Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

தனுசு மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Dhanusu

February 17, 2020 | Total Views : 1,312
Zoom In Zoom Out Print

தனுசு ராசி பொதுப்பலன்கள் :

தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் சிறப்பாக திட்டமிடுவதுடன் உங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தவும் செய்வீர்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடும். நீங்கள் நினைத்தது நிறைவேறும். நீங்கள் எந்த ஒரு வேலையையும் மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொள்வீர்கள். உங்கள் பேச்சிற்கு உங்கள் குடும்பத்தில் மதிப்பு இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் எந்த வேலையையும் பிறர் ஒத்துழைப்புடன் உங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவடையக் காண்பீர்கள். அதன் மூலம் நீங்கள் சிறந்த பலன்களையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் செயல் திறன் அதிகரிக்கும். உங்களுக்கு மதிப்பும் கௌரவுமும் கிட்டும். நீங்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இந்த மாதம் உங்கள் மனம் விரும்பும் வகையில் நீங்கள் சொத்துக்களை வாங்குவீர்கள். நவ நாகரீகமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தனுசு ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

தனுசு ராசியைச் சேர்ந்த திருமணமான தம்பதியர் இனிமையான உறவு கண்டு மகிழ்வார்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் நல்லுறவு காணப்படும். நீங்கள் உங்கள் கருத்துக்களை பிறர் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து உரைப்பீர்கள். அதனால் நல்ல புரிந்துணர்வு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

தனுசு ராசி நிதி :

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பொருளாதாரம் சுமாராக காணப்படும். நிதி சம்பந்தமான எந்த ஒரு முடிவாக இருந்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. உங்கள் கடந்த கால சேமிப்பு உங்களுக்கு இந்த மாதம் கை கொடுக்கும். வீண் செலவுகள் தவிர்க்க முடியாவிட்டாலும் சிறிது கவனமுடன் செயல்படுங்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தனுசு ராசி வேலை :

வேலை செய்யும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் பணியில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். உங்கள் ஈடுபாடு காரணமாக சிறப்பாக பணியாற்றி நீங்கள் உங்கள் தகுதி மற்றும் திறனை நிரூபிப்பீர்கள். உங்களின் உற்பத்தித் திறன் காரணமாக உங்களுக்கு புதிய பொறுப்புகள் அளிக்கப்படும். பணியிடத்தில் உயர் பதவி மற்றும் அந்தஸ்து கிட்டும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.

தனுசு ராசி தொழில் :

தொழில் செய்யும் தனுசு ராசி அன்பர்கள் இந்த மாதம் புதிய தொழிலில் தொடங்கும் பொது சிறிது கவனமாக செயல்பட வேண்டும். வியாபாரத்தில் எவ்வித முடிவையும் எடுப்பதற்கு முன், ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்தே செயலாற்ற வேண்டும். குறிப்பாக புதிய தொழிலில் யாருடனும் கூட்டு சேராமல் தனியாக செயல்படுவது நல்லது. தொழிலில் நீங்கள் காட்டும் ஈடுபாடும் கவனமும் உங்களுக்கு சிறந்த பலன்களை பெற்றுத் தரும். அதன் மூலம் நீங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தனுசு ராசி தொழில் வல்லுனர்களுக்கு :

தனுசு ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். அதனால் உங்கள் முழுத் திறனும் வெளிப்படும். அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். தொடர்ந்து முயற்சிக்ளை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த வெற்றிகளைக் காண்பீர்கள்.

தனுசு ராசி ஆரோக்கியம் :

தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மனமும் உடலும் அமைதியாக இருக்கும். ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைக்க மேலும் உதவும். சத்தான மற்றும் இயற்கை உணவு வகைகளை உண்ணுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கும்.

தனுசு ராசி மாணவர்கள் :

தனுசு ராசி மாணவர்கள் இந்த மாதம் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். படிப்பில் மட்டுமன்றி பிற கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். எனவே கவனத்தை சிதற விடாமல் படிப்பில் கவனம் செலுத்த படிப்பில் கூடுதல் நேரம் செலவு செய்யுங்கள். தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

சுப நாட்கள் : 1,9,10,13,14,27,28

அசுப நாட்கள் : 2,3,7,8,15,16,29,30,31

தனுசு ராசி பரிகாரம்:

ஸ்ரீ குருபகவான் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

ஸ்ரீ குருபகவான், சனி, ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

ஆலயங்களுக்கு நிதி மற்றும் ஆன்மீக பணி செய்தல். ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுதல்.

banner

Leave a Reply

Submit Comment