AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Viruchigam

February 17, 2020 | Total Views : 1,381
Zoom In Zoom Out Print

விருச்சிக ராசி பொதுபலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் காணப்படும். இது நாள் வரை இருந்த வந்த பிரச்சினைகள் யாவும் தீரும். மனதில் ஓரளவு நிம்மதி பெருகும். இந்த மாதத்தின் ஆரம்பக் காலங்களில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் பிற்பகுதியில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். மாதத்தின் ஆரம்பத்தில் பொருளாதார சிக்கல்கள் உண்டாகும். பணப்பற்றாக்குறை ஏற்படும். மாதத்தின் பிற்பகுதியில் அது சரியாகிவிடும். அதுமட்டுமின்றி மாதத்தின் பிற்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். வீடு, நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில பிரச்சினைகள் வந்து போகும். உங்கள் மனதில் ஆன்மீக எண்ணம் பெருகும். வெளியூரில் உள்ள ஆலயங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். உங்கள் மனதில் தைரியம் கூடும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நீங்கள் நன்மைகளைப் பெறலாம்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

விருச்சிக ராசி காதல் மற்றும் திருமணம்:

விருச்சிக ராசி காதலர்கள் இந்த மாதம் பொறுமை காக்க வேண்டும். அவசரம் காரியத்தை கெடுத்து விடும். திருமணமான தம்பதியர் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் இனிய இல்லறம் காணலாம். உங்கள் குடும்ப விஷயத்தில் வெளி நபர்களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.

விருச்சிக ராசி நிதி:

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த மாத ஆரம்பத்தில் பொருளாதார பிரச்சினை காணப்படும். பணப் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய செலவுகளை சமாளிக்கக் கூட கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் பொருளாதார நிலைமை ஓரளவு சீரடையும். பிறருக்கு கடனாக கொடுத்த தொகையைக் கூட நீங்கள் இந்த மாதம் வசூல் செய்வீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

விருச்சிக ராசி வேலை:

வேலை புரியும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் பணியில் முன்னேற்றம் பல கண்டு மகிழ்ச்சி கொள்வார்கள். இந்த மாதம் உங்கள் தகுதி மற்றும் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு பணியிடத்தில் கிடைக்கும். நீங்கள் சிறப்பாக செயலாற்றி உங்கள் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இந்த மாதம் பதவிஉயர்வு மற்றும் ஊதிய உயர்வு உங்களைத் தேடி வரும்.

விருச்சிக ராசி தொழில்:

தொழில் செய்யும் விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறிது கவனமுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக தொழிலில் யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு தனித்து நின்று செயல்பட்டால் வெற்றி காணலாம். கூட்டு சேர்வதன் மூலம் கூட்டாளிகளால் பிரச்சினைகளும், நஷ்டங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. எந்த முடிவும் எடுத்து செயல் படுத்துவதற்கு முன்பு நன்கு சிந்தித்து செயல் படுங்கள். உங்கள் கடின உழைப்பு உங்களுக்கு உயர்வு பெற்றுத் தரும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

விருச்சிக ராசி தொழில் வல்லுனர்களுக்கு:

விருச்சிக ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் சிறந்த பலன் தரும் மாதம் ஆகும். தொழில் சார்ந்த விஷயங்களில் உங்கள் நீண்ட நாள் ஆசைகளும், கனவுகளும் நிறைவேறக் காண்பீர்கள். உங்கள் தொழிலை முன்னேற்றப் பாதியில் நடதிச் செல்ல துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று செயல்படுவது நல்லது.

விருச்சிக ராசி ஆரோக்கியம் :

விருச்சிக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். கண், இடுப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்களாகவே கை வைத்தியம் செய்து கொள்ளலாம் என்று இருந்து விடாமல் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

விருச்சிக ராசி மாணவர்கள் :

விருச்சிக ராசி மாணவ மாணவிகள் இந்த மாதம் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாத முற்பகுதியில் சில காரணங்களால் உங்கள் கவனம் திசை திரும்பலாம். வீண் சண்டை, சச்சரவுகளில் சிக்க வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. மாத பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை தேடித்தேடி கற்பதில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

சுப நாட்கள்: 1,10,11,18,19.

அசுப நாட்கள்: 4,5,12,13,14,15,16

விருச்சிக ராசி பரிகாரம்:

ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

செவ்வாய், ராகு, கேது ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.

பாம்பு புற்றுக்கு பால் வார்த்தல், மற்றவர்களின் மருத்துவ செலவிற்க்கு உதவி செய்தல். பறவைகளுக்கு உணவு அளித்தல்.

banner

Leave a Reply

Submit Comment