Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Rishabam

February 17, 2020 | Total Views : 1,463
Zoom In Zoom Out Print

ரிஷப ராசி பொதுப்பலன்கள்

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்களுக்கு சுமாரான பலன்கள் கிட்டும். எல்லா விஷயத்திலும் நீங்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தொழில் செய்யும் ரிஷப ராசி அன்பர்கள் தங்கள் தொழிலில் மிகுத்த கவனம் செலுத்த வேண்டும். பணிகள் அதிகமாக காணப்படும். இந்தச் சூழல் உங்களுக்கு மன அழுத்தம் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் பல பணிகள் வரும் காரணத்தால் நீங்கள் அஷ்டாவதானி போல (ஒரே நேரத்தில் எட்டு செயல்களை செய்வது) செயல்பட வேண்டியிருக்கும். எனவே நீங்கள் உங்கள் கவனம் சிதறாத வகையில் செயல்பட வேண்டும். அப்பொழுது உங்கள் புத்தி கூர்மை அடையும். உங்கள் ஆற்றல் வெளிப்படும். நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தால் எந்த சூழ்நிலையையும் ஜெயித்து விடுவீர்கள். குடும்ப வாழ்வைப் பொறுத்தவரை சில கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். அதிக பணிகள் காரணமாக நீங்கள் உங்கள் குடும்பத்திற்கென்று நேரம் ஒதுக்க முடியாத சூழல் இருக்கும். நேரம் தவறி உணவு உட்கொள்ள நேரும். அதன் காரணமாக உடல் அசதி மற்றும் சோர்வு ஏற்படும். அதனால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவு செய்ய நேரும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

ரிஷப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

ரிஷப ராசி காதலர்கள் தங்கள் காதலில் மோதல் காரணமாக தற்காலிக விரிசல் காண்பீர்கள். எனவே உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க இது உதவும். திருமணமான தம்பதியர் இடையே உறவு சாதாரணமாக இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினைகள் எழலாம். நீங்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷப ராசி நிதி :

இந்த மாதம் நிதி நிலையைப் பொறுத்தவரை ரிஷப ராசி அன்பர்கள் சுமாரான பலன்களைக் காண்பார்கள். என்ற போதும் உங்கள் வருமானம் உங்களுக்கு போதுமானதாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

ரிஷப ராசி வேலை :

பணி செய்யும் ரிஷப ராசி அன்பர்கள் வேலையில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிகளைச் செய்வார்கள். அதன் மூலம் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பல பணிகள் ஒரே நேரத்தில் மலை போல வந்து குவியும். இருந்தாலும் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு கடமை உணர்வுடன் உங்கள் பணிகளை செய்து முடிப்பீர்கள்.

ரிஷப ராசி தொழில் :

தொழில் செய்யும் ரிஷப ராசி அன்பர்களுக்கு இது ஒரு சுமாரான மாதமாக இருக்கும். எல்லா செயல்களிலும் நீங்கள் சாதாரண பலன்களையே காண்பீர்கள். நீங்கள் இந்த மாதம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குறைவான உழைப்பில் அதிக பலனை எதிர்பார்க்காதீர்கள். தொழில் விஷயத்தில் எந்தவிதமான அவசர முடிவையும் எடுக்காதீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

ரிஷப ராசி தொழில் வல்லுனர்கள் :

ரிஷப ராசியைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழில் முயற்சியில் சில தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்க வேண்டியிருக்கும். என்றாலும் தளரா நம்பிக்கையுடன் நீங்கள் செயல்பட வேண்டும். நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களை நீங்கள் திட்டமிட வேண்டும். விடா முயற்சி மூலம் நீங்கள் விரும்பும் பலன்களைப் பெற இந்த மாதம் உங்களுக்கு கை கொடுக்கும்.

ரிஷப ராசி ஆரோக்கியம் :

ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதிக வேலைகள் காரணமாக உங்கள் உடல் நலத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போக நேரிடலாம். சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டியிருக்கும் என்பதால் செரிமான பிரச்சினைகள் உண்டாகலாம். எனவே உங்கள் ஆரோக்கியம் மேம்பட நீங்கள் உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வது நல்லது.

ரிஷப ராசி மாணவர்கள் :

கல்வி பயிலும் ரிஷப ராசி மாணவ மாணவியர்கள் இந்த மாதம் அறிவுக் கூர்மை பளிச்சிடும் வகையில் செயல்படுவார்கள். கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனமான செயல்பாடு காரணமாக வெற்றியின் உச்சத்தை தொடுவீர்கள். நீங்கள் நண்பர்களுடன் நல்லுறவு வளர்த்துக் கொள்வீர்கள். ஆசிரியரின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

சுப தினங்கள் : 11,12,19,20,21,24,25, அசுப தினங்கள் : 1,13,14,17,18,27,28.

ரிஷப ராசி பரிகாரம்:

ஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ துர்க்கை வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சுக்கிரன், குரு, ராகு, கேது ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

தினமும் நாய்க்கு உணவு அளித்தல், செவ்வாய் மற்றும் வெள்ளி பாம்பு புற்றிற்க்கு பால் வார்த்தல்.

banner

Leave a Reply

Submit Comment