Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

மீனம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Meenam Rasi Palan 2020

April 9, 2020 | Total Views : 652
Zoom In Zoom Out Print

மீன ராசி பொதுப்பலன்கள் :

மீன ராசி அன்பர்களே! நீங்கள் இந்த மாதம், பெருமளவு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நீங்கள் திட்டமிட்டு மெற்கொள்ளும் நடவடிக்கைகள், கடின முயற்சிக்குப் பின் வெற்றி பெறும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான தருணம் ஆகும். ஊதிய உயர்வும் உங்களுக்குத் திருப்தி தரும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீகப் பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்யக் கூடும். இந்த நேரங்களில், ஆன்மீகத் தலைவர்களையும், குருமார்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கலாம் இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள். உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். எனினும், தாயின் உடல் நிலையில் கவனம் தேவைப்படலாம்.இந்த மாத மீன ராசி பலனை மேலும் அறிய  கிளிக் செய்யவும்.

மீன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை 

காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சில காதல் உறவுகள் திருமணத்தில் முடியும். மணமாகதவர்களுக்கும் திருமணம் கைகூடி வரும். சிலர், தங்கள் வாழ்க்கைத் துணையுடன் குதூகலப் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் மகிழ்ச்சியும், திருப்தியும் உண்டாகும்.  

மீன ராசி நிதி   

உங்கள் நிதி நிலை நன்றாகவே காணப்படுகிறது. பொருளாதாரப் பரிவர்த்தனைகளில் படிப்படியான முன்னேற்றத்தையும் நீங்கள்  எதிர்பார்க்கலாம். பூமி தொடர்பான சொத்துக்களினால், லாபமும் வந்து சேரலாம். பணத்தைச் சேமிப்பதற்கான உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. 

மீன ராசி வேலை 

உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும், இப்பொழுது உங்களுக்குப் பெரும் நன்மையைச் செய்யும். வேலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். 

மீன ராசி தொழில்  

தொழில் முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கக் கூடும். உங்கள் சுதந்திர இயல்பும், துணிச்சலான அணுகுமுறையும் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். கூட்டு வர்த்தகம் லாபம் கொடுக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளவும் தகுந்த காலம் இது எனலாம். எனவே, உங்கள் வியாபாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் இப்பொழுது நீங்கள் இறங்கலாம். ஆயினும், சில நேரங்களில் உங்களுக்கு வெற்றி தாமதமாகக் கிடைக்கலாம். 

மீன ராசி தொழில் வல்லுநர் 

மீன ராசி தொழில் வல்லுநர்கள், தங்கள் முயற்சிகளைத் தொடர்வது நன்மை தரும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவதும், உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக செயலாற்ற உதவும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப திட்டங்களைத் தீட்டுவது, நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறத் துணை புரியும்.  

மீன ராசி ஆரோக்கியம் 

இந்த நேரத்தில், நீங்கள் மருத்துவரின் அறிவுரைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது அவசியம். அதிக வேலை காரணமாக, உங்கள் உடல்நலத்திற்கு நீங்கள் உரிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போகலாம். சத்தான உணவை உட்கொள்வதும், எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெற உதவும். உணவுக் கட்டுப்பாடும் நன்மை தரும்.

மீன ராசி மாணவர்கள் 

மாணவர்களுக்கு இது சுமாரான மாதமாக இருக்கும். சில நேரங்களில், உங்களது அளவுக்கு அதிகமான தன்நம்பிக்கை காரணமாக, நீங்கள் படிப்பில் உரிய கவனம் செலுத்தாமல் போகலாம். இதனால் கல்வியில் பின்னடைவு ஏற்படலாம். எனினும் மனமுடைந்து போகாமல், தொடர்ந்து கவனத்துடன், தீவிரமாகப் படிப்பது, நல்ல பலன் தரும்.  

சுப தினங்கள் :  1,2,9,10,13,14,28,29  
அசுப தினங்கள் : 3,4,7,8,15,16,17,30,31  

banner

Leave a Reply

Submit Comment