AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2020 | March Month Rasi Palan 2020 Kumbam

February 17, 2020 | Total Views : 1,151
Zoom In Zoom Out Print

கும்ப ராசி பொதுப்பலன்கள் :

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமான மாதம் என்றே கூறலாம். என்றாலும் நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகவும் இது இருக்கும். உங்கள் கவனம் சிதறினால் உங்கள் முயற்சிகளுக்கு நீங்கள் நற்பலன் காண்பது அரிது. எனவே கவனம் சிதறாமல் செயல்பட முயற்சி மேற்கொள்ளுங்கள். தொழிலைப் பொறுத்தவரை உங்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும். பொருளாதாரவகையிலும் உங்களுக்கு இது சிறந்த மாதமாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார் போல செலவுகளும் காணப்படும். உங்கள் பணத்தை நீங்கள் புதிய தொழில்களை செய்ய முதலீடு செய்வீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் சில உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இந்த மாதம் நீங்கள் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். மேலும் தொலை தூரங்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். பயணத்தின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

கும்ப ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

கும்ப ராசி காதலர்களுக்கு இந்த மாதம் சாதாரண பலன் தரும் மாதமாக இருக்கும். உங்கள் காதல் துணையை நீங்கள் கரம் பிடித்து வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ள விரும்புவீர்கள். உங்கள் உணர்வுகளை அவர்களும் புரிந்து கொண்டு உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள். திருமணமான தம்பதியர் குடும்ப ஒற்றுமை காக்கவும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும் சிறிது பொறுமை காக்க வேண்டும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கும்ப ராசி நிதி :

கும்ப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பொருளாதார நிலை மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும். உங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வகையில் உங்கள் வருமானமும் அமையும். மொத்தத்தில் இந்த மாதம் உங்கள் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசி வேலை :

பணி செய்யும் கும்ப ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் பணியில் நிலையான முன்னேற்றம் காண்பது மிகவும் கடினம். பல்வேறு காரணங்களால் நீங்கள் பணியிடத்திலும் பணியிலும் சில சிக்கல்களை சந்திக்க நேரும். பொறுமை கடலினும் பெரிது என்பதை கவனத்தில் கொண்டு இப்பொழுது நீங்கள் பொறுமை காக்க வேண்டும். இது வெறும் தற்கால பிரச்சினை தான் என்பதை கருத்தில் கொண்டு கடந்து செல்லுங்கள். உங்கள் உடன் பணி புரிபவர்களுடன் அனுசரித்தும் உங்கள் கீழ் பணி புரிபவர்களிடம் அரவனைத்தும் நடத்திச் செல்லுங்கள்.

கும்ப ராசி தொழில் :

இந்த மாதம் உங்கள் தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கக் காண்பீர்கள். மேல் அதிகாரிகளுடன் நல்லிணக்க உறவு மேற்கொள்ளுங்கள். அவர்களுடன் ஒத்துழைத்து செய்லாற்றினால் உங்கள் செயல் திறன் மேலும் அதிகரிக்கும். நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் உடனுக்குடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

கும்ப ராசி தொழில் வல்லுநர் :

கும்ப ராசி தொழில் வல்லுனர்களுக்கு இந்த மாதம் மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் உங்கள் தொழிலில் ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவீர்கள். அதன் மூலம் நீங்கள் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். இவ்வளவு காலம் நீங்கள் இழந்த அனைத்தையும் நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். இந்த மாதம் பாராட்டும் பதவி உயர்வும் உங்களை நாடி வரும். மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கும்ப ராசி ஆரோக்கியம் :

கும்ப ராசி அன்பர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் சாதாரணமான, சுமாரான மாதம் என்றே கூற இயலும் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் நீங்கள் சிறப்பாக செயல்பட இயலும். எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். தியானம் அல்லது யோகா செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும்.

கும்ப ராசி மாணவர்கள் :

கும்ப ராசி மாணவர்கள் இந்த மாதம் படிப்பில் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல் ஆரோக்கியம் சிற்பபாக இருந்தால் தான் நீங்கள் கல்வியில் கவனம் செலுத்த இயலும். இந்த மாதம் உங்களுக்கு நீர் சம்பந்தப்பட்ட வியாதியினால் பாதிப்பு ஏற்படும். எனவே நீங்கள் உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் படிப்பில் சிறந்த கவனம் செலுத்த இயலும். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

சுப நாட்கள் : 4,5,6,13,14,17,18,

அசுப நாட்கள் : 7,8,11,12,20,21

கும்ப ராசி பரிகாரம்:

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ காலபைரவர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

ஸ்ரீ சனிபகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.

மாற்று திறனாளிகள் மற்றும் ஏழை, எளியோருக்கு உதவி செய்தல், அண்ணதானம் அளித்தல்.

banner

Leave a Reply

Submit Comment