AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

தனுசு மே மாத ராசி பலன் 2020 | May Matha Dhanusu Rasi Palan 2020

dateApril 9, 2020

தனுசு ராசி பொதுப்பலன்கள் :

தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இது நன்மைகள் பல தரும் மாதமாக அமையும். பொதுவாக, இந்த நேரத்தில் நீங்கள் ஈடுபடும் அனைத்து நடவடிக்கைகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் உங்களது தீவிர ஈடுபாடு, அனைவரையும் ஈர்த்து, உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். உங்களில் சிலர், அவர்கள் விருப்பப்படி சொத்துக்கள் வாங்குவார்கள். பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலர் வெளியூர் பயணங்களும் செல்லலாம். நாகரீகமான பொருட்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். எனவே, வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக் கொள்ள இது மிகச் சரியான நேரம் எனலாம். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
இந்த மாத தனுசு ராசி பலனை மேலும் அறிய  கிளிக் செய்யவும்.


காதல் மற்றும் திருமண வாழ்க்கை 

சில காதல் உறவுகள் திருமணமாக மலரும் வாய்ப்புள்ளது. துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனும் உறவு இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனும் நல்லுறவு நிலவும். 


நிதி 

உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்களது சேமிப்பு, உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். எனினும் எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பும், நன்கு யோசித்துச் செய்வது நல்லது. 


வேலை 

வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் காலமாகும். உங்கள் பணிக்கான பலன்களும், முடிவுகளும் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகள் உங்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் வேலைகளை ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்வது, உங்கள் பணி சிறக்க உதவும்.


தொழில் 

கூட்டு சேர்ந்து புதிய தொழிலில் ஈடுபடுவதை இந்த நேரத்தில் தவிர்த்து விடுவது நல்லது. மேலும், உங்களுக்கு தெரியாமல் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிலர் உங்களை ஏமாற்ற நினைக்கலாம். எனவே எச்சரிக்கை தேவை. பொதுவாக, வியாபாரம் தொடர்பாக எவ்வித முடிவையும் எடுப்பதற்கு முன், ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்தே செயலாற்றுவது அவசியம்.   


தொழில் வல்லுநர்  

தனுசு ராசி தொழில் வல்லுநர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது, இந்த நேரத்தில் அவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக செயலாற்ற உதவும். இப்பொழுது உங்கள் நடவடிக்கைகள் முன்னேற்றம் தருவதாக இருக்கும் ஆதலால், உங்கள் முயற்சிகளைத் தொடர்வது நன்மை தரும்.

 
ஆரோக்கியம் 

இந்த மாதத்தில் உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. நோய்கள் வந்து விலகும் வாய்ப்புள்ளது. எனினும், அதன் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷம் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். இதனால், நீங்கள் மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க இயலும்.  


மாணவர்கள் 

மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். எனினும், நீங்கள் வெளியே செல்வதில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதிலாகக் கூடுதல் நேரம் எடுத்துப் படிப்பது, பல வகையிலும் நன்மை தரும். இந்த நேரத்தில் சிலருக்கு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆர்வமும் ஏற்படும்.  


சுப தினங்கள்  :  3,4,7,8,20,21,22
அசுப தினங்கள் :  1,2,9,10,23,24,28,29
 


banner

Leave a Reply