சிம்ம ராசி பொதுப்பலன்கள் :
சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் செயல்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கும். நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். என்றாலும் அதற்கேற்ப நல்ல பலன்களையும் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய மாதம் இது. தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சில சமயங்களில் நீங்கள் சோதனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் இந்த மாதம் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நட்பும் நண்பர்களும் பெறுவீர்கள். அது உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நலம் பயப்பதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சீராக இருக்கும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
சிம்ம ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
சிம்ம ராசியைச் சேர்ந்த காதலர்களுக்கு இது மிகச் சிறந்த மாதம் என்று கூறலாம். உங்கள் காதல் தெய்வீகக் காதலாக திகழும் மாதம் இது. நீங்கள் காதலில் உண்மையாக இருப்பீர்கள். உங்கள் காதலில் அன்பு பொங்கி வழியும். உங்கள் காதல் உறவு திருமண உறவாக மாறும். திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். அதன் மூலம் உங்கள் திருமணம் விரைவில் கை கூடும்.
சிம்ம ராசி நிதி :
சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் பொருளாதார நிலை படிப்படியாக முன்னேறும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதன் மூலம் உங்கள் சேமிப்பும் பெருகும். நீங்கள் உங்கள் எதிர்கால நலன் கருதி பணத்தை சிறந்த முதலீட்டுத் திட்டங்களில் சேமிப்பீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
சிம்ம ராசி வேலை :
பணி புரியும் சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். உங்கள் உடன் பணி புரிபவர்கள் மற்றும் உங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் நீங்கள் அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களுக்கு அளிக்கப்படும் பணிகளை நீங்கள் அவ்வப்பொழுது முடித்து பணிகள் எதுவும் நிலுவையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் புதிய தொழில் நுட்பங்களை கற்று அதில் சிறந்த அனுபவம் பெறுவீர்கள்.
சிம்ம ராசி தொழில் :
தொழில் புரியும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம் வெற்றி காண்பது உங்கள் கையில் தான் அடங்கி உள்ளது. உங்கள் திறமைக்கேற்ப நீங்கள் பலனைக் காண்பீர்கள். நீங்கள் மிகவும் தைரியமாக செயல்படுவீர்கள். அதே சமயம் சுதந்திரமாகவும் செயல்படுவீர்கள். உங்களின் சுதந்திர மனப்பான்மை மற்றும் தைரியம் உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தரும். நீங்கள் மதிப்பும் மரியாதையும் பெறுவதன் மூலம் உங்கள் கௌரவத்தையும் நிலை நாட்டுவீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
சிம்ம ராசி தொழில் வல்லுநர்கள் :
சிம்ம ராசியைச் சார்ந்த தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதம் என்று கூறலாம். என்றாலும் நீங்கள் சில தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்க வேண்டிய சந்த்ரப்பங்களையும் எதிர்கொள்ள நேரும். உங்கள் முன்னேற்றம் அதனால் பாதிக்கப்படாது. புதிய வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்விற்கு காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் பதவி உயர்வு கிட்டும். உங்களுடைய செயல்திறன் மூலம் உங்களுக்கு நன்மையான பலன்கள் கிடைக்கும்.
சிம்ம ராசி ஆரோக்கியம் :
சிம்ம ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். எனவே உங்கள் உடல் நலனில் நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினை சிறியதாக இருந்தாலும் நீங்கள் உடனடியாக அக்கறை செலுத்த வேண்டும். அலட்சியம் காட்டுதல் கூடாது. உடலில் எதிர்ப்பு சக்தி குறையாமல் காத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம். உங்கள் ஆற்றலும் சுறுசுறுப்பும் கூடும்.
சிம்ம ராசி மாணவர்கள் :
மாணவர்களைப் பொறுத்தவரையில், இது ஒரு சாதாரண காலமாக இருக்கும். நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உடன் படிக்கும் சக நண்பர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாதம் கல்வியைப் பொறுத்தவரை உங்களுக்கு சீரான மாதமாக இருக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்
சுப நாட்கள் : 1,4,5,6,17,18,27,28
அசுப நாட்கள் : 7,8,19,20,21,24,25,26
சிம்ம ராசி பரிகாரம்:
சிவபெருமான் மற்றும் ஆதிகேசவன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
சூரியன், ராகு, கேது ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
துறவிகளுக்கு உதவி மற்றும் தானம் செய்தல், பாம்பு புற்றிற்க்கு பால் வார்த்தல்.

Leave a Reply