவடிக்கைகளிலும் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் தனித்து நின்று செயல்படுவீர்கள். மற்றும் உங்கள் செயல்களுக்கு பாராட்டுக்களை பெறுவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் ஆதரவு  பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ப்பொழுது சொத்துக்களை வாங்குவதற்கு உசிதமான நேரமில்லை என்ற காரணத்தால் அந்த எண்ணங்களை தள்ளிப் போடுவது நல்லது. நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். குடும்பத்தினரோடு நீங்கள் கலந்து உறவாடுவதாலும் குடும்ப அங்கத்தினர்களுடன் உரையாடுவதாலும் நன்மை விளையும். சமுதாயத்தில் நல்ல நட்புறவை பராமரிப்பீர்கள்.  நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் நன்மை தீமைகளை ஆராய்ந்து நன்றாகப் புரிந்து கொண்டு அதற்குப் பிறகு நீங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

விருச்சிகம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Viruchigam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் சாதாரணமாக இருக்கும். உங்கள் பணிகளை கவனமாகத் திட்டமிட வேண்டும். சிறிய விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படாதீர்கள். அது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும்  குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நீங்கள் தனிப்பட்ட முறையில் காட்டும்  அக்கறை  அவர்களுக்கு மனமார்ந்த  திருப்தியை  அளிக்கும். சமூக தொடர்புகளில்  உங்கள் சரியான அணுகுமுறை காரணமாக உங்களுக்கு மதிப்பு கூடும்.

நீங்கள் போலியான  வாழ்க்கை முறையைத் தவிர்த்திட வேண்டும். அது உங்கள் நன்மதிப்பைச் சிதைத்துவிடலாம். நீங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.சொத்துக்களை வாங்குவதற்கு இது உகந்த காலம் அல்ல. உணவு முறையை சரியாக பராமரித்தால் உங்கள் ஆரோக்கியம் தொடர்ந்து முன்னேறும்.  

தனுசு மே மாத ராசி பலன் 2019 - May Matha Dhanu Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்கள் கனவுகளை  நிறைவேறுவதற்குச் சாதகமாக இருக்கக்கூடிய நேரமாக இருக்கும். மேலும், உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களுடன் சுற்றுலா செல்லவும் விருந்து விழாவிற்கு திட்டமிடவும் சிறந்த நேரம் ஆகும். உங்களின் அன்பிற்கு உரியவர்கள் யாராவது மனச்சோர்வாக உணர்ந்தால் அவர்களை உற்சாகப்படுத்த மற்றும் மகிழ்ச்சியடையச் செய்ய உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். இந்தக் காலகட்டத்தில் தர்க்க ரீதியாக சிந்திப்பதைக் காட்டிலும் உங்களுடைய உள்ளுணர்வு ஒரு நம்பகமான வழிகாட்டியாக இருக்கும். சிறிது காலத்திற்கு அதிக அளவில் பிறருடன் பழகுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் பேசிப் பழக உங்களுக்கான சிறந்த எதிர்காலம் காத்திருக்கின்றது. அது வரை பொறுமையாக இருங்கள். உங்கள் உள்ளுணர்வின் படி நடந்து கொள்ளுங்கள். அதனால் எந்த தவறும் ஏற்படாது. விவேகமாக செயல்படுங்கள். பண விஷயங்களை முறையாகப்  பராமரியுங்கள். எதிர்காலப்  பாதுகாப்பு கருதி  சேமிப்பு மற்றும்  முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். மற்றவர்களின் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். அப்பொழுது தான்  அவர்களுடைய நோக்கங்களை உங்களால் நன்கு புரிந்து கொள்ள இயலும். முன்பு இருந்ததை விட இப்பொழுது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

 

மீனம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Meenam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு சாதாரண காலமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான காரியங்களை   சில தாமதத்திற்குப் பிறகு செய்து முடிப்பீர்கள். அதனால் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதை வெளிப்படையாகப் பேசிவிடுவீர்கள். உங்களுடைய தொடர்புதிறன் மேம்பாடு மற்றும் உங்கள் வேலையில் உங்களுக்கான அடையாளத்தினாலும் உங்களுக்குத் திருப்தி கிடைக்கலாம். பல்வேறு ஆதாரங்களின் மூலம் உங்கள் பணப் புழக்கம்  கணிசமாக அதிகரிக்கும்.

குடும்ப உறுப்பினர்களுக்கான நகைகளை வாங்குதல் போன்றவைச் சாத்தியமாகும். ஒரு வழிகாட்டியின் போதனைகளை நீங்கள் பெறுவீர்கள். தெய்வ அனுக்கிரகங்களைப் பெற மந்திரங்களை ஜபம் செய்வதில் நீங்கள் ஈடுபடுவீர்கள். ஆன்மீக நிகழ்ச்சிகளில் நீங்கள் மிகவும் ஆர்வமுடன்  கலந்துகொள்வீர்கள். உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக முன்னேறலாம்; அதன் காரணமாக நீங்கள் ஆசுவாசமாக உணரலாம்.

 

துலாம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Thulam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம், நீங்கள் உங்கள் செயல்களை மிகவும் துணிவுடன் மேற்கொள்வீர்கள்.  உங்கள் தனிப்பட்ட வாழ்வில் சில பிரச்சினைகள்  ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உங்களின் கற்கும் ஆற்றல் மிகவும் தீவிரமாக இருக்கும். இந்த மாதம் உங்களிடம் துணிவு காணப்படும் செல்வ நிலை சாதரணமாக இருக்கும்.

உங்களின் விசுவாச குணம் உங்கள் மதிப்பை உயர்த்தும். பண விஷயத்தைப் பொறுத்த வரை  உங்களுக்கு பண வரவு சிறப்பாக இருந்தாலும், தேவையற்ற செலவுகள் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஆரோக்கியம் குறித்த கவலை காணப்படும். சிறிய அளவிலான பிரச்சினைகள் தொடர்ந்து காணப்படும்.

சிம்மம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Simha Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது உங்களுக்கு சாதாரண காலமாக இருக்கும். உங்கள் கடின முயற்சிகள் சாதாரண முடிவுகளை வழங்கலாம். நீங்கள் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் தேவையில்லாத தாமதங்கள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் காரியங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற  செலவுகளால் நீங்கள் பதட்டம் கொள்வீர்கள். பண விஷயங்களில், எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கும் முன் நீங்கள் ஒன்றிற்கு இருமுறை யோசிக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் சக பணியாளர்களுடனான முரண்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் மேலதிகாரிகளுடன் சச்சரவுகளில்  ஈடுபடக் கூடாது. உங்கள் குடும்ப  வாழ்க்கை சுமாரான  நிலையில் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் சில சிக்கலான நடத்தை இருக்கலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை ஏற்படலாம். நீங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உடல் ஆற்றலைப் பெறுவதற்கு கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிதுனம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Mithunam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமான  நேரமாக இருக்கும். உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்திற்கான சாதகமான காலம் ஆகும். இந்த மாதம்  சமூக வாழ்வில் அந்தஸ்து அதிகரிக்கும்.  அது உங்களுக்கு  மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். உங்களுடைய மாறுபடும் இயல்பு மற்றும் அமைதியற்ற மனநிலையை மாற்றியமைத்துக் கொள்ள முயற்சி செய்ய  வேண்டும்.  அதன் மூலம்  உங்கள் நண்பர்கள் மற்றும் சகாக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் நீங்கள் வெற்றி பெறலாம்.

முதலீடுகளிலிருந்து நல்ல நிதி ஆதாயங்களை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும். அது உங்களுக்கு இரண்டு மடங்கு திருப்தியைக் கொடுக்கும். காதல் உறவுகளைப் பொறுத்தவரையில்  நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருப்பீர்கள். தனிப்பட்ட பயணங்களை மகிழ்ச்சியோடு அனுபவிப்பீர்கள். கலைகளில் உங்கள் கடின உழைப்புக்கான விருதுகளை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். நீங்கள் முயற்சி எடுத்து பராமரித்தால் முன்னேற்றம் இருக்கும். 

மகரம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Makara Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு பலன்கள் கலந்து காணப்படும். அதிக புத்திசாலித்தனத்துடன் செயல்பட முயற்சிக்காதீர்கள். உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதிலும் இலக்குகளை அடைவதிலும் யதார்த்தமாக யோசித்து செயல்படுங்கள்.  உங்கள் கற்பனை எல்லாம் நிஜமென்று ஆகாது. கடினமான காலங்களில் உங்களுக்கு உதவாத மனிதர்களிடம் உங்கள் கஷ்ட நஷ்டங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். கடுமையான சூழ்நிலைகளை சமாளிக்க உங்கள் பரந்த மனப்பான்மை உதவும். உங்களின் நேர்மையான முயற்சி மூலம் உங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

நீங்கள் அதிக சுறுசுறுப்பாக இருக்க விரும்பலாம். ஆனால் சூழ்நிலைகள் அதற்கு ஏற்றாற்போல் அமையாமல் போகலாம். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காரணமாக பதட்டங்கள் ஏற்படலாம். உங்கள் பேச்சாற்றல் மூலம் நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பீர்கள். கடின முயற்சிகளின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர்கள்.  உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். 

கடகம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Kadagam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம்  உங்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதம் ஆகும். வெற்றிகள் உங்களைத் தேடி வரும் மாதம் ஆகும். உங்கள் முயற்சிகள் மூலம் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடன் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.  உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை அளிக்கும். குறைவான முயற்சியில் அதிக பலன்களை காண்பீர்கள்.  நீங்கள்  பங்குச் சந்தை மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.   நீங்கள் உங்கள் கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள்.

புதிய இலக்குகளையும் அடைவீர்கள். நீங்கள் எதிரிகளை வெற்றி கொள்ளுவீர்கள். உங்கள் புகழ் கணிசமாக அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் புதிய நபர்களின் தொடர்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் உறவினர்கள் உங்களுக்கு  உதவியாக இருப்பார்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உங்கள் குடும்ப  வாழ்க்கையில் அமைதி காணப்படும்.  மகிழ்ச்சியைத் தரக்கூடிய  பல குறுகிய தூரப் பயணங்களுக்கு நீங்கள் செல்ல நேரிடலாம். 

மேஷம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Mesham Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள் 

இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் சிறந்த முன்னேற்றம் காண்பதற்கு உகந்த ஒரு அற்புதமான  மாதமாக இருக்கும். நீங்கள் கவனமாக உங்கள் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.  உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நீங்கள் எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. இந்தக் கால கட்டத்தில் நீங்கள் சொத்து வாங்குவதன் மூலம் திருப்தியடைவீர்கள்.

சமூக தொடர்புகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அது உங்களுக்கு அங்கீகாரத்தையும் அமைதியையும் கொடுக்கும்.  குடும்பத்தில் சந்தோஷமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக  இருக்கும். வேலைக்காக வெளிநாட்டுப் பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். கடுமையான வேலை காரணமாக உங்கள் உடல்நிலை சுமாராகத்தான் இருக்கும். உணவு உட்கொள்வதிலும் ஒய்வு எடுப்பதற்கும் நீங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 

கும்பம் மே மாத ராசி பலன் 2019 - May Matha Kumbam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய நேரம் ஆகும். நீங்கள் நேர்மையாக முயற்சி செய்வீர்கள். அதற்கேற்ற பலனையும் பெறுவீர்கள். சமயோசித புத்தியுடன் முடிவெடுக்கும் உங்கள் திறன்  தொழில் வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளிலிருந்து  உங்களைப் பாதுகாக்கும். நீங்கள் புத்திசாலித்தனமாக முடிவெடுத்து அதன் மூலம் சிறந்த பலன்களையும் நீங்கள் விரும்பும் வெற்றியையும்  பெறுவீர்கள். உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக நீங்கள் லட்சியத்தோடு கடுமையாக உழைப்பீர்கள். நீங்கள் சுறுசுறுப்போடும் எச்சரிக்கை உணர்வோடும் செயல்படுவீர்கள்.

நீங்கள் அறிவைத் தேடும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நிறைய தகவல்களை சேகரிப்பீர்கள். அதன் மூலம்  நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றிகரமாக இருப்பீர்கள். சமூகத்தோடு நீங்கள் இணைந்து செயல்படுவதன் காரணமாக நீங்கள் அதற்குரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். உங்கள் தேக ஆரோக்கியம் சாதாரணமாகவும் உங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் இருக்கும்.

banner

Leave a Reply

Submit Comment