Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

மேஷம் மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Mesham

February 17, 2020 | Total Views : 1,023
Zoom In Zoom Out Print

மேஷ ராசி பொதுபலன்கள் :

மேஷ ராசி அன்பர்களே ! இந்த மாதம் நீங்கள் மிகச் சிறந்த வெற்றி காண்பீர்கள். அதற்கு உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் சிறந்த காரணமாக இருக்கும். உங்கள் உடன் பிறந்த சகோதரர்கள் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்கள் மூலம் நீங்கள் நன்மை பெறுவீர்கள். தாயின் அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். பணி செய்யும் மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் பணியில் உயர்வு காண்பார்கள். உயர் பதவிக்கு காத்திருப்பவர்கள் தங்கள் விருப்பம் நிறைவேறக் காண்பார்கள். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறுவீர்கள். மேஷ ராசி அன்பர்கள் பெண்கள் மூலம் லாபம் காண்பீர்கள். இந்த மாதம் நீங்களே உங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ள காரணமாக இருப்பீர்கள். எனவே கவனம் மற்றும் எச்சரிக்கை தேவை. இந்த மாதம் உங்கள் மனதில் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். எனவே நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். செய்தொழிலில் நீங்கள் சிறந்த லாபம் காணும் மாதம் இது. இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

 

மேஷ ராசி காதல் மற்றும் திருமணம் :

இந்த மாதம் மேஷ ராசி காதலர்கள் சிறந்த பலன்களைக் காண்பார்கள். என்றாலும் திருமணம் குறித்த முடிவுகளை நீங்கள் கவனமாக எடுக்க வேண்டும். திருமணமான தம்பதியர் இணக்கமான நல்லுறவு மேற்கொள்வார்கள். கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் அதிகரிக்கக் காண்பார்கள். நல்ல கருத்து ஒற்றுமை காணப்படும். எனவே இருவருக்குள்ளும் நல்ல புரிதல் காணப்படும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேஷ ராசி நிதி :

மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் நிதி நிலையில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். இந்த மாதம் நீங்கள் சிறந்த பொருளாதார முன்னேற்றம் பெறுவீர்கள். குறிப்பாக வண்டி வாகனம் தொழில் அழகு சாதனை பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற தொழிலில் இருப்பவர்கள் அதிக லாபம் காண்பார்கள்.

மேஷ ராசி வேலை :

இந்த மாதம் வேலை அல்லது பணி புரியும் மேஷ ராசி அன்பர்கள் தங்கள் பணியில் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். நீங்கள் செய்யும் பணி உங்கள் மனதிற்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். நீங்கள் பணியிடத்தில் நேர்மை கடைபிடிப்பீர்கள். உங்கள் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமை மற்றும் மதிப்பை நிரூபிக்க இந்த மாதம் உங்களுக்கு சிறந்த வாய்ப்பு அளிக்கும் மாதமாக இருக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேஷ ராசி தொழில் :

இந்த மாதம் நீங்கள் உங்கள் பூர்வ புண்ணிய கர்மாக்களை அனுபவிக்கும் மாதம் ஆகும். எனவே இந்த மாதம் உங்கள் தொழில் மிகவும் சிறப்பாக நடக்கும். என்றாலும் இடையில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து வந்து விலகும். வயதானவர்களுக்கு நீங்கள் அன்னதானம் கொடுப்பதன் மூலம் உங்கள் நிதி நிலை மேன்மை அடையும்.

மேஷ ராசி தொழில் வல்லுனர்களுக்கு :

தொழில் வல்லுனர்களுக்கு இது மிகுந்த முன்னேற்றம் அளிக்கும் மாதமாக இருக்கும். உங்கள் திறமையை பயன்படுத்தி நீங்கள் தொழிலில் முன்னேற்றம் காணும் மாதம் இது ஆகும். நீங்கள் கவனமுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றுவீர்கள். சக பணியாளர்களுடன் நட்பு பாராட்டுங்கள். அது உங்களுக்கு பல நன்மைகளை பெற்றுத் தரும்.

மேஷ ராசி ஆரோக்கியம் :

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் உடல் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். உங்களுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். என்றாலும் அது தொடர்ந்து நீடிக்காது. விரைவில் நலம் பெறுவீர்கள். பழங்கள், பச்சைக் காய்கறிகள் மற்றும் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ற சத்தான உணவுகள் போன்றவை, உங்களுக்கு நல்ல உற்சாகத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மேஷ ராசி மாணவர்கள் :

மேஷ ராசி மாணவர்கள் இந்த மாதம் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். ஞாபக மறதி காரணமாக நீங்கள் படிப்பில் சிறந்து விளங்க இயலாமல் போகலாம். நீங்கள் படித்ததை மறந்து விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. என்றாலும் நீங்கள் கவனம் செலுத்தி படித்தால் உங்கள் படிப்பு சீராக இருக்கும். நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டு குடும்பம் மற்றும் நட்பு வட்டம் என இரண்டு இடங்களிலும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் செயல்படுவீர்கள்.

சுப நாட்கள் : 9,10,17,18,22,23

அசுப நாட்கள் : 11,12,15,16,24,25,26

மேஷ ராசி பரிகாரம்:

ஸ்ரீ முருகப்பெருமான் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

செவ்வாய், ராகு, கேது பகவானுக்கு ஹோமம் மற்றும் பூஜை செய்து வழிபடுதல்.

நாற்கால் பிராணிகளுக்கு உணவு அளித்தல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் அளித்தல்.

banner

Leave a Reply

Submit Comment