கடக ராசி பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே! இது உங்களுக்கு ஒரு சராசரியான மாதமாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் சாதாரண பலன்களே கிட்டும். தொழில் சார்ந்த வேலைகளில் நீங்கள் கவனமாக இருப்பது அவசியம். பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்; அது போன்ற நேரங்களில் கவனமாக நடந்து கொள்ளவும். சிலர், சிறு பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். இதனால் செலவுகளும் ஏற்படலாம். கடுமையான வேலைப்பளுவால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். இதனால் மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். பொருளாதார விஷயங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். எனினும், உங்களால் இவற்றை நல்ல முறையில் கையாள முடியும். தேவையான நேரங்களில் உங்களுடைய கூர்மையான அறிவாற்றலும் உங்களுக்குக் கை கொடுக்கும். இந்த மாத கடக ராசி பலனை மேலும் அறிய கிளிக் செய்யவும்.
கடக ராசிகாதல் மற்றும் திருமண வாழ்க்கை
சிலரது காதல் இப்பொழுது திருமணத்தில் முடியும் வாய்ப்புள்ளது. நீங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவும் நன்றாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனும் நல்லுறவு நிலவும்.
கடக ராசி நிதி
நிதி தொடர்பான விஷயங்கள் சுமாராக இருக்கும். தொழில் மூலம் லாபம் கிடைக்கவும், சிலருக்கு தாய் வழியில் பணம், லாபம் வந்து சேரவும் வாய்ப்புள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்தில் வீண் விரையங்கள் அதிகமாக இருக்கலாம். எனவே, அத்தியாவசியத் தேவைகளைத் தவிர வேறு வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
கடக ராசி வேலை
வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இதற்கான வாய்ப்புகளை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். முடிந்தவரை உங்கள் அனைத்துப் பணிகளையும், நிலுவையில் வைக்காமல், உடனுக்குடன், விரைவாகச் செய்து முடிப்பதும், கீழ் பணிபுரிபவர்களிடம் நட்புடன் பழகுவதும் நன்மை தரும்.
கடக ராசி தொழில்
தொழில் போட்டி காரணமாக நீங்கள் சவால்களை சந்திக்க நேரலாம். இருப்பினும், தொழில், வியாபாரம் சிறப்பாகவே நடக்கும். நிலம் தொடர்பான தொழில்களில், இப்பொழுது அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். உங்கள் தொழில் திறமையால் பிறர் இப்பொழுது, உங்கள் முக்கியத்துவத்தை உணரும் வாய்ப்பு உருவாகும்.
கடக ராசி தொழில் வல்லுநர்
கடக ராசி தொழில் வல்லுநர்கள், தங்கள் தனிப்பட்ட திறன் வெளிப்படும் வகையில் செயலாற்றுவார்கள். எனவே இது உங்களுக்கு அனுகூலமான மாதம் ஆக அமையும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களது செயலாற்றல் மூலம் உங்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடக ராசி ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் ஒரளவு நன்றாகவே இருக்கும். மன அழுத்தம் எதுவும் இன்றி, வாழ்க்கை, அமைதியாவே செல்லும். எனினும், உடல் நலத்தில் அலட்சியம் வேண்டாம். நல்ல ஒய்வும், போதுமான தூக்கமும் உடலுக்கு நலம் விளைவிக்கும்.
கடக ராசி மாணவர்கள்
மாணவர்களுக்கு இது ஒரு சராசரியான காலமாகும். பொதுவாக இப்பொழுது நீங்கள் சுறுசுறுப்பாகப் படிப்பீர்கள். ஆசிரியர்களிடமிருந்து தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்வது, நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும். கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதன் மூலம், சிலர் தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்வார்கள்.
சுப தினங்கள் : 9,10,18,19,23,24
அசுப தினங்கள் : 11,12,15,16,17,25,26,27

Leave a Reply