Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

துலாம் மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Thulam

February 17, 2020 | Total Views : 1,072
Zoom In Zoom Out Print

துலாம் ராசி பொதுப்பலன்கள் :

துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதம் என்று கூறலாம். இருந்த போதிலும் மாதத்தின் பிற்பகுதியில் சற்று மந்த நிலையை நீங்கள் சந்திப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் மாதமாக இருக்கும். குடும்ப உறவுகள் சாதகமாக இருக்கும். இளைய சகோதரர் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உங்கள் தந்தையின் உடல் நிலை முன்னேற்றம் காணும். நீங்கள் இந்த மாதம் உல்லாசப் பயணங்கள் செல்வீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் நன்மை பெறுவீர்கள். தொழில் துறையில் இருக்கும் துலாம் ராசி அன்பர்கள் இந்த மாதம் அதிக லாபம் சம்பாதிபீர்கள். பணி புரியும் துலாம் ராசி அன்பர்கள் உயர் பதவி பெறுவீர்கள். துலாம் ராசி காதலர்கள் தங்கள் காதல் உறவு திருமணத்தின் மூலம் பலமடையக் காண்பார்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

துலாம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

துலாம் ராசி காதலர்கள் இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையுடன் சிறந்த முறையில் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலம் சிறந்த பலனகளைப் பெறுவார்கள். திருமணமான தம்பதிகள் தங்களுக்குள் நல்லுறவு மேற்கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இல்லற வாழ்வு இனிமையாக இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு காணப்படும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

துலாம் ராசி நிதி :

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் நீங்கள் உங்கள் செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற செலவுகளை குறைப்பதன் மூலம் நீங்கள் உங்கள் கடனிலிருந்து விடுபட முடியும். உங்கள் நண்பர்களிடமிருந்து நீங்கள் உதவி பெறுவீர்கள். உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர்கள் உங்களுக்கு பண உதவி புரிவார்கள்.

துலாம் ராசி வேலை :

பணி செய்யும் துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றம் கிடைக்கும் மாதம் ஆகும். நீங்கள் எதிர் பார்க்கும் வகையில் உங்கள் பணியிடச் சூழல் அமையும். நீங்கள் சிறந்த முறையில் பணியாற்றுவீர்கள். உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களை தேடி வரும்.

துலாம் ராசி தொழில் :

தொழில் செய்யும் துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மனதில் தைரியம் நிரம்பி இருக்கும். அதே சமயத்தில் நீங்கள் சுதந்திர உணர்வுடன் செயல்படுவீர்கள். இதன் மூலம் நீங்கள் சிறப்பாக செயலாற்றி தொழிலில் வெற்றி காண்பீர்கள். இந்த மாதம் நீங்கள் எந்த வேலையை மேற்கொண்டாலும் அதில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் காண்பீர்கள். உங்கள் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பது நீங்கள் இன்னும் சிறப்பாக செயலாற்ற உதவும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

துலாம் ராசி தொழில் வல்லுநர் :

துலாம் ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் திறமைகளை நீங்கள் வெளிப்படுத்த உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். சமய சந்தர்ப்பங்களை அறிந்து அதற்கேற்ப உங்கள் திட்டங்களை நீங்கள் அமைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் நற்பலன்களைப் பெறலாம்.

துலாம் ராசி ஆரோக்கியம்:

துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பராமரிக்க நீங்கள் அவ்வப்பொழுது மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது. உணவு உட்கொள்வதில் நேரம் தவறாமை மற்றும் முறையான தூக்கம் உங்கள் ஆரோக்கியத்தைப் பேண உதவும். மேலும் தினமும் உடற் பயிற்சி மேற்கொள்வது உங்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

துலாம் ராசி மாணவர்கள் :

துலாம் ராசியைச் சார்ந்த மாணவ மாணவியர்கள் இந்த மாதம் கல்வியில் முன்னேற்றம் காண கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நீங்கள் பாடங்களை புரிந்து கொண்ட போதிலும் அவற்றை மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலம் உங்கள் நினைவாற்றல் பெருகும். அந்தப் பாடங்கள் சம்பந்தமான அறிவும் பெருகும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

சுப நாட்கள் : 4,5,6,9,10,22,23

அசுப நாட்கள் : 2,3,11,12,24,25,26,29,30,31

துலாம் ராசி பரிகாரம்:

ஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

சனி, குரு, ராகு, கேது ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.

பெற்றோர்களை நன்கு பராமரித்து அவர்களுடன் அன்புடன் இருத்தல். ஏழை, எளியோருக்கு உதவி மற்றும் அன்னதானம் செய்தல்.

banner

Leave a Reply

Submit Comment