Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மீனம் மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Meenam

February 17, 2020 | Total Views : 1,008
Zoom In Zoom Out Print

மீன ராசி பொதுப்பலன்கள் :

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் உங்கள் மனதில் ஆன்மீக எண்ணங்களை வளர்த்துக் கொள்வீர்கள். ஆன்மீகப் பயணங்களும் மேற்கொள்வீர்கள். ஆன்மீக தலைவர்கள் அல்லது குருமார்களின் சந்திப்பு உங்களுக்கு இந்த மாதம் கிட்டும். அவர்களின் ஆசியும் வழிகாட்டுதலும் உங்கள் வாழ்க்கைக்கு சிறந்த வழி காட்டும். பொதுவாக இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலிலும் நீங்கள் சாதாரண பலன்களையே காணமுடியும். அண்டை அயலார் மற்றும் சமூகத்துடன் நீங்கள் சிறந்த முறையில் உறவாடுவீர்கள். இந்த மாதம் நீங்கள் விருந்து மற்றும் விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.அவர்களுடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். தொழில் செய்யும் மீன ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் தங்களின் மதிப்பை நிரூபிக்க சிறந்த வாய்ப்பினை அளிக்கும் மாதமாக இருக்கும். பணியில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் இந்த மாதம் ஊதிய உயர்வு பெறுவார்கள். இந்த மாதம் நீங்கள் உங்கள் தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முறையான உணவு மற்றும் முறையான தூக்கம் மேற்கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காத்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

மீன ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

மீன ராசி காதலர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். இந்த மாதம் தாங்கள் மேற்கொள்ளும் திருமண முயற்சியில் வெற்றி காண்பார்கள். திருமணமான தம்பதியர் நல்லிணக்க உறவு மேற்கொள்வார்கள். உங்கள் துணையுடன் நீங்கள் உல்லாசப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் மீன ராசி அன்பர்கள் தங்கள் திருமணம் விரைவில் கை கூடி வரக் காண்பார்கள்.

மீன ராசி நிதி :

மீன ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் பொருளாதார நிலையில் படிப்படியான முன்னேற்றம் காணலாம். பொதுவாக பொருளாதார நிலை சாதாரணமாக இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் உபரிப் பணத்தை சேமிக்க முயற்சி கொள்வீர்கள். உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றியும் காண்பீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

மீன ராசி வேலை :

பணியில் இருக்கும் மீன ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வார்கள். இதனால் உங்களின் செய்லாற்றல் அதிகரிக்கும். உங்களின் இந்த ஆற்றல் நீங்கள் வெற்றி பெறவும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்களை நீங்கள் இந்த மாதம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். மொத்தத்தில் இந்த மாதம் நீங்கள் வேலையில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

மீன ராசி தொழில் :

மீன ராசி அன்பர்களின் தைரியமான அணுகு முறையும் சுதந்திரமான இயல்பும் உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த மாதம் வியாபாரத்தில் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகள் மூலம் நல்ல வாய்ப்புகளைப் பெரும் வாய்ப்பு உள்ளது. என்றாலும் அதனை உடனடியாக எதிர்பார்க்க இயலாது. மெதுவாகத்தான் முன்னேற்றங்கள் வந்து சேரும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

மீன ராசி தொழில் வல்லுநர் :

மீன ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் தங்கள் தொழிலில் எதிர் பார்த்த பலன்களை பெறலாம். நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவும் சிறப்பாக இருக்கும். என்ற போதிலும் வேலையில் தாமதங்கள் காணப்படும். அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். உங்கள் முயற்சிகளை தொடருங்கள். நிச்ச்யம் வெற்றி பெறுவீர்கள்.

மீன ராசி ஆரோக்கியம் :

மீன ராசி அன்பர்கள் வேலை வேலை என்று அதில் மூழ்கி உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முடியாமல் போகலாம். ஆனால் இந்த மாதம், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காக்க மருத்துவரின் அறிவுரைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மேலும் சத்தான உணவை தவறாமல் உட்கொள்ள வேண்டும். எளிய உடற் பயிற்சிகளை மேற் கொள்வதன் மூலம் நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

மீன ராசி மாணவர்கள் :

மீன ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் சுமாரான பலன்கள் கிட்டும் மாதமாகத் தான் இருக்கும். அதிக நம்பிக்கை காரணமாக நீங்கள் சில நேரங்களில் அலட்சியப் போக்கை வளர்த்துக் கொள்வீர்கள். இதனால் உங்கள் கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளது. படிப்பில் பின் தங்க நேரலாம் கவனம் சிதறாமல் படித்தால் படிப்பில் முன்னேறலாம்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்

சுபதினங்கள்: 7,8,15,19,20,22,23

அசுபதினங்கள்: 9,10,13,14,15,16

மீன ராசி பரிகாரம்:

ஸ்ரீ குருபகவான் மற்றும் சித்தர்கள் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

ஸ்ரீ சனி, குரு, ராகு, கேது பகவான் ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

மாணவர்களுக்கு கல்விக்கு உதவுதல். ஆலயங்களுக்கு ஆன்மீக பணி செய்தல்.

banner

Leave a Reply

Submit Comment