Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

கன்னி மே மாத ராசி பலன் 2020 | May Matha Kanni Rasi Palan 2020

April 9, 2020 | Total Views : 816
Zoom In Zoom Out Print

கன்னி ராசி பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சுமாரான பலன்களையே எதிர்பார்க்க முடியும். உங்கள் கடின முயற்சிகள் திருவினையாகும். உரிய பலன் தரும். பணவரவு நன்றாக இருக்கும். அண்டை, அயலார் சகோதரர் வழியில் நல்ல பலன்களை அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வேலையில் இடமாற்றங்களும் ஏற்படலாம். திருமண வாழ்க்கை சுமூகமாக இருக்கும். தந்தையின் உடல்நிலை நலமாக இருக்கும். எனினும், தாய் மற்றும் வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் எச்சரிக்கை தேவை. தொழில் சாதாரணமாக நடைபெறும் என்றாலும், அதில் லாபங்கள் தடைபடக் கூடும். சிறு கஷ்டங்கள் இடையிடையே வந்து போகும் வாய்ப்புள்ளது. இந்த மாத கன்னி ராசி பலனை மேலும் அறிய கிளிக் செய்யவும்.  

கன்னி ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை

காதலுக்கு இது மந்தமான மாதமாக இருக்கும். காதலர்களுக்கும் இது பொருந்தும். சில காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதே நேரம், ஒரு சில காதல் திருமணத்தில் முடியும் வாய்ப்பும் உருவாகும். மனைவியின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கவும். சிலருக்கு, திடீர் வெளியூர்ப் பயணங்கள் ஏற்படலாம். 

கன்னி ராசி நிதி 

நிதி நிலை சுமாராக இருக்கும். சிலருக்கு தந்தை மூலம் வருமானம் பெருகும். உங்கள் வருமானம், உங்களது அனைத்துப் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு போதுமானதாக  இருக்கும். அரசாங்க விவகாரங்களில் கவனம் தேவை.  

கன்னி ராசி வேலை 

நீங்கள் மிக்க நேர்த்தியாகவும், சிறப்புடனும் பணியாற்றுவீர்கள். .இது, பணியிடத்தில் உங்களுக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இருப்பினும், சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். ஒரு சிலர் வேலையும் இழக்கக் கூடும். எச்சரிக்கையாக இருக்கவும்.

கன்னி ராசி தொழில் 

நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி, தாமதமாகக் கிடைக்கலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவதோடு, நீடித்த கௌரவம் பெறுவீர்கள். எந்த வகையான வேலையை எடுத்துச் செய்தாலும், இப்பொழுது அதை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். ஆனால், தொழில் வகையில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். எண்ணங்கள் ஒரே சீராக செயல்படாமலும் போகலாம். எனவே கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி தொழில் வல்லுநர் 

உங்களுடைய செயல்திறன் மூலம் நன்மையான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நீங்கள் செயல்படுவீர்கள். இவ்வாறு செய்வது, உங்கள் தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.

கன்னி ராசி ஆரோக்கியம் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இது நல்ல ஆரோக்கியம் தரும் மாதமாக அமையும். எதாவது நோய் உங்களை பாதித்திருந்தாலும், அது இப்பொழுது நன்கு குணமாகி, உடல்நிலை முன்னேற்றம் அடையும். நீங்கள் மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். இந்தக் காலகட்டத்தில் சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது நன்மை தரும். 

கன்னி ராசி மாணவர்கள் 

படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் இது சரியான நேரம் எனலாம். உங்களது திறந்த மனதும், பரந்த மனப்பான்மையும் உங்கள் தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள்  செயல்திறனால் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

சுப தினங்கள் :    1,2,13,14,23,24,28,29
அசுப தினங்கள் : 3,4,15,16,17,20,21,22,30,31

banner

Leave a Reply

Submit Comment