AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் மே மாத ராசி பலன் 2020 | May Matha Rishabam Rasi Palan 2020

dateApril 9, 2020

ரிஷப ராசி பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களது சில நடவடிக்கைகளின் காரணமாக, சிலர் உங்களுக்கு எதிரிகளாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே எச்சரிக்கை தேவை. தன வரவும் சுமாராகவே இருக்கும். உடல் நல பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால், ஏதேனும் சிறு ஆரோக்கியக் குறைபாடு வந்தாலும், காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. குடும்பத்திலும் மன நிம்மதி இன்மை ஏற்படும் வாய்ப்புள்ளதால், குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவதும், அவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வதும் நல்லது. இருப்பினும், உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள்; இதனால், நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். இதுவரை இருந்த வந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது. உங்களில் சிலர், ஆன்மீகப் பயணம் செல்லக் கூடும். எனினும் வெளியூர் பயணங்களால் அதிக செலவு ஏற்படலாம். பொதுவாக இது உங்களுக்குச் சவால்கள் நிறைந்த மாதமாக அமையக் கூடும். இந்த மாத ரிஷப ராசி பலனை மேலும் அறிய  கிளிக் செய்யவும்  


ரிஷப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை

காதல் வாழ்க்கையில், இந்த நேரத்தில், தற்காலிகப் பிரிவினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே, காதல் விவகாரங்களை கவனத்துடன் கையாளுங்கள். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். வாழ்க்கைத் துணையுடன் உறவு சாதாரணமாக இருக்கும்.  

ரிஷப ராசி நிதி 

பொதுவாக உங்கள் நிதிநிலை ஒரளவு நன்றாகவே இருக்கும். சில நேரங்களில் இது மகிழ்ச்சி தருவதாகவும் அமையும். உங்கள் வருமானம் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக  இருக்கும்.  குடும்பத் தேவைகளுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்.

ரிஷப ராசி வேலை 

வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்திக் கொள்வதற்கு இது நல்ல நேரம் ஆகும். உங்கள் பணிகள்,  உங்களுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத் தருவதோடு மட்டுமல்லாமல், உங்களது கடின உழைப்பிற்கான திருப்தியான மனநிலையையும் அளிக்கும். 

ரிஷப ராசி தொழில் 

பொதுவாக, இந்தக் காலகட்டத்தில் எல்லா விஷயங்களும் சாதாரணமாகவே இருக்கும். தொழிலைப் பொறுத்தவரையில், இது உங்களுக்கு வலுவான காலமாக அமையாது எனலாம். எனவே, குறைந்த பட்ச முயற்சிகளைச் செய்துவிட்டு, அதிக பலன்களை எதிர்பார்க்காதீர்கள். ஆயினும், சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. 

ரிஷப ராசி தொழில் வல்லுநர்கள் 

இந்த மாதம் பொதுவாக உங்கள் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். எனவே உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். வேலையில் தாமதங்கள் ஏற்படலாம்; ஆனால் அவற்றைக் கண்டு நம்பிக்கை இழந்து விடாதீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால், உங்கள் திறமைகளை நன்கு வெளிப்படுத்தி, உங்களால் சிறப்பாக செயலாற்ற முடியும்.  

ரிஷப ராசி ஆரோக்கியம் 

ரிஷப ராசி அன்பர்கள், இந்த மாதம், அவர்கள் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்களுக்கு செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இது, நீங்கள் நேரம் தவறி உணவு உட்கொள்வதன் காரணமாக இருக்கலாம். உடலுக்குத் தேவைப்பட்ட ஒய்வு கொடுப்பதன் மூலம், நீங்கள் உடல் நலத்தைக் காக்க முடியும். இது உங்களுக்கு நன்மை பயக்கும்.

ரிஷப ராசி மாணவர்கள்  

கல்வியைப் பொறுத்தவரை, இது சாதாரண மாதமாக இருக்கக் கூடும். எனினும் உங்களது அறிவு பூர்வமான அணுகுமுறையும், கடின உழைப்பும், படிப்பில் நீங்கள் முன்னேற்றம் காண உதவும். இந்த நேரத்தில், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

சுப தினங்கள்  :   5,6,8,13,14,18,19
அசுப தினங்கள் : 7,9,11,12,20,21,22


banner

Leave a Reply